Tuesday, April 26, 2011

மதுரை மாட்டுத்தாவணி - தூத்துக்குடி / வைகோ

வைகோ மற்றும் தூத்துக்குடி பகுதிகளை சேர்ந்தவர்களின் உணர்ச்சிவசப்படுதலுக்கும்,கோபத்திற்கும் இதுநாள் வரை காரணங்களை தேடிக்கொண்டு இருந்தேன். மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தூத்துக்குடி வரை NH45B சாலையில் பேருந்தில் பயணிக்கும்போது ஓரளவுக்கு அதன் காரணங்களை அறிய முடிந்தது.

முள் காடுகள், பொட்டல் நிலங்கள், ஆங்காங்கே தென்படும் வீடுகள் என
மாட்டுத்தாவணியில் இருந்து தூத்துக்குடி வரை சாலையின் இரு பக்கமும் பார்க்கும் போது பாலைவனத்தில் தான் பயணிக்கிறோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அவ்வப்போது வீசும் காற்று கூட தகிக்கிறது. தரிசு நிலங்கள் மேம்பாடுகளுக்கு அரசாங்கம் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. சில இடங்களில் வேப்ப மரங்களை நட்டு வைத்து இருப்பதை காண முடிந்தது.

இந்த மக்களின் வாழ்வாதாரம் என்னவாக இருக்கும்,எப்படி இந்த கரிசல் பூமியில் வாழ்கிறார்கள் என நினைக்கும் போது வியப்போடு வேதனையும் ஏற்படுகிறது. தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களில் நான்காவது இடத்தை தூத்துக்குடி மாவட்டம் பெற்று இருக்கிறது. இந்த கல்வி அறிவைக் கொண்டு அங்கு பிழைக்க வழி இல்லாமல் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.


இலவசம், கவர்ச்சி திட்டங்கள்,விவசாய நிலங்களில் பொருளாதார மண்டலங்கள், சென்னையை மையப்படுத்தியே தொழிற்சாலைகள் கொண்டு வரும் அரசாங்கம் தூத்துக்குடி,விருதுநகர்,ராமநா
தபுரம், சிவகங்கை மாவட்டங்கள் பாலைவனம் ஆவதை எப்படி கண்மூடி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என தெரியவில்லை. இதற்கும் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன்,கீதா ஜீவன் என அமைச்சர்கள் இருக்கும் மாவட்டங்கள் இவை. அனைத்துக்கும் மேலாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வைகோவும் விளாத்திகுளத்தில் தான் இருக்கிறார்.

ஈழத் தமிழர், தமிழ் இனத்துக்காக போராடி இன்று ஒரு மூலையில் ஒடுங்கி இருக்கும் வைகோ தென் மாவட்டங்களை மையப்படுத்தி இங்கு இருக்கும் பிரச்சனைகளை முன் வைத்து அரசியல் செய்தால் தனக்கென ஒரு இடத்தை அவர் பிடிக்கலாம்.

சென்னை மாநகரம் வேறு பெருத்துக் கொண்டே போகிறது.
ஒரு வேளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திருச்சிக்கு ஏதேனும் செய்ய வாய்ப்பு இருக்கிறது. கோவை,மதுரைக்கு எதுவும் செய்யக் கூடாது என தீர்மானம் எடுத்தவர்கள் போல ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் கர்நாடகாவில் பெல்காமை இரண்டாம் தலைநகராக அறிவித்ததை போல இங்கும் செய்து,சில கட்டமைப்பு வசதிகளை செய்தால் இப்பகுதி மக்கள் பிழைத்துப் போவர்.

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு,ஏதாவது பண்ணனும் பாஸ்!

ஒன்று + இரண்டு = முட்டை

"மாப்ள, என்னோட லேப்டாப்பை இந்த கடையில் வேலை பார்க்க கொடுத்து இருக்கேன். வாங்கிட்டு அப்புறம் சாப்பிட போயிறலாம்."


