Friday, December 30, 2011

பேஸ்புக் புலம்பல்கள் @ 2011

1.  லவ் ஊத்திக்கிச்சுன்னா நமக்கு ஊத்திக் கொடுக்க நாலு பிரண்ட்ஸ் தான் வருவாங்க, ஆனா லவ்வரை தேத்திட்டா அந்த பிரண்ட்ஸ்களையே ஊத்தி மூடுறது தான் நம்மளோட கெட்ட பழக்கம்.
2. என். ராமகிருஷ்ணன் அவர்களின் "ரஷ்யப் புரட்சி - ஒரு புதிய தரிசனம்" என்ற நூலினை வாசித்தேன். நாம் விருப்பத்துடன் செய்யும் செயல்களை கூட நம்மூர் கம்யூனிஸ்ட்கள் வெறுக்க வைத்து விடுவார்கள் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் இருக்க முடியாது. எதற்கும் வாயை மூடிக் கொண்டு இருப்பது உத்தமம். பின்னொரு நாளில் இந்த நூலுக்கு சாகித்ய அகடமி விருது எதுவும் கிடைத்து விட்டால் எங்கே போய் என் மண்டையை முட்டிக் கொள்வதாம்?
3.தாய்,தந்தை,தம்பிக்கு செல்போன் வாங்கி கொடுத்தபோதெல்லாம் அன்பு,பாசம் (கடமையும் கூடவே) இருந்தது. அவளுக்கு வாங்கி கொடுக்கும்போது வெறும் குறுகுறுப்பு மட்டுமே தலை முதல் கால் வரை ஓடுகிறது. ♥
4. பார்க்கிற பொண்ணுகளை எல்லாம் லவ் பண்ண பயலுகளுக்கு தோணுற மாதிரி ஏன் இந்த நெஞ்சுல ஈவு,இரக்கமே இல்லாத பொண்ணுகளுக்கு மட்டும் அது மாதிரி தோண மாட்டேங்குது? # There is Something Basically Fundamentally Wrong, I Say #
 5.'இத்தனை வருசமா வேலை பார்த்து என்ன தான்டா சேர்த்து வச்சு இருக்க' என்று அக்கறையாக கேட்பவர்களிடம் 'உங்களைப் போன்ற ஆட்களின் சகவாசத்தைத் தான் சம்பாரித்து வைத்து இருக்கிறேன்' என்று உண்மையை கூறினாலும் அவர்கள் வெறும் சிரிப்பை மட்டுமே உதிர்ப்பதில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடைக்கிறது. :(
6.ஊரில் இருக்கும் ஒற்றை சண்டிப் பிராமணனை விரட்ட திராவிடம் பேசப் போய் கடைசியில் நாயர்,ரெட்டி,கவுடா,சேட் என எல்லாரும் இங்க வந்து ஜம்முன்னு உக்காந்துட்டாங்க. பிராமண ஆதிக்கமும் குறைந்த பாடு இல்லை.இப்போ இவிங்களை என்ன சொல்லி பத்தி விடுறதுன்னு தெரியலடா என்கிறான் நண்பணொருவன். இந்தியமயமானதின் விளைவு தான்டா இது என்றேன்,நான். ஆனால் இதில் பெரியாருக்கும்,எம்.ஜி.ஆர்.க்கும் பங்கு இருக்கிறதா என்ன?
7.ராஜ பாட்டை - விக்ரமுக்கு பதிலாய் வேறு ஆளைப் போட்டு இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் 'கதை-பண்ணி' இருந்தால் படம் வேண்டுமானால் தப்பி இருக்கலாம். ஆனால் தமிழ்ப் படங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார்கள் என்ற நமது நம்பிக்கையை தூண்டி விட்டு பின் அதிலே மண்ணை அள்ளிப் போடும் இயக்குநர்கள் வரிசையில் சுசீந்திரனும் இணைகிறார் என்பதே வருத்தமாய் இருக்கிறது:(
 
8. ஒரு எழுத்தாளனின் படைப்புகளை முழுக்க வாசிக்கவும், அவனுடைய சொற்பொழிவுகளை மிக மிக ஆர்வத்துடன் கேட்கவும் செய்கிற ஒரு வாசகன், அவன் ஒரு முட்டாள்;கபட நாடக வேஷதாரி, சந்தர்ப்பவாதி என்றெல்லாம் தெரியவரும்போது அவனுடைய நிலைமை எவ்வளவு பரிதாபகரமானது என்பதை முன் எப்போதும் நான் பார்த்திருக்கவில்லை ->>> சி.வி. பாலகிருஷ்ணனின் "திசை" நாவலில் இருந்து, மொழியாக்கம்: கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா, உயிர்மை வெளியீடு.
 9.பக்கத்து சீட்டுல 'கிளி' மாதிரி கூடவே ஒட்டி உக்காந்து இருக்கிற 'லவ்வர்' கூட கடலை வறுக்கிறதை விட்டுட்டு அந்த பஸ்ல எப்பவும் தவறாம போடுற "வேட்டைக்காரன்" படத்தை எக்கி எக்கி பார்க்கிற பயலுக இருக்கிற வரைக்கும் -.,,, :) என்று நினைத்துக் கொண்டேன்.
10. 'அவனை நம்பாதே,இவனை நம்பாதே' என்று மூச்சுக்கு முந்நூறு தடவை அடுத்தவனுக்கு புத்திமதி கூறுபவர்கள் முதலில் தங்களையாவது முழுமையாக நம்புவார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
11. வேறு வழி இல்லாமல் போனால் போகிறதென்று வேண்டா வெறுப்பாய் செய்யப்படும் செயல்கள் எல்லாம் இன்று அதிரடி,சாணக்கியம்,முதிர்ச்சி என்ற கணக்கில் சேர்க்கப்படுகையில் பற்றிக் கொண்டு வருகிறது. #ஜெ-சசி நட்பு / நாடகத்தில் இது எத்தனையாவது பாகம்?#
12. தன்னோட முதலுக்கு மோசம் வந்திடும்னு பயந்து போய் நம்மை அடகு வைக்க பார்க்கிறார் ப.சிதம்பரம். இவர் தான் நாட்டை காப்பாத்துற உள்துறை அமைச்சர் வேற. #சிரிக்கிறதா இல்லை அழுகிறதான்னு தான் தெரியலை:):(
13. டீக்கடைகளை நொறுக்கும் தமிழர் நம் வீர தீர செயல்கள் எந்த நானூற்றில் சேர்க்கப்படும் என தெரியவில்லை.# மக்களே,வன்முறையை விட புறக்கணிப்பே பெரிய ஆயுதம் 
14.தரணி முன் ஜென்மத்தில் பறவையா பிறந்து இருப்பார் போல. சிம்புவை பறக்க விட்டது மட்டுமில்லாம தின்னவேலி பாசையில வேற பேச வச்சு ஒரே நாஸ்தி. #படம் பார்த்து என் கிறுக்கு அதிகமானது தான் மிச்சம்#
 15.சிறகு ஓடியும் வரை பறவை அறிவதில்லை பறத்தலின் சுகத்தை;
நீ விலகும் வரை நானும் உணரவில்லை காதலின் இனிமையை.
