Monday, June 13, 2011

கம்யூனிசம் தமிழகத்தில் வாழ்கிறதா? வீழ்கிறதா?

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களின் முடிவில் இடதுசாரிகள் மேற்கு வங்கத்திலும்,கேரளாவிலும் ஆட்சியை இழக்க நேரிட்டது. இங்கு தமிழகத்தில் இடதுசாரிகள் பங்கு வகித்த அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் இங்கு நிறைய இடங்களை கைப்பற்ற முடிந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு மே.வ.,கேரளாவில் பலம் குறைந்தது போலவும்,தமிழகத்தில் பலம் குறையாமல் இருப்பது போலவும் ஒரு மாயத்தோற்றம் நிலவுகிறது.என்னுடைய பார்வையில், கேரளாவில்  அச்சுதானந்தனின் தனிப்பட்ட செல்வாக்கினால் கிடைத்த இடங்களைப்  பார்க்கில் ஒரு வகையில் இடதுசாரிகளுக்கு வெற்றியே. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியின் எழுச்சி,மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் திரிணாமுல் இருப்பது,நந்திகிராம்,சிங்கூர் பிரச்சனைகளில் புத்ததேவின் அலட்சியம்,தொடர்ச்சியாக 35 ஆண்டுகள் பதவியில் இருந்ததால் ஏற்பட்ட சலிப்பும் தோல்விக்கு காரணங்களாக விளங்குகிறது. இந்த நிலை இப்படியே தொடரும் என எதிர்பார்க்க முடியாது.ஏனென்றால் இந்த தோல்விகளில் ஒரு செய்தி இருக்கிறது. கட்சியை விட அச்சுதானந்தன் பலமானவராக மாறி இருக்கிறார். ஜோதிபாசுவின் இடத்தை புத்ததேவால் நிரப்ப முடியவில்லை. ஆகையால் இந்த  இரண்டு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர இ.எம்.எஸ்.,ஜோதிபாசு,அச்சுதானந்தன் மாதிரியான  ஆளுமைகளும் கட்சியின் அமைப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்  மட்டுமே சாத்தியமாகும் என கருதுகிறேன்.

இந்த இரண்டு மாநிலங்களை விட தமிழகத்தில் இடதுசாரிகளின் நிலைமை பிற தேசிய வலதுசாரி பா.ஜ.க,,காங்கிரஸ் கட்சிகளின் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டதாக நான் கணிக்கிறேன்.இந்த தேர்தலின் வெற்றியில் மற்றவர்களை விட விஜயகாந்தின் பங்களிப்பும்,கருணாநிதி எதிர்ப்புமே அ.தி.மு.க. வுக்கு வெற்றியைத் தேடித் தந்து உள்ளது. இதுவே இடதுசாரிகளின் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்கலாம். தொண்டர்களே இல்லாமல் ராகுல் காந்தியின் இளம்படை  நடைப்பயணம் மேற்கொள்கிறது,தேர்தலில் நின்று மரண  அடி வாங்குகிறது. தமிழகத்தின் நிலைமை சரிவரத் தெரியாமல் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் ராகுல் காந்திக்கு இருக்கும் ஆர்வம் கூட இடதுசாரிகளுக்கு தமிழகத்தின் மேல் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. தேசியத்தையும்,திராவிடத்தையும் ஒன்றாக முரண்பாடாக கட்சிப் பெயரில் வைத்து இருந்தாலும் கட்சி தொடங்கி ஆறு ஆண்டுகளில் மாநிலக் கட்சிக்கு உரிய வளர்ச்சியை விஜயகாந்த் பெற்று வருவது தி.மு.க. வினருக்கு  மட்டுமல்ல பா.ஜ.க,,காங்கிரஸ்,இடதுசாரிகள்,ம.தி.மு.க. மற்றும் சாதிக் கட்சிகள் உட்பட அனைவருக்கும் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியை எழுப்பி உள்ளது. கருணாநிதி  தன்  குடும்பத்தை மட்டும் பேணி காப்பதில் முனைப்பாக இருப்பதால் கட்சியின் எதிர்காலம் ஸ்டாலினின் அடுத்தகட்ட  செயல்பாடுகளிலே இருக்கிறது. தி.மு.க.,அ.தி.மு.க வுக்கு மாற்றாக கட்சி தொடங்கிய வை.கோ. அங்கும்,இங்கும் மாறி மாறி இன்று திக்குதிசை தெரியாத காட்டில் நிற்கிறார்.