"மணி அண்ணன் இல்லைங்க, அவர் நாலு மணிக்கு மேல தான் வருவார்" என்று கடையில் இருந்த பையன் சொல்வதை கேட்டு வெற்றி கடுப்புடன் வெளியே வந்தான்.


"பொம்பளை முந்தானையை பிடிச்சவன் உருப்பட மாட்டான்" அப்படிங்கிறது சத்தியம் மாப்ளை. இந்த
மணி இருக்கானே. இவன் என் கூடத் தான் ஒண்ணா வேலை பார்த்தான்.சரியான மண்டை,நல்லா ப்ரோகிராம் எழுதுவான்.


அவனோட அத்தை பொண்ணு ஒருத்தி இருக்கா.
அவளுக்கு அப்பா,அம்மா இல்லாததால் அண்ணி கூட தங்கி
அவ காலேஜ் படிச்சுகிட்டு இருந்தா . அவளோட அண்ணன் வெளிநாட்டில இருக்கிறான். மணியும், ரேணுகாவும் லவ் பண்ணுனாங்க. லவ்ன்னா சொன்னா அது லவ் இல்லை,அவளுக்கு அரிப்பு, வயசுக்கோளாறு. இவனை நல்லா யூஸ் பண்ணிகிட்டா. இவனுக்கு சென்னை,பெங்களூர்னு எல்லா பக்கமும் நல்ல வேலை கிடைத்தது. இவ தான் அவனை வெளியே விடவே இல்லை.


அவ படிச்சு முடிச்ச கொஞ்ச நாளில் அவளுக்கு பெங்களூரில் வேலை கிடைத்து விட்டது. இவனையும் அங்கே வரச் சொல்லி ஒரே தொந்தரவு. இவன் ஒரு பத்து வருசமா இங்க கோயம்புத்தூர்லேயே குப்பை கொட்டி விட்டதால் உடனே பெங்களூர் போக முடியல. அவ மட்டும் மாசத்துக்கு ஒரு ரெண்டு வாட்டி வந்து இவனை உசுப்பேத்தி விட்டு போவா.ஒரே வீட்டில இருக்கிறதால ரேணுகாவோட அண்ணிக்கு இந்த விஷயம் தெரிந்தே இருந்தது. ரேணுகா பெங்களூர் போனதும்,புருஷன் வெளிநாட்டில் இருப்பதும்,தினமும் பால் குடிச்ச பூனையான மணியும் தனியாக இருப்பதும் அவளுக்கு வசதியா போயி விட்டது. இவனை அண்ணி அவ வலையில் இழுத்து போட்டுட்டா. இவனாலும் மீற முடியல.

இப்போ ஒரு பிள்ளை வேற பிறந்து இருக்கு,அவ அண்ணிக்கு. அது ஏறக்குறைய இவன் சாயலிலே இருக்கு,மாப்ள. ரேணுகா கிட்ட மணியை விட்டுத் தர முடியாதுன்னு அண்ணிக்காரி சண்டை போட்டு விட்டா. அவளும் இப்போ தனியா பெங்களூரில் அழுதுகிட்டு இருக்கா. அவளுக்கும் இப்போ என்ன பண்றதுன்னே தெரியல.அண்ணன் கிட்ட சொன்னா,தன்னோட வண்டவாளமும் கப்பலேறிடும்னு அமைதியா இருக்கா. மணியும் ரேணுகாவோட அண்ணிக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் ரேணுகாவைத் தவிர்க்கிறான்.

மணியோட அப்பா,அம்மா கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்றாங்க.இவன் பிடி கொடுக்காம அலையுறான். இப்படி எத்தனை நாள் தான் இவன் பொழப்பு ஓடுமோ?
மணி நல்ல பையன்,மாப்ள. பாரு,இவளுக ரெண்டு பேர் பொச்சு அரிப்புக்காக ஒருத்தன் வாழ்க்கையை சீரழிச்சு விட்டாளுக. நமக்கெல்லாம் பிள்ளை குட்டிகனு பயம் இருக்கு. ஆனா பார், அவங்க வாழ்க்கையும் தான் ஓடுது.
கடைசியா ஒண்ணு சொல்கிறேன்,மாப்ள. "துணிமணினா இஸ்திரி போடணும், குஞ்சாமணினா ஸ்திரியை போடணும்" அவ்வளவு தான் வாழ்க்கை.