16.நொடி நேர முடிவுகளுக்கு பின்னால் நீண்டு நெடியதான விருப்பு,வெறுப்புகள் இருந்தே தீரும்.
17. இதுவரை இனம்.மொழி என்றெல்லாம் வெறுமனே பேசி மட்டும் உயிர்களையும்,உணர்வுகளையும் பிறர் தின்ன கொடுத்தோம். இன்று நமது உரிமை,உடைமை என்ற அளவிலாவது ஒற்றுமையாக போராடி நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வோம். அதற்கு முல்லைப் பெரியாறு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.
18. "இவனே எனது முதலும்,முடிவுமான சிறந்த நண்பன்" என்று நான் சுட்டி காட்ட விரும்பும் ஒருவனே என்னை அவ்வாறு கூறி அறிமுகப்படுத்திய கணத்தில் இந்த உலகில் நான் வாழ்ந்து கொண்டு இருப்பதற்கான அர்த்தங்கள் அதிகமாக தொடங்கின. இன்றைய நாளில் பிறந்த நாள் கொண்டாடும் அவனுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
 19.எவரை எல்லாம் முற்றிலும் நிராகரிப்பமோ கடைசியில் அவர்களாவே நாம் மாறி விடும் தருணம் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. :(
 20. நீங்க வேலையைத் தவித்து வேற எதுவும் பேச மாட்டீங்களான்னு உடன் வேலை பார்த்த வேற்று நிறுவன நண்பர் கேட்டார்.
"வேலையே பார்க்காத வெட்டியான என்னையைப் பார்த்து எப்படி அந்த கேள்வியை கேட்கலாம்?" என்று நொந்து போய் மட்ட மத்தியான வெயிலில் மொக்கை போட்டதில் இனிமேல் தப்பித் தவறி கூட இந்த கேள்வியை யார்கிட்டயும் கேக்க மாட்டார்னு நினைக்கிறேன்.
# சுற்றி இருப்பவர்களை பேசியே சாகடிப்பது ஒரு வகை;
பேசியே தன்னை அழித்துக் கொள்பவர்கள் ஒரு வகை;
இரண்டிலுமே நான் சிக்கிக் கொண்டு இருப்பதே எனக்கு பெரும் பகை.#
21.  116 வருஷம் தண்ணி கொடுத்து இருக்கோம்,புதிய அணை கட்டின பின்னாடி மட்டும் கொடுக்காம போயிடுவோமான்னு அச்சு கேட்கிறார்.அதுக்கு உருப்படியாக ஒரு பதில் சொல்ல கூட துப்பு இல்லாத சி.பி.எம்.தோழர்கள், நடக்கும் அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாத நல்லவர்கள் போல நடிக்கும் 'ஆடுறா ராமா,ஆடுறா ஆடு' காங்கிரஸ்காரர்கள், இரு பக்கமும் பரபரப்பாக நெருப்பு பற்ற வைக்கும் சன் குழுமம், கண்டும் காணாமல் போகும் பாவனையில் இருக்கும் தி ஹிந்து போன்றவர்களின் அரசியல்,அதிகாரம்,தொழில் ரீதியான "நியாய" நடுநிலைமை வேடமாவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் "கற்றோரை கற்றோரே காமுறவர்" என்ற மொழிக்கேற்ப எக்கணமும் மலையாளிகளின் அறிவு,பெருந்தன்மை,வாசிப்பு அறிவு பற்றி புல்லரித்துப் போய் மரபு,ஆய்வு,நேரடி அனுபவ கட்டுரைகளை எழுதி குவித்து வரும் நமது தமிழ் இலக்கிய உலக "மாஸே" ஜெயமோகன் மற்றும் "ஆசான்" சாரு இதனைக் குறிச்சு ஒண்ணும் மிண்டாம இருக்கிறது தான் மனசிலாயிலா !
 22. கடல் கடந்தேன்,அவளை கடக்க முடியாமல்!
 23. நம்பிக்கை துரோகம் இழைத்து பிரிந்து சென்றவர்களை கூட ஒரு கணக்கில் சேர்த்து மறந்து விட முடிகிறது . உடன் இருந்து கொண்டே நம்பிக்கை இல்லாமல் நம்மை புறக்கணிப்பவர்களே மறக்கவும்,மன்னிக்கவும் முடியாத வடுவை ஏற்படுத்துகின்றனர்.
24. நம்ம கூடயே சின்னப் புள்ளைல இருந்து "எம் டிவி,எப் டிவி, கிரிக்கெட்,லேடிஸ் டென்னிஸ்" பார்த்துக்கிட்டு தின்ன சோத்து தட்டை அங்கிட்டு இங்கிட்டு எடுத்து வைக்காம இருந்த பயலுக எல்லாம் இன்னக்கி கல்யாணம் ஆன பின்னாடி சீரியலை விட "சமையல் கலை" நிகழ்ச்சி தான் அதிகம் பார்க்கிறானுக. ஏன்டா இப்படி ஆகிட்டீங்கன்னு கேட்டா "நோ,நோ... திஸ் இஸ் மை ஹாபி அண்ட் பாஷன். சோ நீயும் பழகிக்கடா,செம்மலர். உனக்கும் உபயோகப்படும்"ன்னு சொல்லி பீதியை கிளப்புறானுக. # சுடுதண்ணி காய வைக்கவே சூடுபட்ட அனுபவம் நிறைய இருக்கு, மகாஜனங்களே:( #
 
 25. வெகுஜன ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்பி மாற்றுக் கருத்துக்கு சற்றும் இடம் தராமல் அதிலே தொங்கி கொண்டு இருக்கும் நமது தமிழ் பொதுபுத்திக்கு மலையாளிகளும் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவர்களுடனான அண்மைய உரையாடல்களில் உணர்ந்தேன்.