இந்த சூழலில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் தோழர்களே? ஜெயலலிதா உங்களுக்கு விருப்பமில்லாத தொகுதிகளை கொடுத்தவுடன் விஜயகாந்துடன் ஓடிப்போயி பேசுகிறீர்கள். கருணாநிதிக்கும்,ஜெயலலிதாவுக்கும் இடையில் ஓடிக் கொண்டு இருந்த நீங்கள் இனிமேல் ஓடி தஞ்சம் அடைய இன்னொருவர் இருக்கிறார் அவ்வளவே. ஒருநாள் விஜய் பின்னாடி கூட நீங்கள் ஓடக்கூடும்.மாநிலங்களுக்கு  இடையேயான பிரச்சனைகளில் தேசியக் கட்சியாக செயல்படும் நீங்கள் காங்கிரஸ்,பா,.ஜ.க., வை விட குழப்பமான முடிவுகளையே எடுக்கிறீர்கள். காவேரி நதி நீர் விவகாரத்தில்  நீங்கள் காட்டும்  ஆர்வம் துளி கூட முல்லைப் பெரியாறு, சேலம் ரயில்வே கோட்ட  விவகாரத்தில்  காட்டவே இல்லை. உலகின் எந்த மூலையில் ஒரு சிறுபான்மை இனம் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் தாங்கள் கூர்க்கா லேண்ட், தமிழ் ஈழ விவகாரங்களில் முதலாளித்துவ நாடுகள் போல நடப்பது ஏன்? இராக்,லிபியா,ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்காவால் தாக்கப்படும் நாடுகளுக்கு வழியும் உங்கள் கண்ணீர் திபத்,அருணாச்சல் விசயங்களில் சீனாவை எதிர்த்து குரல் கொடுக்காது ஏன்? ரஷ்யாவின் ஆதிக்கத்தால் அருகில் உள்ள நாடுகள் பாதிக்கப்படும்போது நீங்கள் எந்த எதிர்வினையும் கொடுப்பதில்லையே ஏன்?தீக்கதிர் பத்திரிக்கையில் கேரளா அரசின் விளம்பரங்கள்,செயல்பாடுகள் எல்லாம் வருகிறதே,கேரளத்தில் தமிழகத்தின் நிகழ்வுகளை தெரிவிக்கும் விதமாக ஏதேனும் செய்கிறீர்களா?அச்சுதானந்தன் போன்றவர்களுக்கு ஆதரவு அளிக்காமல் பினராயி விஜயன்,கொடியேறி பாலகிருஷ்ணன் போன்றவர்களுக்காக பிரகாஷ் காரத் வக்காலத்து வாங்குகிறார்? அப்போது அது சர்வாதிகார தலைமைப் பண்பு இல்லையா?

இன்றும் பணம்,பதவி போன்ற சுகங்களுக்கு அலையாமல் கட்சிக்காக,கொள்கைக்காக வாழும்,பாடுபடும்  தோழர்கள் இடதுசாரிகளில் மட்டுமே காண முடிகிறது. உள்ளூர் பிரச்சனைகள் முதல் சர்வதேச பிரச்சனைகள் வரை  குரல் கொடுக்கும் முதல் ஆளாக கம்யூனிஸ்ட்கள்  இருக்கிறார்கள். தொழிலாளர்கள்,ஒடுக்கப்பட்ட,பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதில் முதன்மையாக  இருக்கிறார்கள். தஞ்சையில் நிலவுடமை கொடுமைகளுக்கு எதிராக போராடியதும், இன்றளவும் தொழிலாள வர்க்கத்துக்கு போராடுவதிலும்,சாதிய முரண்பாடுகளை களைவதிலும் முன் நிற்கிறது. உள்ளூர் பண்பாடு,கலாச்சாரம்,கலை,இலக்கியம் இவற்றை வளர்ப்பதில் உண்மையான அக்கறை கொண்டு உள்ளது.

அதே நேரத்தில் விருதுக்காக அனுப்பப்படும் திரைப்படங்கள்,தீவிர இலக்கியவாதிகளின் படைப்புகள் எப்படி பெரும்பான்மையினரை  சென்று அடைவது இல்லையோ அதே நிலைமை இடதுசாரி கட்சிகளுக்கும் இங்கு நேர்கிறது. எப்போதும் ஒதுக்கப்படும்,புறக்கணிக்கப்படும் மக்களுக்காக மட்டும் போராடிக் கொண்டு இருந்தால் பெரும்பான்மை சமூகம் அப்படியே தான் இருக்கும். நீங்கள் போராட ஒரு கூட்டம் வேண்டும்,அந்த வாக்கு வங்கி உங்களுக்கு வேண்டும்.