Tuesday, April 19, 2011

இது பிணங்களின் கதை - பப்புவா நியூ கினியா

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் இருக்கும் நாடான பாப்புவா நியூ கினியாவில் வேலை பார்த்து கொண்டு இருந்த ஒரு நாளில் என்னுடைய சொந்த ஊரில் நண்பர் ஒருவர் இறந்து விட்டார்.வேலைக்கு போகும் போது வண்டியை ஒட்டுபவனிடம் என்றும்போல இயல்பாக பேச முடியவில்லை.

அவன், "ஏன் செல்வன், இப்படி அமைதியா இருக்க? உடம்பு சரி இல்லையா? இல்லை,எதுவும் பிரச்சனையா?" என்று கேட்டான். அவனிடம் நடந்த விசயத்தை கூறினேன்.

"என்ன செல்வன், மனசை ரொம்ப குழப்பிக் கொள்ளாதே. இதெல்லாம் நம்ம கையில் இல்லை.நேற்று இரவு கூட என்னுடைய தம்பி இறந்து விட்டான். நம்ம இப்போ வேலைக்கு போற வழியில் வீட்டுல என்னோட பொண்டாட்டி கிட்ட காசு கொடுத்து அவளை என்னோட தம்பி வீட்டுக்கு போகச் சொல்லணும்."

"ரோய், என்ன சொல்ற? உன்னோட தம்பி இறந்திட்டானா? என்னாச்சு,எப்படி நடந்தது? நீ போகலையா?".

"செல்வன், உங்களுக்குத் தான் தெரியுமே. இங்க ஒரு கம்பெனியில் வேலை கிடைக்கிறதே பெரிசு. எனக்கு இன்னும் மூணு நாள் கழிச்சு தான் ஒய்வு நாள் வருது.தம்பி நேத்து காட்டுக்குள்ள விறகு வெட்ட போயி இருக்கான். அங்க ஒரு பப்புவாயன் ப்ளாக் பாம்பு இருக்கு. அது கடிச்சிடிச்சு. ரொம்ப விஷம் அது. அவன் விதி முடிந்தது."

"ச்சே.பாவம். என்னா வாழ்க்கை இது. அப்போ நீ உன் தம்பி பிணத்தை பார்க்க முடியாதுல? இதுக்கு கூட இல்லாமா எதுக்குப்பா வேலை பாக்கிற?".

"இல்லை,செல்வன். என்னோட தம்பி இங்க இருந்து 300 கிலோமீட்டர் தூரத்துல இருக்கான். இங்க மலை,காடுகள்ள போக்குவரத்து வசதி கிடையாது. எல்லாரும் போயி பார்க்க குறைஞ்சது பத்து நாள் ஆகும்,சொந்தக்காரங்க எல்லாரும் வருகிற வரைக்கும் பிணத்தை புதைக்க மாட்டோம்."

"பத்து நாளா? பரவாயில்லையே. எங்க நாட்டில செத்த அன்னைக்கே புதைத்து இல்லாட்டி எரித்து விடுவோம். அதுக்கு மேல விட்டா நாறிப் போயிடும்."

"என்னங்க செல்வன். இப்படி ஒரு மனுஷனுக்கு மரியாதை இல்லாம. சரி விடுங்க, அது உங்க ஊர் வழக்கம். போன வருஷம் எங்க சொந்தக்காரங்க வீட்டுல ஒருத்தர் இறந்திட்டார். அவரோட பையன் அமெரிக்காவில இருந்த இங்க வர ஒரு மாசம் ஆச்சு.அதுவரைக்கும் பிணத்தை பதப்படுத்தி வைத்து இருந்தோம்."