எழுத்து,பேச்சு மூலம் நிறுவ துடிக்கும் ஒவ்வொன்றிலும் நிறைவில் வெறுப்பும்,வேதனையும் மட்டுமே மிஞ்சுகிறது. இதன் விளைவால் எழும் மன ரீதியான உளைச்சலை கடப்பதை விட ஒருவனை ஒருவனை உடல்ரீதியாக தாக்கிக் கொள்வது எவ்வளவோ மேல் என்ற எண்ணம் தீவிரமாக மனதில் ஓட தொடங்கி இருக்கிறது. #முல்லைப் பெரியாறு புதிய அணை #
 26. ஒரு படம் பார்த்தா அது நம்ம மண்டைய குத்தணும்,குடையணும்,தூங்க விடாம இம்சையைக் கொடுக்கணும்ன்னு நினைப்பேன். படத்தின் காட்சி அமைப்புகள்,வசனங்கள் மூலம் அந்த அனுபவத்தை ஓரளவுக்கேனும் அளித்த இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி. # மயக்கம் என்ன #
27.  "தொலைத்தவைகளை தேடுவதும்,இருப்பதை தொலைப்பதுமாய் கரைகிறது என் வாழ்க்கை" என சமரசங்களுடனான சமரில் தோற்றுப் போய் சாலை ஓரத்தில் விழுந்து கிடந்த ஒருவனை காண நேர்ந்ததில் இவ்வுலகம் தட்டை வடிவினால் ஆனது என்று நம்பத் தொடங்கி இருக்கிறேன். #VanSeSe#
28.  நான் என்னுள்ளே நிலைத்து இருக்கிறேன்,ஆனால் எனக்கு அது நிலையாமையே போதித்துக் கொண்டு இருக்கிறது. #VanSeSe#
29.  "கோப தாபங்களிலும்,பசியிலும் மட்டுமே எனக்கு நான் முழு உண்மையானவனாக இருக்கிறேன். ஆனால் அவ்வுண்மை எப்பொழுதும் என்னை சுட்டுப் பொசுக்குவதாயும்,எளிதில் அணைக்க முடியாத ஒன்றாகவும் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது.ஆகவே, ...". இப்பொழுது மின்விசிறி வேகமாக சுற்றத் தொடங்கி இருந்தது. # VanSeSe #
 30. கையில பிளைட் டிக்கெட் இருக்கு, ஆனா உக்கார சீட் இல்லையே; #ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?#
 31. சமச்சீர்க் கல்வி புத்தகங்களை கிழிக்கச் சொல்வதும்,கையில் கிடைப்பதெல்லாம் அங்கும் இங்கும் தூக்கி எறியும் ஜெயலலிதா என்னும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க நாம் எந்த மருத்துவமனைக்கு செல்வது?
32.  புறவழிச் சாலையாய் கடக்கிறாள்,என்
அகச் சிறையில் இருப்பதறியாமல் !
33. என்னைப் போல் எவரும் இல்லை;
எவரைப் போலவும் நான் இல்லை;
இதில் பெருமைப்படவோ,சிறுமைப்படவோ ஒன்றும் இல்லாமல் நான் நானாக இருத்தலின் மகிழ்வையும்,துன்பத்தையும் விரும்புகிறேன். #சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாமல் கிடந்த ஒரு பிணத்தின் நெஞ்சில் மேற்கூறியவாறு பச்சை குத்தப்பட்டு இருந்ததாக காவல் நிலையக் குறிப்புகள் தெரிவிக்கின்றன#
 34. தன்னைச் சுற்றி இருப்பவர்களை மட்டுமல்ல நம் அனைவரையுமே அடிமைகளாக வைத்து இருக்கவே விரும்பும் ஜெயலலிதாவுக்கு முந்தைய ஆட்சிக்காலங்களில் கைகூடி வராத நடிப்பு தற்போது வாய்த்து இருக்கிறது. முகம் வெள்ளையாக இருந்தாலும் ஒப்பனையும்,பூச்சும் சாயம் வெளுத்துப் போக அதிக நேரம் பிடிக்காது ,மேடம் !
35. அக்காள்கள் வளர்ந்தே இருந்தனர்;
தங்கைகள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள்;
தோழிகள் அகன்றும்,சுருங்கியுமே போனார்கள்;
நீ மட்டும் ஏனடி வளராமல் அகலாமல் என்னோடே இருக்கிறாய் !
 36. இந்தியா வல்லரசு ஆவதை தடுக்க முனையும் அமெரிக்காவின் சதி,நிதியுதவி மூலமே அங்குள்ள மக்கள் கூடங்குளம் திட்டத்தை நிறுத்த முனைகிறார்கள் என்று தமிழக சிவசேனா,பி,ஜே.பி. கட்சியினர் சொல்கிறார்கள். "ராமர் இந்த பக்கமாக நடந்து போனார்" என்ற உங்கள் நம்பிக்கைக்காக சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தி வைக்கும் போது வளர்ச்சி பாதிக்கப்படாதா? அமெரிக்காவின் 123 ஒப்பந்தத்தை நீங்கள் ஆதரித்த பொழுது கூட பணம் வாங்கிக் கொண்டு தான் அதைச் செய்தீர்களா? மதத்தை எங்கெங்கு நுழைப்பது என்று உங்களுக்கு விவஸ்தையே கிடையாதா? உங்களின் மத நம்பிக்கை,நாட்டின் வளர்ச்சியைப் போல மக்களின் இருப்பும் முக்கியம் என்பதை உணருங்கள்.
.