இடதுசாரிகள் பக்கம் இருந்தால் பணம் இல்லாமல் தங்கள் தேவையை தீர்த்து வைப்பார்கள் என்ற அளவில் மட்டுமே தொழிற் சங்கங்களில்  இருக்கும் அரசுப் பணியாளர்கள் (போக்குவரத்து,மின்துறை உட்பட) எண்ணம் இருப்பதை நான் கண்டு இருக்கிறேன்.மேலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்,கடை அடைப்பு போன்ற நிகழ்வுகளைப்  பார்க்கும் சரிபாதி மக்கள் 'கம்யூனிஸ்ட்கள் இப்படித் தான்" என்று  புலம்புவதைப் பார்க்க முடிகிறது. முடிவில் மத,சாதி ரீதியான கட்சிகளுக்கு எப்படி சரிபாதி எதிர்ப்பு இருக்கிறதோ அப்படியே உங்களுக்கும் வந்து விடுகிறது.
சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்கவே போராட வேண்டும்.அதே அடுக்கில் நிறுத்தி வைக்க அல்ல.அனைத்து தரப்பட்ட மக்களுக்குமான கட்சி என்ற நம்பகத்தன்மையை கொண்டு வருவதிலே வெற்றியின் சூட்சமம் இருக்கிறது. சமூகநீதி,சமத்துவம் பேசிக் கொண்டே இருந்தால் மட்டும் வந்து விடாது.

இந்த நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற அன்னா கசாரேக்களும்,ராம் தேவ்களும் உருவாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின்  பின்னால் செல்லும் மக்களை காணும் போது வலதுசாரிகள் மட்டுமல்ல,இடதுசாரிகளும் இந்த நாட்டை வழி நடத்த லாயக்கில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டதாக கருத வேண்டி இருக்கிறது.

நரேந்திர மோடியை வைத்து பா.ஜ.க. பிரச்சாரம் செய்யும் போது நீங்கள் ஏன்  உங்களிடம் உள்ள நல்ல  ஆளுமைகளை முன்னிறுத்தக் கூடாது? ரஷ்யாவில் கூட புடின் என்னும் சர்வாதிகார வல்லமை கொண்டவரே ஆட்சி செய்கிறார்,கம்யூனிச  கொள்கை மட்டும் கொண்டு அல்ல.இது ஒரு வகையில் பிடரேல் காஸ்ட்ரோவுக்கு கூட பொருந்தும் என நான் நினைக்கிறேன். கொள்கைகளுக்கு  மட்டும் முன்னுரிமை கொடுக்காமல்  ஜோதிபாசு,அச்சுதானந்தன் மாதிரியான  தனிநபர்களையும்  நிறுத்தலாமே? பிறரை இது மாதிரி ஆட்சி செய்யுங்கள் என்று வலியுறுத்தும் நீங்கள் ஏன் ஆட்சிப் பொறுப்புக்கு வர முயலக்கூடாது ? திராவிடக்  கட்சிகள், காங்கிரசை  கீழே தள்ளி எந்திரிக்க விடாமல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது போல் நீங்களும் வரலாமல்லவா? 

கால மாற்றத்திற்கு ஏற்றவாறு சிறிதும் சமரசமின்றி,சுய பரிசோதனை இன்றி நாங்கள் இப்படியே தான் தமிழகத்தில்  அரசியல் செய்வோம் என்றால் பன்னும்,டீயும் சாப்பிட்டு விட்டு உண்டியலைக் குலுக்கிக்  கொண்டே இருங்கள்,தோழர்களே !

 "கம்யூனிசம் பிடிக்கும்,கம்யூனிஸ்ட்களைப் பிடிக்காது" என்று பொதுவாக சொல்லப்படுவது போல் எனக்குச்  சொல்லத் தெரியவில்லை.செம்மலர் செல்வன் என்ற என்னுடைய இயற்பெயரை ஒரு கம்யூனிசத் தோழர் ஒருவரே எனக்கு சூட்டினார். எவ்வித சார்புமின்றி மற்ற திராவிடக்  கட்சிகள் மீதோ,தேசிய கட்சிகள் வைக்க முடியாத சூழலில் சராசரியான,மேம்போக்கான,ஆய்வுகளற்ற,ஆழமற்ற ஒரு அரசியல் பார்வையில் இந்த கருத்துகளை முன் வைக்கிறேன்.

4 comments:

விடுதலை said...

நன்பர் செம்மலர் செல்வன் அவர்களுக்கு தங்கள் பதிவின் ஒட்டுமொத்த நோக்கம்.
இடதுசாரிகள் ஏன் வளரவில்லை? இருக்கும் இடங்களையும் இழந்துவருகிறார்கள்.
மாற்று அரசியலை முன்னேடுத்து செல்லும் தலைமைப் பாத்திரத்தை தமிழகத்தில் ஏன் கையில் எடுக்க வில்லை ?
என்ற கேள்விகள் இடதுசாரிகளின் மீதான நம்பிக்கையின் காரணமாக இருப்பதாகவே தெரிகிறது.

அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் இரண்டு முறை தடை செய்யப்பட்ட இயக்கம்.

இந்த கட்சியல் ஒரு உறுப்பினர்ராக வேண்டும் என்றால் குறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகும்.

மாத மாதம் கட்சிக்கு லெவி கட்ட வேண்டும் (அதாவது மற்ற கட்சிக் சென்றால் பணம் கிடைக்கும் இங்கு நீங்கள்தான் கொடுக்கவேண்டும்)

"தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்டும் ஓரே கட்சி இது மட்டுமே"

கட்சி உறுப்பினர் தொடர்ந்து ஒவ்வொரு கட்டத்திலும் (இந்த மோசமான சமூக சுழலில்)தன்னை நிருப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் நேர்மையை கடைப்பிடிக்கவேண்டும் எந்த வித சலுகைலையும் பெறமுடியாது.

உண்டி குலுக்கித்தான் கட்சியை நடத்தவேண்டும் அப்போதுதான் நெஞ்சை உயர்த்தி முதலாளித்துவத்திற்கு ஏதிராக உரத்துக் குரல் கொடுக்க முடியும்.(எல்லா அரசியல் கட்சிகளுக்கம் முதலாளிகள் கோடிக்கணக்கில் நிதி அளிக்கிறார்கள் அல்லது அவர்களே கட்சியை நடத்துகிறார்கள்,திமுக,காங்கிரஸ்,தேமுதிக, ஆதிமுக இப்படி......)

கேரளாவின் நதி நீர் பிரச்சனையில் நீண்ட விளக்கும் தரமுடியவில்லை ஆனால் கேராளாவில் இருந்து மொத்தம் எந்த நதிகள் தமிழகத்திற்கு வருகிறது அவற்றில் தமிழக கம்யூனிஸ்ட்களின் பங்கு அளப்பரியது..... நான் புதுவையை சேர்ந்தவன் எனது மாநிலத்திற்கு தமிழக அரசு காவேரி நீர் வருவதில் உரிய பங்கு தராமல் ஏமாற்றுவதும், நான் அடிப்படையில் விவசாயி எங்கள் நிலத்திற்கு மேல் பகுதியில் உள்ள விவசாயி எனக்கு தண்ணீர் விடுதில்லை இதை சுருக்கமாக கூறுகிறேன் நான் தமிழன், ஒரே மாநிலம் ஒரே கிராமம் அப்படி இருக்கும் போது அவர் அவர் நலன் முக்கியமாக்கப்படுகிறது.

தாங்கள் அடையாள அரசியல் நடத்த சொல்வதும் அதன் மீது கட்சி நிறுத்த சொல்வதும் சரியல்ல என்பதே கட்சியின் நிலைப்பாடு மேலும அது நீடிக்காது என்பது வரலாறு கற்றுததரும் பாடம்.

"இடதுசாரிகள் இந்தியாவில் தேர்தலில் நின்று மட்டுமே மாற்றங்களை கொண்டுவரமுடியும் என்று நம்புமும் முட்டாள்கள் இல்ல" தற்போதைய தேர்தல் பங்கேற்பு ஒரு அரசியல் நிலைப்பாடு இதுவும் மாறும்.

உண்மையான மக்கள் ஜனநாயக புரட்சியை முன்னேடுப்பதில் தொடர்நது இடதுசாரிகள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் உங்கள் கனவும் எங்கள் கனவும் ஒரு புள்ளியில் சந்திக்கும் காலம் நிச்சயம் உண்டு.

செம்மலர் செல்வன் said...

//மாற்று அரசியலை முன்னேடுத்து செல்லும் தலைமைப் பாத்திரத்தை தமிழகத்தில் ஏன் கையில் எடுக்க வில்லை ?
என்ற கேள்விகள் இடதுசாரிகளின் மீதான நம்பிக்கையின் காரணமாக இருப்பதாகவே தெரிகிறது.//

//உண்மையான மக்கள் ஜனநாயக புரட்சியை முன்னேடுப்பதில் தொடர்நது இடதுசாரிகள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் உங்கள் கனவும் எங்கள் கனவும் ஒரு புள்ளியில் சந்திக்கும் காலம் நிச்சயம் உண்டு.//

தங்களின் விரிவான விளக்கத்துக்கும்,புரிதலுக்கும் நன்றி. நன்றி,விடுதலை.

gaetannehaasch said...

edge titanium - titanium-arts.com
The graphite edge of titanium edc the 토토사이트 Tritanium is dental implants the tectonic shape titanium max of a piece. This is not hard titanium connecting rod to understand because the Tritanium is a graphite metal. It is also known as a