"நல்ல விஷயம் தான். ஆனா எங்க நாட்டில மக்கள் தொகை அதிகம்.இப்படிலாம் வச்சுகிட்டு இருக்க முடியாது.போக்குவரத்து வசதியும் நல்லா இருக்கு.என்னா ஒரு கஷ்டம், இது வெறும் சடங்கு போல் ஆகி விட்டது.இறந்த மனிதனை நினைத்துப் பார்க்கத் தான் ஆளும் இல்லை.,நேரமும் இல்லை."

இதற்கிடையில் அவன் வீடு வந்து விடவும் பொண்டாட்டியிடம் காசை கொடுத்து விட்டு வந்து பயணத்தைத் தொடர்ந்தோம். இடையில் ஒரு குகை வந்தது.

"செல்வன், இந்த குகை எனக்கு ரொம்ப விசேசமானது. எப்படி தெரியுமா? என்னுடைய முன்னோர்கள் இந்த குகையில் தான் வசித்து வந்தார்கள். உள்ளே திரியும் பாம்பு,பல்லி,பூச்சிகளை பிடித்து தின்பர். பயத்தால் வெளியே வர மாட்டார்கள். இறந்த பின்னர் அவர்கள் உடலை எடுத்து ஒரு மரத்தின் கிளையில் தொங்க விட்டு விடுவார்கள். ஒரு பத்து,பதினைந்து நாட்கள் கழித்து வெறும் எலும்புகளும் ,மண்டை ஓடும் கிடைக்கும். அந்த மண்டை ஓட்டை எடுத்து வைத்து எங்கள் முன்னோர்களை குல தெய்வமாக வழிபடுவோம். எல்லாமே நன்றாக போயிக் கொண்டு இருந்தது, இந்த ஆஸ்திரேலியாக்காரன் வரும் வரை. அவன் இந்த நாட்டில் புகுந்த பின்னர் பைபளின் இரண்டாம் வழிபாட்டின்படி இறந்தவர்களை வழிபடுவது குற்றமாக கருதப்பட்டது. 'இறந்தவர்கள் சாத்தானின் பிள்ளைகள்' எனவும் கூறினார். இவ்வாறு கூறி இங்கு இருந்த எங்கள் முன்னோர்களின் மண்டை ஓடுகளை அவர்கள் எடுத்து கொண்டு போயி அவர்கள் நாட்டில் வைத்து உள்ளார்கள். மக்களுக்கும் இங்கு கிறிஸ்தவ மதத்தை பரப்பி இந்த பழக்கத்தை ஒழித்து விட்டனர். ஆனால் இன்றும் கூட ஒரு சிலர் அரசாங்கத்துக்கு தெரியாமல் மண்டை ஓட்டை பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் நர மாமிசமும் சாப்பிடுகிறார்கள். உயிரோடுக்கு இருக்கும் இந்த கறுப்பு மனிதனுக்கே மதிப்பு இல்லை என்கிற போது என்னோட முப்பாட்டன்களுக்கு இந்த வெள்ளைக்கார நாய்களிடம் என்னமரியாதை கிடைக்கும்?.சரி விடுங்க. என்னோட கதைய உங்ககிட்ட சொல்லி உங்களை இன்னும் கஷ்டமாக்கிட்டேன் போல.உங்க ஊர்ல இந்து மதத்துல பழைய காலத்துல என்ன பண்ணுவாங்க?."

"தெரியல,ரோய். எங்க ஊர்லயும் குல தெய்வ வழிபாடு இருக்கு. ஆயிரக்கணக்கான தெய்வங்களும் இந்து மதத்தில் உண்டு. ஆனால் கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்கு வந்த பின்னர் இந்து மதத்திலும் ஒற்றைக் கடவுள் வழிபாடு என்று போயிக் கொண்டு இருக்கிறது. நான் அறிந்த வரையில் பிணங்களை புதைத்தும்,எரித்தும் தான் வந்து இருக்கிறோம். எகிப்தில் மம்மி செய்து வைத்து இருக்கிறார்கள். இந்தியாவிலும் இது போன்று எதுவும் வழக்கம் இருந்து இருக்கலாம். ஒரு வேளை புதைப்பது என்ற விசயமே இந்தியாவில் இருந்து தான் வந்து இருக்கும் என நான் நினைக்கிறேன்.ஆனாலும் தெளிவாகத் தெரியவில்லை."