 37. செத்தவனை புதைச்ச அன்னைக்கே பால் ஊத்தின கையோடு இன்னொரு கையில் சோகத்தை மறைக்க பிராந்தியை எடுத்து வாயில் ஊத்தும் படுப்ராக்டிகலான நமது ஊரில், "என்றோ ஒரு நாள் கூடங்குளத்தில் எழவு உறுதி" என்று சொல்லும் யாரையாவது கண்டால் உங்களுக்கு சிரிப்பாகத் தான் இருக்கும். ஆனால் அடைமழைக்காலங்களில் பெரு மழை பெய்தால் ஊரே சாக்கடையாகி கொசுக்கடிக்கே அலறும் நாம் கூடங்குளத்தில் உள்ள மக்களின் உடல் நலம்,உயிர்,வாழ்வாதாரத்தை விட நாம் சொகுசாக இருக்க மின்சாரம் தேவையா என்று மட்டும் ஒரு முறை சிந்தித்தால் நல்லது.
 
38. நேராக,சீராக,வட்ட வடிவில் அழகான முகத்தைக் கொண்டு இருக்கும் பெண்களை விட கோணல் மாணலாக,கிறுக்குத்தனமாய் இருக்கும் பெண்களைக் கண்டால் (ஸ்ரேயா சரண்) பார்த்த மாத்திரத்திலே கன்னாபின்னாவென்று பிடித்து விடுகிறது.இந்த கோட்டித்தனமான ரசனைக்குரிய காரணம் என்னாங்க பாஸ் @ குரங்கு !
39.  சதாமின் பெயரால் இராக்,ஒசாமாவின் பெயரால் ஆப்கன்,கடாபியின் பெயரால் லிபியா என அமெரிக்கா கூட்டணி நாடுகளின் சர்வாதிகாரத்தால் ஆக்கிரமிக்கப்படும் நாடுகளுக்கு பாதிப்பு என்று வரும்போது எதிர்ப்பு குரல் கொடுக்காமல் கமுக்கமாக இருக்கும் வல்லாதிக்க சீனா,ரஷ்யா கம்யூனிஸ்ட்களைப் பார்க்கும்போது நமது ஊர் காம்ரேடுகளை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை !
 40. இருப்பதற்கான மகிழ்ச்சியும்,இல்லாமல் போவதற்கான ஏக்கமுமாய் கரைகிறது வாழ்க்கை
41. புரிந்து நடப்பவன் நண்பன்
புரியாமலே புரிந்ததாய் நடப்பவன் காதலன்
புரிந்தும் புரியாமல் நடப்பவன் கணவன்
என்று புத்திசாலித்தனமாய் பேசும் பெண்ணிடம் "உனக்கு நான் யார்" என கேட்பவன் மடையன் !
42. கடலில் மீன் பிடிக்கப் போய் அண்டை நாட்டுக்காரனிடம் அடி வாங்கி செத்த போது அவன் 'டி.என்.பிஷர் மென்' என்று சொன்னவர்கள் இன்று "தேசத்தின் பாதுகாப்பு,தேவை,வளர்ச்சிக்காக" கூடங்குள மக்களின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கும் 'அணு உலை' பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி வெத்தலை பாக்கை மென்று கொண்டே வியாக்கியானம் பேசுகின்றனர்.
43. காண நேர்கிற பெண்கள் எல்லாம் எனக்கு ஒளி வெளிச்சத்தை தருபவர்களாகவே இருக்கிறார்கள்;
முடிவில் அவர்களே நான் இருளில் இருப்பதை உணர்ந்தும்,உணரவும் வைக்கின்றனர் :(((
 44. சரக்கடித்து மட்டையாகி புலம்பித் தவிக்கும் நண்பர்களின் போதைக்கு ஊறுகாயாக இருப்பதை தவிர்க்கவே நிறையப் பேர் குடிக்கத் தொடங்குகிறார்கள். # எனக்கெல்லாம் ஊறுகாயைத் தொட்டாலே மப்பாகிடுது,ம்ம்,எப்படித் தான் குடிக்கிறாங்களோ !
45. பிற மனிதர்களின் வாசனையும்,மேல்பூச்சையும் நுகரத் தெரியாத தன்னைப் போன்ற மனிதப்புழுக்களாலே இந்நகரம் இத்துனை புழுக்கமாய் ஆகி உள்ளது என்பதை மாநகரத்தை சபிக்கும் எவரும் உணர்வது இல்லை.
  46. ஒன்றின் மீதான நம்பிக்கையை குலைப்பதே கடன் அதன் தன் கடனாக கொண்டு இருக்கிறது.
47. சோனா பெரிய மனசு பண்ணி எஸ்.பி.பி. சரணை மன்னிச்சு விட்டுட்டாங்க.. தயவு செய்து இதுக்காக ஆர்ப்பாட்டம், போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிற வேலை எல்லாம் விடுங்கப்பா..
# என்ன கொடுமை சார் / மேடம் இது #
48.  'ரகசியம்' என்று சொல்லும் போதே அது கசியத் தொடங்கி விடுகிறது :)
49. காங்கிரஸ்,பி.ஜே.பி. மாதிரி "தேசியக் கட்சிகளே" உள்ளாட்சி தேர்தலில் தெம்பா தனியா நிக்கும்போது 'சர்வதேசக் கட்சியான' நீங்கள் ஏன் தோழர்களே உள்ளூர் "திராவிடக் கட்சிகள்" மேல உப்பு மூட்டை ஏற பாக்குறீங்க? எந்தக் கோட்டையைப் பிடிக்க இவ்வளவு ஆவேசம் உங்களுக்கு??? < RED FLAG + RED LABEL >
 
50. மக்களே,நீங்க கல்யாணம் பண்ணுங்க,லவ் பண்ணுங்க... உங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக இருங்க. தப்பே இல்லை,நல்ல விஷயம் தான். அதுக்காக இ-மெயில் பாஸ்வோர்ட் முதற்கொண்டு எல்லாத்தையும் மொத்தமா கொடுத்து "மெர்ஜ்" ஆகிடுறீங்க. உங்களை நம்பி தனிப்பட்ட விசயங்களை சொல்ற எங்களுக்கும் பெர்சனல் வாழ்க்கை இருக்கு,அதை மட்டும் கொஞ்சம் மனசில வச்சுக்கங்க :((((
51. நேரிலும்,அலைபேசியிலும்,மின்னஞ்சலிலும்,பேஸ்புக்கிலும் "எப்படா செம்மலர்,கல்யாண சாப்பாடு போடுவ?" என்று கேட்கும் அன்பு உள்ளங்களிடம் "நான் என்னா வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்,சீக்கிரம் சொல்கிறேன்" என்று சொல்லி சொல்லி எனக்கும் போரடித்து விட்டது.பை தி வே, எனக்கு இன்னும் காதே குத்தல.ஆகவே, 'காதணி விழா' நடக்க இருக்கும் இடம்,நாள்,கிழமை,நேரம் விரைவில் தனியாக அழைப்பிதல் மூலம் அறிவிக்கப்படும். # என்றும் உங்கள் மீது வற்றாத பாசத்துடன் செம்மலர் #
 
52. அறுவை சிகிச்சைக்காக உடம்பில் கத்தியை வைக்கும் மருத்துவர்களும் சரி, காதலிக்கும் மனங்களை துண்டு துண்டாக பிரித்து விட்டு வேறொரு திருமண பந்தத்தில் ஓட்ட வைக்கும் பெற்றோர்களும் சரி,
"இந்த வலியும்,வேதனையும் கொஞ்ச நாள் தான் இருக்கும். அப்புறம் இதெல்லாம் பழகிப் போயி தானாகவே சரியாயிடும். உங்க நல்லதுக்குத் தானே நாங்க இதைச் செய்றோம்" என்று தவறாமல் சொல்கின்றனர்.