"இன்னைக்கி செத்தா, அடுத்த நாள் புதைச்சு ,அதுக்கு அடுத்த நாளைக்கு பால்" என்று நான் சிறுவனாக இருக்கும் போது இருந்த வழக்கம் இப்போது செத்த அன்னைக்கே பாலை ஊத்தி வேலையை முடித்து விடுகிறோம் . மின்சாரத்தில் எரிக்கிறது வந்துவேலை இன்னும் எளிதாக போயி விட்டது.

பிணத்தின் கதை பழங்காலத்தில் என்னவாக இருந்து இருக்கும் ?".

Saturday, April 16, 2011

நாடி ஜோதிடம் / குறி ஜோதிடம்

கடவுள் என்ற வார்த்தையிலே நம்பிக்கை இல்லாதவனாகவும், ஜாதகம்,ஜோதிடம் போன்றவற்றில் இதுவரை ஆர்வம் காட்டாமலும் இருந்து வந்து இருக்கிறேன்.

இரண்டு நாளைக்கு முன்னர் நண்பன் ஒருவனுக்கு அவனுடைய தொழில், எதிர்காலம் பார்க்க நாடி ஜோதிடம் பார்க்கச் சென்றோம். போன இடத்தில் எனக்கும் நாடி பார்ப்பது என்று முடிவானது.

முதலில் நாடி சோதிடர், என்னுடைய கைரேகையை ஒரு வெள்ளைத் தாளில் பதிக்கச் சொன்னார். "சரி,தம்பி.நீங்க ஒரு பத்து நிமிஷம் இருங்க. நான் ஓலைச்சுவடியை தேடி எடுக்கணும்." என்று கூறிச் சென்றவர் ஒரு முப்பது நிமிடம் கழித்துத் தான் வந்தார்.

"நான் சொல்றதுக்கு சரியா இருந்தா சரி,தப்பா இருந்தா தப்புனு சொல்லுங்க" என்று கூறி விட்டு ஓலைச் சுவடியை எடுத்து மந்திரம் வாசிப்பது போல் வாசித்து ஒவ்வொரு கேள்விகளாக கேட்டார். பெயர்,அப்பா பெயர்,அம்மா பெயர்,வயது, பிறந்த நாள்,கிழமை என்று நாம் சரி என்று சொல்லும்வரை கூறிக்கொண்டே சென்றார். அந்த ஓலைச் சுவடி கட்டு தீரும் வரை என்னுடையது எதுவும் பொருந்தவில்லை. "சரிங்க. உங்க சுவடி இந்த கட்டுல இல்லை. வேற கட்டு எடுத்து வரேன்.பொறுங்க என்று சொல்லி விட்டு ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தார். இந்த கட்டிலும் என்னை பற்றிய தகவல்கள் எதுவும் ஒத்து வரவில்லை.நேரம் ஆறரைக்கு மேல் ஆகி விட்டது. என் உடன் வந்தவன், "சில நேரம் ஒரு சில பேருக்கு சுவடி கிடைக்காதுயா. உன்னோட பேரு வேற வித்தியாசமானது. அந்த காலத்துல இருந்து இருக்குமா ,என்னமோ? " என ஏற்கனவே அவநம்பிக்கையில் இருந்த என்னை மேலும் நோக விட்டான்.

சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தவர்,2 ,3 சுவடிக்கு அடுத்து என்னுடைய பெயர்,அப்பா பெயர்,அம்மா பெயர்,ஊர்,வயது என சரியாக வரிசையில் சொல்ல ஆரம்பித்தார். என்னால் 'சரி' என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. ஜோதிடரும் இப்போது நம்பிக்கை வந்தவர் போல "தகவல் சரி தான ,அப்போ பொதுப் பலன் எழுத ஆரம்பித்து விடலாம்" என்று சொல்லிக்கொண்டே உற்சாகமாக நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

அப்போது பொற்கால ஆட்சியின் சாதனையான மின்சாரத் தடை வந்ததால் எழுதுவது தடைபட்டது. நான்,ஜோதிடரிடம்" என் பெயருக்கு ஓலைச் சுவடி இருக்காதுன்னு நினைச்சேன். கிறிஸ்தவ ஆளுகளுக்கு எல்லாம் இருக்குமா? எப்படிங்க இதெல்லாம்?" என்று கேட்டேன்.

"தம்பி. இதெல்லாம் 500 ,1000 வருசங்களுக்கு முன்னர் ஞானிகள் எழுதி வைத்துப் போனது. உங்க பெயர் தமிழ்ப் பெயர் தானே. அதுனால எளிது தான். கிறிஸ்தவ பெயர் என்ன,வெள்ளைக்காரர்களுக்கு எல்லாம் எங்க அண்ணன் பார்க்கிறார். உச்சரிப்பு முறையில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். இங்கு இருந்து நிறைய ஒலைச் சுவடிகளை வெள்ளைக்காரன் எடுத்து போயிட்டான். "வானியல் ஜோதிடம்,அறிவியல் ஜோதிடம்" எல்லாம் இதைப் பார்த்து தான் அவன் ஆராய்ச்சியில இறங்குகிறான். பவர் வரட்டும். உங்க பெயர் சுவடியில இருக்கிறத காட்டுறேன்" என்று சொன்னார். இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போதே மின்சாரம் வந்து விட்டது.

என்னை கூப்பிட்டு என்னுடைய பெயர்,அப்பா,அம்மா பெயர், ஊர் என என் தகவல்கள் எழுதப்பட்டு இருந்ததை காண்பித்தார். என்னால் அதைப் பார்த்து வாய் பேச முடியாமல் மெய் மறந்து நின்று விட்டேன். பொதுப்பலன் எழுதி விட்டு,அப்படியே திருமண காண்டமும் சேர்த்து எழுதி கொடுங்க என்று கேட்டேன்.

ஒரு அரை மணி நேரம் விடாமல் எழுதிக்கொண்டே இருந்தார். எழுதி முடித்து விட்ட பின்னர், "வாசிக்க தொடங்கலாமா?" என்று சொல்லி விட்டு குரு நாதர்,கடவுள் மந்திரங்களை சொல்லி விட்டு பலன்களை படிக்க ஆரம்பித்தார். அவர் கூறிய பொதுப்பலன்கள் எல்லாமே மிகச் சரியாக இருந்தது. திருமண காண்டம் வாசிக்கும் போது , இதுவரை ஏற்பட்ட திருமணத்தடைகளையும், காரணங்களையும் கூறினார். வரப்போகும் பெண்ணை பற்றி அவர் கூறியது தான் மிக ஆச்சரியமாக இருந்தது. பெண் பெயர் எத்தனை எழுத்து,குடும்பம்,உருவம்,சொத்து,குறைகள்,இடம்,ஊர்,மச்சம் என ஒவ்வொன்றாக கூறும் போது என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் தக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் கோவையில் படித்து கொண்டு இருக்கும் போது, ஒரு நாள் நாங்கள் தங்கி இருந்த விடுதியின் சமையல்காரர்,"செம்மலர்,எப்படி இருக்க" என்று கேட்டு விட்டு என் பதிலுக்கு கூட காத்து இருக்காமல் அதுவரை என் வாழ்வில் நடந்தவற்றையும்,குடும்பத்தைப் பற்றியும் ஒன்று விடாமல் கூறினார். இதை பக்கத்தில் இருந்த கேட்டு கொண்டு இருந்த நண்பர்கள் எங்களுக்கும் சொல்லுங்க என்று கேட்டதற்கு "குறி எல்லாம் அப்படி சொல்ல முடியாது. இன்று அவனுக்கு சொல்ல வேணும் என்று எழுதி இருக்கு" சொல்லி அங்கு நிற்காமல் கிளம்பி விட்டார். இதற்கும் நான் அவரிடம் தங்கி இருந்த இரண்டு வருடங்களில் ஒரு நாள் கூட பேசியது இல்லை.