Love is Pain & Pain is Love ;
I am your Love & You are my Pain ;
53. நடந்த கொலைகளைப் பற்றி அரசிடம் விளக்கம் கேக்கக் கூட துப்பு இல்லாதவர்கள் செத்தவன் குடும்பத்துக்கு காசு கொடுக்க மட்டும் வேட்டியை மடித்துக் கொண்டு வந்து விடுகிறார்கள். நிவாரணம் என்ற பெயரில் செத்தவனுக்கு காசு கொடுப்பதும் மன்னிக்க முடியாத குற்றம் தாங்க, மிஸ்டர் கேப்டன் விஜயகாந்த் !
54. 'இம்மை,மறுமை என்றாவேன் நான் செம்மை' என்று
ஏன் என்னிடம் வந்து கேட்கிறது இந்த 'பிளாஸ்டிக் பொம்மை' !
55. ஒன்றின் பெருமையில் மற்றொன்றின் சிறுமையும் அடங்கி இருக்கிறது ! # சாதி வழிபாடு #
56. விலை மதிப்பிட முடியாதவைகளை விட விலை மதிப்பு தெரிந்தவைகளே கூடுதல் கரிசனத்தையும்,கவனத்தையும் பெறுகிறது.!
57. ஏதோ ஒரு ஆத்திர,அவசரத்துக்கு வேற வழி இல்லாம டூவீலர்ல பொண்ணுங்க பின்னாடி நம்ம உக்காந்து போனா ஆயிரத்தெட்டு சப்பை கேள்வி கேக்கிற பசங்களை விட ஆறேழு ஆழமான கேள்விகளை கேக்கிற பொண்ணுகளைத் தான் சமாளிக்க முடியல. (((( What a Female Chauvinistic world :))))
58. சினிமா பார்க்கும்போது எது யதார்த்தம்,எது கற்பனை என்று பகுத்தறிய தெரியும் மனதுக்கு - அது எங்கு நிற்கிறது/மிதக்கிறது என்பது மட்டும் புரிவதில்லை !
59. "ட்விஸ்ட்" என்ற ஒற்றை வஸ்துவை நம்பி தமிழ் சினிமாவில் நடக்கும் சவ்வான பஞ்ச தந்திர அட்டகாசங்கள் சலிப்பை ஏற்படுத்துகிறது. வெங்கட் பிரபுவின் மீதான நம்பிக்கை படத்துக்கு படம் குறைந்து வேளையில் அஜீத்தை மட்டும் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. #மங்காத்தா#
60. "ஒருவனை கொல்லவும்,துன்புறுத்தவும் மட்டுமே ஆளும் எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது" என்கிற தொனியிலே ஜெயலலிதா பேசுகிறார். # தர்மபுரி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் இதே போன்ற பதிலை தருவீர்களா? இல்லை வாய்ப்பு வரும்போது தங்கள் பிறந்த நாளை சாக்கிட்டு விடுதலை செய்வீர்களா? #
61. எம்மக்களாயினும் குற்றம் "செய்து" இருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அது தூக்கிலிடும் மரண தண்டனையாக இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு எழுதும் அளவுக்கு நீங்கள் ஜனநாயக நீதிமான்கள் தானா???
# போபால் விஷ வாயுக் கசிவு மற்றும் சீக்கிய கலவரங்களுக்கு காரணமானவர்களை எல்லாம் தூக்கில் ஏற்றி விட்டீர்களா? #
62. ஒரு முத்தத்திற்காக,உயிர்த்துடிப்புடன் கூடிய ஒரு புணர்தலுக்காக மனம் எவ்வளவு காலமாக வெம்புகிறது ! #வைக்கம் முகம்மது பஷீர் >>'சப்தங்கள்' நாவலில் இருந்து#
63. கேப்டன் கட்சியினரால் அவருடைய பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக இல்லாமல் "போதை ஒழிப்பு" தினமாகவா கொண்டாட முடியும்??? # எனி வே ஹேப்பி பெர்த் டே > ப்ளாக் எம்.ஜி.ஆர்., சியர்ஸ்#
64. அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தால் ஊழல் ஒழிகிறதோ இல்லையோ ராசா,கனிமொழி,தயா,கல்மாடி பற்றிய செய்திகளை காண முடிவதில்லை... எப்படியோ ஊழல் ஒழிந்தால் சரி தானே ! # பொது சனம் #
65. முடிவான வாழ்க்கையினைப் போல முடிவான காதல் அமைவதில்லை :((((
66. கல்வி,கட்டிடம்,நாள்,ஊர் என ஒவ்வொன்றையும் மக்களின் நலனுக்காக மாற்றுவதாக கூறி எந்நேரமும் மாற்றம் ஒன்றை மட்டுமே தன் முழு நேர செயல்பாடுகளாக கொண்டு இருக்கும் ஜெயலலிதா முதலில் தன்னை எப்போது மாற்றிக் கொள்வார்?