கைரேகையை பார்த்து ஒருவர் பலன் சொல்வதும், பிறந்த நேரம் (ராசி,நட்சத்திரம்) பார்த்து சொல்வதும் எப்படி ஒருவருக்கு பொருந்திப் போகிறது? இந்த ஜோதிடம்,ஜாதகம் எல்லாம் உண்மை தானா? இதை நம்ப ஆரம்பித்தால் அவர்கள் சொல்லும் இறைவனுக்கு பரிகாரம் செய்ய வேண்டும். அப்பொழுது கடவுள் இருக்கிறாரா? அடுத்து நமக்கு என்ன நடக்கும் என நம்மாலே அறிய முடியாத போது சிலர் எதிர்கால பலன்களை கணிப்பது எப்படி?
செவ்வாய் கிரகம் இருக்கிறதை அந்த காலத்திலேயே எப்படி கண்டுபிடித்து இருக்கிறார்கள்?

எதை ந்மபுவது? எதை விடுவது?

Tuesday, April 12, 2011

God's own country;But Devil's own people

நேற்று "வைரம்" என்ற மலையாளப் படத்தை கண்டு கொண்டு இருந்தேன். நம்ம பசுபதியும் அதில் நடித்து இருக்கிறார். ஒரு காட்சியில் நகைச்சுவை நடிகர் அசோகன், God's own country;But Devil's own people (தெய்வத்தின்ட சொந்தம் நாடு, ஆனால் சாத்தானின் மக்கள்) என்று கேரளாவைப் பற்றி கூறுவார். அவர்களைப் பற்றிய இந்த சுய விமர்சனம் மலையாளிகளுக்கு எந்த பாதிப்பை உண்டாக்கி இருக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு இந்த வசனம் மகிழ்ச்சியை அளிக்காமல் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. தமிழ்ப் படங்களில் இது போன்று சுய விமர்சனம் நாம் நினைத்தே பார்க்க முடியாது. மதம்,சாதி,இனம்,ஊர் போன்றவை திரைப்படங்களில் எங்காவது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் (அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட) போராட்டம் வெடிக்கும் அளவுக்குத் தான் நாம் இருக்கிறோம்.

பெரியார் (தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி) , ஜெயகாந்தன் (நாய் தான் எப்போதும் தன்னை நக்கிக் கொண்டு இருக்கும் - தமிழ் மொழி பற்றி கூறியது ) ,சாரு நிவேதிதிதா (எப்போதும் தமிழனை திட்டுவது ) ,கருணாநிதி (எம்.ஜி.ஆர் காலங்களில் தனக்கு ஓட்டு போடாதவர்களை திட்டும்போது) என இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழை,தமிழனை திட்டியதற்கு எதிர்ப்புகள் தான் அதிகம் இருந்தது.

இந்த வகையில் மலையாளிகள் (நான் பழகியவரை) கொஞ்சம் பரந்த மனப்பான்மை, நகைச்சுவை உணர்வோடு தான் எதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். இதன் பொருட்டே அவர்களால் எங்கும் கொடி நாட்ட முடிகிறது.

எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் ஒரு மனநிலையில் தான் நாம் இருக்கிறோம் என நான் நினைக்கிறேன்.இதற்கும் திராவிட கழகங்களின் தன்மானம்,சுயமரியாதை கோட்பாடுகள் காரணமா என தெரியவில்லை. தன்னைப் பற்றி சுய பரிசோதனை செய்யாமல் பிறரைப் பற்றி அவதூறும், காழ்ப்பும் ,விமர்சனமும் செய்வது இதன் நீட்சியாகவும் இருக்க கூடும்.