67. 'தன்னேயல்லாமல் வேறோன்றுமில்லை' என்கிற மிதப்பில் தன்னையே ஆதார புருசனாக வரித்துக் கொள்பவர்கள் தன்னை மீறி நடக்கின்ற செயல்களுக்கும் தன்னிலை விளக்கம் கொடுத்து தம்மை நிலைநிறுத்திக் கொள்ள படாத பாடு படுகின்றனர் :((((
68. இவர்கள் எல்லாம் ஏன் இப்படி இருக்கிறார்கள்" என்று நான் புலம்பும் போது "நீ ஏன்டா வெங்காயம் இப்படி எல்லாம் யோசிக்கிற?" என்று யாரோ என் தலையில் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள் !
69. காதலித்து தோற்பவன் அரைவட்டமாகவும்,காதலிக்காமல் தோற்பவன் முழுவட்டமாகவும் மாறி விடுகிறான்.#நிலவே X மலரே#
70. ஊழல் செய்தவர்கள் சுவையான இட்லி,தோசை,சப்பாத்தி,ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு இருக்க அதை எதிர்ப்பவர்கள் உண்ணாநோன்பு இருப்பது வேதனை அளிக்கிறது. இருக்கும் ஒன்றை புறக்கணிப்பதே போராட்டம். இங்கு பட்டினியால் வாடும் கோடி மக்களை கண்டு கொள்ளாத அரசிடம் வேறுவகையான போராட்டங்களே முன்னெடுக்கப்படுதல் வேண்டும். # இது காந்தி வெள்ளைக்காரனிடம் காட்டிய வழி மட்டுமே #
71. பசியாய் இருப்பவனிடத்தில் கடவுளோ,மதமோ இருப்பதில்லை :(
72. புறமுதுகில் குத்தும் எதிரிகளை சமாளிப்பதை விடவும் தன் அகத்தே தேங்கி நிற்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது தான் கடினமான ஒன்றாக இருக்கிறது !
73. இன,மத,மொழி வேறுபாடின்றி மக்களின் உரிமைக்காக,விடுதலைக்காக தன்னுயிர் நீத்தவர்களை போற்றி வணங்கும் இவ்வேளையில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் தங்களது வாழ்வு உரிமைக்காக போராடுபவர்களை அழிக்கும் சக்திகளுக்கு தோள் கொடுக்கும் இவ்விந்திய நாட்டின் விடுதலை நாளை ஒரு மனிதனாக எப்படி நாம் கொண்டாட முடியும்?
74. டாலரின் மதிப்பைப் பற்றி அவர்களை விட உலகின் மற்ற பகுதிகளை கவலைப்பட வைப்பதிலே அமெரிக்காவின் சாமர்த்தியமான நாட்டாண்மைத்தனம் இருக்கிறது.
75. அடுத்தவன் விருப்பு,வெறுப்பு அறியாமல் அனுமதியின்றி ஏதாவது குழுமத்தில் கோர்த்து விட்டு நமது சங்கை அறுப்பவர்கள் கட்சிக் கூட்டத்துக்கு பிரியாணி பொட்டலம் தந்து ஆள் பிடிப்பவர்களை திட்டும்போது வியப்பாக இருக்கிறது. # சுதந்திரத்தை கேட்டு வாங்கியவர்கள் நாம் #
76. 'பாரிலா குடிக்கிறேன்,வீட்டில் தானே குடிக்கிறேன்' என்ற அறம் பேசி அந்த கற்பிதத்தில் அனுதினமும் சரக்கடித்து வயிற்றை புண்ணாக்கிக் கொள்பவனும்,நேரில் கண்டால் சூரியனைப் போல தகிக்கும் பெண்களைக் கூட குளிர்ச்சியான இரவு நிலவாக மனதுக்குள் உருவகம் செய்து வைத்து காதல் வேதம் பேசுபவனும் வாழ்க்கை என்ற விளையாட்டில் தன்னையே பணயம் வைக்கும் சூதாடிகள் !
77. நீ காட்டாற்று வெள்ளமாய் பெருகி மூழ்கடித்த அவ்வேளையிலும்,
அது வெறும் கானல் நீரென்ற கனாவில் இருந்தேன் நான் !
78. இல்லாமல் போகும் ஒன்றுக்காக,இருக்கின்ற எல்லாமும் ஒன்றும் இல்லாமல் போகுமா ?
79. பதில் தெரிந்தே நம் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு மலர்ச்சியுடன் பதில் சொல்லும் தருணங்கள் இருத்தலை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஏனெனில் மலர்தலைப் போன்றே வாடிப் போதலும் இயல்பான ஒன்றே.அதுவே பூவாக அதனை நம்மிடம் நிலைநிறுத்தி இருக்கிறது. # செம்மலர் #
80. அமவாசை,பவுர்ணமி மேல் நம்பிக்கையற்ற,ஏகாதிபத்தியங்களின் மீது வெறுப்புள்ள நாம் "அன்னையர்,நண்பர்கள்,காதலர்" ஆகிய 'உருவாக்கப்படும்' தினங்களில் மாய்ந்து மாய்ந்து வாழ்த்துக்கள் சொல்வது ஆச்சரியம் அளிக்கிறது.உறவு முறைகள்,நட்புகளை நினைவு கூறல் என்றளவில் அதற்கான நியாயம் இருப்பினும் ஏன் இதே அளவுகோல் ஊர் ஒன்று கூட மதங்களின் பெயரால் கொண்டாடப்படும் தினங்கள் மீது நமக்கு இருப்பது இல்லை? # I Am Red - எனக்கில்லை எம்மதமும் #
81. பேஸ்புக்கில் நொடிக்கொரு முறை வீசப்படும் அரசியல் அப்டேட்களை படிக்கும்போது இந்த மரமண்டையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச அரசியல் அறிவும் மறந்து போய் விடும் போல இருக்கிறது. இதனை சீர் செய்ய ஒரு நாட்டு ராஜா,மற்றொரு நாட்டு ராஜாவுக்கு வாழ்த்து சொல்வதை தலைப்புச் செய்தியாக தாங்கி வரும் அரபு நாட்டுப் பத்திரிக்கைகளை மட்டும் வாசிப்பது உசிதமென படுகிறது.
82. நடப்பில் ஒரு பத்து நிமிடங்கள் கூட மன நலம் குன்றியவர்களை சகிக்க கொள்ள முடியாத நாம் அதே கருவை ஒட்டிய இரண்டு மணி நேரப் படங்களை எப்படி ரசித்து பார்க்க முடிகிறது? அவர்கள் தெளிந்த,தேர்ந்த ஒரே மாதிரியான நடிப்பை தருவதால் மட்டுமா? இல்லை நமது அடிமனத்தில் இருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாலா? # I Am Sem - நாம் தெய்வத்திரு மக்கள் #
83. ஹினா ரப்பானியை பார்த்து சலுவாய் ஒழுக விடுவதற்கும்,சோயப் மாலிக்கை பார்த்து எச்சிலை விழுங்கி காமாரம் அடைவதற்கும் அடிப்படையான காரணம் ஒன்றாகவே இருக்கிறது !
84. தான் யாரென நன்கு உணர்ந்த ஒருவனுக்கு அவனை விட நேசிக்க சிறந்தவொரு நண்பனும்,வெறுக்க ஒரு மோசமான எதிரியும் இருக்க வாய்ப்பில்லை !
85. அந்தி சாய்ந்த பொழுதுகளில் வெள்ளந்தியாய் இருப்பவனை பச்சோந்தியாக உருமாற்றுவதும்,பச்சோந்தி வெள்ளந்தியாக உருமாறுவதைக் காணவும் மந்திக்கே வாய்த்து இருக்கிறது! #இவன் செவ்வந்தி #
86. அடுத்தவன் மனதை புண்படுத்தி விடக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக மனதுக்குள் தேக்கி வைக்கப்படும் சொற்கள்,தெரிந்தே வேறு வழியின்றி தனது சிசுக்கருவை கலைக்கும் பெண்களின் வலிக்கு நிகராகவே இருக்கிறது :(
87. ஒருவன் நல்ல அறிவுடனோ,திறமைசாலியாகவோ இருக்கும் பட்சத்தில் "அவன் உன் சாதிக்கோ,மதத்துக்கோ மட்டும் சொத்து இல்லை,பொது சொத்து" என்று பங்கு உரிமை கொண்டாடும் நாம் இன்னொருவன் திருடுபவனாக,தீவிரவாதியா இருக்கும்போது மட்டும் "அவன் உங்க சாதியோட,உங்க மதத்தோட ஆளுகடானு" என்று உரிமையை உதறித் தள்ளுவது ஏன்? அவனவன் நல்லதாகவோ,கேட்டதாகவோ சேர்ப்பது அவனுக்கு மட்டுமே உரிய தனிச் சொத்து ! # இவன் தனியன் #
88. மனம் குழந்தையாய் இருக்கையிலும்,முதிர்ச்சியை அடைகையிலும் காயங்களைப் பற்றிய உணர்வே இருப்பது இல்லை. மனம் இளமையில் ஆடும் போது தான் காயங்களும்,அதை தீர்க்க மருந்துகளும் மாறி மாறி தேவைப்படும் ஒன்றாகவே இருக்கிறது ! #இம்மனம் எந்நிலை என அறியாதவன் #
89. சிலரை பிடிப்பதற்கும்,வெறுப்பதற்கும் உரிய காரணங்களைத் தேடுவது முடிவில் சலிப்பினையே ஏற்படுத்துகிறது!
90. அவர்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை நீ யாரென,என்னைப் புறக்கணித்து விட்டுப் போன ஆயிரமாயிரம் கறுப்பு தேவதைகளை விட இன்றும் என்னுள் நிலைத்து நிற்கும் வெள்ளைப் பிசாசான நீயே என் மகா தேவியென !
91. நாம் எதன் மிகுந்த பாசத்துடன் நெருக்கமாக இருக்கிறோமோ,அது கேள்விக்கு உள்ளாக்கப்படும்போது பொறுக்க இயலாமல் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அது உறவோ,காடோ,நாடோ,மதமோ,மொழியோ,கட்சியோ,விளையாட்டு வீரனோ,நடிகனோ,...நீளும் இந்த வரிசையில் சாதியைப் பற்றி பேசும்போதும் சாதியை விரும்புபவர்,வெறுப்பவர்,மறுப்பவர் என்ற பேதமில்லாமல் இதுவே நேர்கிறது. ஆக நாம் உண்மையில் சாதியை நேசிக்கிறோம்,இல்லையா?
92. எனக்கு கசப்பாகவும்,உனக்கு கார்ப்பாகவும்,அவனுக்கு துவர்ப்பாகவும்,இவனுக்கு உவர்ப்பாகவும்,அவளுக்கு இனிப்பாகவும்,இவளுக்கு புளிப்பாகவும் என்று யாவருக்கும் ஒற்றை சுவையில் மட்டும் வாழ்க்கை விதிக்கப்படுவதில்லை. அறுசுவை நாக்குக்கு மட்டுமல்ல நமது வாழ்க்கைக்கும் அவசியமானதே. # 'நா' செத்து உளறுவது 'நான்' #
93.அற்ப நேர சந்தோசங்களும் கூட அதற்கான வேரினைத் தேடுகையில்,முளைக்காமலே போகிறது மனம் :(
94. முன்கோபமும்,பெருந்தன்மையும் எப்படி ஒன்றாக வாய்க்கிறது?
95. அரசியலோ,சினிமாவோ.இலக்கியமோ,ஆன்மீகமோ,பகுத்தறிவோ,பண்பாடோ,கலாச்சாரமோ அக்குவேர்,ஆணிவேராக பிய்த்து எறியும் நமது விமர்சன அறிவு,புலனாய்வுத் திறன் கண்டு மெய் சிலிர்க்கும் அவ்வேளையில் முதல்வன் படத்தில் ரகுவரன்,அர்ஜூனிடம் பேசும் வசனம் மட்டும் நினைவுக்கு வந்து சிந்தனைக்கு உள்ளாக்குகிறது ! #இவன் அரைவேக்காடு #
96. நான் உன்னை ரசிக்கத் தொடங்கும் போது நீயும் அதை ரசிக்க ஆரம்பிக்கிறாய் ! # கவனம்,காதல் ஒரு தொற்று நோய் #
97. POEM என்ற வார்த்தையை எங்காவது காணவோ,கேட்கவோ நேரிடுகையில் இன்னும் பள்ளிக்கூடத்தில் மனப்பாடம் செய்து எழுதிய ஆங்கில POEM தான் முதலில் ஞாபகத்திற்கு வருகிறது :) கவிதை எனப்படுவது யாதெனின் அது POEM அல்ல ! # இவன் ஞான சூன்யம் #
98. மூளை காலியாக இருப்பது போல் மனசும் காலியாக இருந்து இருக்கலாம் :) # ஒலிப்பது பித்தன் பிசாசுவின் குரல் !