இங்கே நான் சூழ்ச்சி, சுயநலம்,எதார்த்தம், வெள்ளந்தி பற்றி குறிப்பிட விரும்பவில்லை...

Tuesday, April 5, 2011

அன்றும் - இன்றும்

அவனுக்கு இந்த ஒரு வார காலமாகவே ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேலே இருமல் தாள முடியாத அளவுக்கு வந்து கொண்டு இருந்தது . மருந்து,மாத்திரை சாப்பிட்டும் புண்ணியம் இல்லை. காரணம் பிடிபடாமல் இருந்ததால் மண்டைகுத்தல் வேறு.
கொஞ்சவும், சீந்தவும் ஆள் இல்லாமல் வயல் வரப்புகளில் கிடந்த குழந்தையை அவள் ஏந்திக் கொள்வாள். கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகியும் புள்ளைபூச்சி இல்லாததால் வரும் குத்தல் பேச்சுகளை தாங்க முடியாமல் தோட்டத்துக்கு வருவதை வழக்கமாக்கி கொண்டாள். கேணி மேட்டுக்கரையில் அந்த பிள்ளையை உக்கார வைத்து குளிப்பாட்டி கற்றை,கற்றையாக இருக்கும் முடியை அள்ளி முடிந்து சடை பின்னி பொட்டு வைத்து விடுவாள். அந்த பிள்ளையும் தாயை விட அவளிடம் மிகவும் ஒட்டுதலாக இருந்தது. இன்னொருத்தியை தன் புருசனுக்கு கட்டிவைக்க போகிறார்கள் என அறிந்து அடைமழை பெய்த ஒரு நாளில் அந்த கேணியில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டாள்.

என்றும் அவளிடம் இருக்கும் அந்த பிள்ளை
பெருமழையால் அன்று வயக்காட்டு பக்கம் வந்து இருக்கவில்லை. 'இந்த பிள்ளையை பார்த்து இருந்தா இப்படி பண்ணி இருக்க மாட்டாளே, பாவி மக' என புலம்பாதவர்கள் இல்லை. அது நடந்து பின் நெடு நாட்களாக தனியாக அந்த குழந்தை மட்டும் கேணி மேட்டுக்கரையில் அழுது கொண்டு இருந்தது.

அவனுக்கு இன்று சற்று இருமல் குறைந்தது போல இருந்தது. ஆனால் அதெல்லாம் சிறிது நேரம் தான், திடீரென யாரோ அவன் தலையில் ஏறி விளையாடுவது போல இருந்தது. பெரும் கூச்சலுடன் அழுகை சத்தமும் கேட்டது.பின் அழுகை நின்று ,மெல்லிய கேவலுடன் "தங்கமே, எப்படியா இருக்க? இததனை நாளா உன் தலை முடியை கோதிக்கொண்டே,உன்னோடு தான் நான் இருந்தேன். இப்போது உன் தலையில் முடி இல்லாமல் நான் என்ன செய்வேன்? அதான் உன் தலையில வந்து விளையாடுறேன். உன்னைய விட்டு எப்படி ராசா , நான் எங்க போயி இருக்க குடி இருக்க முடியும்? " .

கண் முழித்துப் பேச வாய் எடுததவனுக்கு எதிரோ, பக்கத்திலோ யாரும் இல்லை. கனவோ,என்னமோ என்று புலம்பிக்கொண்டே உறங்கி விட்டான்.

அதற்கு அடுத்த மூன்று நாட்களில்
காலையில் காபி கொடுக்க எழுப்பச் சென்ற அவன் தாய், தலை இல்லாத அவன் உடலை கண்டு போட்ட கூச்சலில் ஊரே அலறியது...

எழவு வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் , "அந்த நாயக்கர் அம்மாவுக்கு இன்று திவசம் கழிப்பதாகவும், இன்று அந்த அம்மா உயிரோட இருந்து இருந்தால் அறுபது வயசு " என யாரிடமோ சொல்லிக் கொண்டு இருப்பது அவர்கள் இருவருக்கும் தெளிவாக கேட்டது.