99. மாதவி,கண்ணகி ஆகி விடலாம் நொடிப் பொழுதில்;
இராவணன்,இராமன் ஆக முடியாது எப்பொழுதிலும்; # அனுமார்
100.உன்னில் நானும் என்னில் நீயும் ஒளிந்து கிடக்கிறோம்,நாம் அறியாமலே:)
101. பாலும்,சர்க்கரையுமற்ற தேநீர் மதுரமாய் தித்திக்கிறது:)
102. தான் சராசரிக்கு மேலானவன் என காட்டிக்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அவனை சராசரிக்கும் கீழே இழுத்துக் கொண்டு போய் விடுகிறது.
103. உங்களை நேசிப்பது போல் உங்களைச் சுற்றி இருப்பவற்றையும் நேசியுங்கள் :) இன்று உலக சுற்றுச்சூழல் தினம் !
104. மனதை உடலும், உடலை மனதும் கொன்று தீர்த்துக் கொண்டே இருக்கிறது :)
105. இன்றிரவு சிம்புவுக்கு தூக்கம் வராது :(
106. தீர்மானங்களுடனான வாழ்க்கை,தீர்வை மட்டும் தருவதில்லை.
107. எதிர் நோக்கிய வாழ்வைப் பற்றிய சந்தேகங்கள் இன்னும் அதிகமாகி விட்டது. ( :>நேற்று இரவு "நீயா,நானா" பார்த்த பிறகு! )
108. நானும் அவளும் தனியாக, தனித் தனியாக :)
109. காங்கிரசுக்கு எதிராக எல்லாரும் வீழும் இந்த வேளையில்,பணபலத்துடன் ஒற்றை ஆளாக நின்று போராடும் ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றி (ஐந்து லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசம்) மனதை மகிழ வைக்கிறது.
110. அனுபவத்தில் இருந்து படிப்பும்,படிப்பில் இருந்து அனுபவமும் கிடைக்கிறது. +:-) வினையே பயன்
111. எப்படி பிறக்கிறோம்,வளர்கிறோம் என்பது நம் கண் முன்னே தெரிகிறது. ஏன் இறந்து போகிறோம்? என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை. அதுபோல் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் பதில் சொல்ல இயலாத,தெரியாத,விளங்காத கேள்விகள் ஆயிரம் இருக்கலாம்.ஆகவே, எவரையும் குத்தாதீர்கள், குடையாதீர்கள்,...
112. யோவ் கோட்சே, ஏன்யா காந்திய சுட்டு கொன்ன? அந்த தாத்தா இது வரைக்கும் சாகாம இருந்தா இந்தியாவில ஊழல்,வன்முறை,வறுமை இருந்து இருக்காதுல! காந்தி,காமராஜர்,பெரியார்,அண்ணா,எம்.ஜி.ஆர். என்று ஆள் ஆளுக்கு நம்மை விட்டு மறைந்தவர்களின் பேரை சொல்லி கூவி ஒரே இம்சை.
113. கருணாநிதி+ஜெயலலிதா; சோனியா+ராஜபக்சே; கனிமொழி+ராசா; தங்கபாலு+குஷ்பூ; அழகிரி+அஞ்சலி; இந்த ஜோடிகள் எல்லாம் தமிழகத்தின் பண்பாட்டை,கலாச்சாரத்தை தூக்கி நிலை நிறுத்தும் "மானாட மயிலாட" என்ற நிகழ்வினில் காண மனம் விழைகிறது, உடல் ஏங்குகிறது, ஆவி அலைகிறது...
114. இலங்கை தோற்பதை காணும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்.
115. 'பசு நேசன்', 'டவுசர் நாயகன்' , 'மேதை' , 'ரத்தத்தின் ரத்தம்' ராமராஜன் எங்கே இருக்கிறார்???
116. விளையாட்டை விளையாட்டாகவே மட்டும் பாருங்கள்!
117. லட்சிய தி.மு.க. இந்த தேர்தலை புறக்கணிக்கிறது - தலைவர் டி.ஆர். இதைக் கேட்ட மக்கள் ஆழ்ந்த கவலை!
118. அறிவு இல்லாதவர்க்கு அகவுலகம் இல்லை;
அழகு இல்லாதவர்க்கு புறவுலகம் இல்லை.
119. பெற்றோர் பாசத்துடன் தவள விட்டனர்;
சுற்றத்தார் அன்புடன் நடை பழக்கினர்;
நண்பர்கள் நேசத்துடன் ஓட வைத்தனர் (வைக்கின்றனர்);
ஆற்றுநீரைப் போல அதன் போக்கில் செல்லும் என்னை இதுகாறும், (இனியும்) பொறுமையுடன் சகித்து ஏற்றுக்கொள்ளும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கங்கள் ! - என்றும் பாசத்துடன், செம்மலர் செல்வன்
120. நாய் கல்லால் அடிபடுகிறது;
மனிதன் சொல்லால் அடிபடுகிறான்!
121. தொலைந்து போகாத ஒன்றைத் தேடி அலைகிறேன், ஆம்
தொலைகிறேன் நான் என்னுள்ளே, அடையாளமின்றி !
122. ஓட்டமோ முன்னோக்கி, தேடலோ பின்னோக்கி
என்று நிற்கும் இந்தச் சடுகுடு ஆட்டம்?
123. விழுவதும்,பின் எழுவதும் வாடிக்கையானது;
பிரிவு மட்டுமே தீராத வினையானது!
124. மலராக வேண்டாம்,குத்தும் முள்ளாக வேண்டும்!