Tuesday, September 30, 2008

தமிழை யார் காப்பது?

ஒருவர் வீட்டில் தாய் இருக்கிறார்.அவருக்கு ஒரு மகன். வீதியில் இருந்து ஒரு வேசி வருகிறார்..அவர் மகனிடம் கூறுகிறார்,,நான் உன் தாயை விட அழகாவும்,அறிவாகவும் உள்ளேன்..என்னை தாயாக ஏற்றுக்கொள்ளவும் என்கிறாள்..மகனும் அதற்கு சம்மதிக்கிறான்.. படிக்கவே நா கூசுகிறதா ? ஆனால் இங்கு நடைமுறையில் அதுதானே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.. ஈராயிரம்,மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி நம் முன்னோர் அரும்பாடு பட்டு சீராட்டி வளர்த்த மொழியை ஒரு ஐம்பது ஆண்டு இடைவெளியில் நாம் கொலை செய்கிறோம்.. நாம் செய்வது தவறு என்று அறியாமலே.. "குஞ்சு மிதிச்சு கோழி சாகுமா? ஆனா இங்க சாகுதே ; "
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த யாம் இன்று கடை விரித்து பிறத்தியார் மொழி வளர்க்கிறோம். நாலு வார்த்தை பேசினால் 2, 3 வார்த்தை ஆங்கிலத்துல தான் பேசுகிறோம்.. ஓகே டா .. பாய்..டேக் கேர். c u .னு சொல்றோம்.. அவன் என்ன ஆங்கில நாட்டுக்காரனா ? சரி டா , ஒடம்ப பாத்துக்கோ,பாப்போம் னு சொன்னா நம்ம வாயில் உள்ள முப்பத்திரண்டு பற்களும் கொட்டி விடுமா என்ன? இல்லை புஷ் மாமாவும், விக்டோரியா மாகராணி வருத்தப்படுவார்களோ? சர்க்கரை இனிக்கிறது என்பதற்காக நீருடன் சேர்ந்து குடித்தால் எப்படி இருக்கும்?
மொழி சார்ந்து ஒரு மாநிலம் பிரிக்கப்பட்டு உள்ளது..மொழி அழியும் பொழுது அவ்வினம், கலாசாரம், பண்பாடு அழியும் சாத்திய கூறு உள்ளது.. இல்லையெனில் நாமும் அமெரிக்க , பிரித்தானியா காலனியாதிக்கத்தில் மறைமுகமாக இருக்க வேண்டியது தான்.
தமிழக முதல்வர் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒரு மருமகள் , தனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது..அதனால் ஆங்கிலத்தில் பத்திரிக்கை ஆரம்பிக்க போகிறேன் என்று சிறிதும் வருத்தமின்றி ஒரு வார இதழில் கூறுகிறார்.. இதை பார்க்கும் படிக்கும் அடிமட்ட தமிழன் என்ன நினைப்பான்? படிக்காதவன் இதை செய்வது இல்லை.. படித்த யாமே இதை செய்கிறோம்..
ஊடகங்களில் நடக்கும் மொழி கொலைக்கு அளவே இல்லை.. நமீதா, குஷ்பூ, ரம்பா , நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் பேசுவதே தமிழ் என்று நாம் புல்லரித்தால் நாம் அடையும் பேறு தான் என்ன.. ஒரு பாமர தமிழன் எவனாவது அவன் மொழியினில் செப்பினால் இந்த வாயாடிகளுக்கு புரியுமோ?
நாம் எந்த மொழி,இனம் என்று பிறர் புரிந்து கொள்வதற்கு நம்முடைய பெயரினை வைத்து அறிந்து கொள்ளலாம்.. கிறித்தவ மக்கள் முன்னராவது ராயப்பன், சூசை அப்படி என்று வைப்பார்.. இப்போ நேரடியாக அமெரிக்கக்காரன் பெயர் தான்.. என்ன வாயில தான் நுழைய மாட்டேங்குது? இஸ்லாம் மதத்தினரும் அவ்வாறே தான்.. குர் ஆன், அரபி , உருது பெயர்கள் தான்.. இதை பார்த்த இந்து மதத்தினரும் சமஸ்கிர்தம்,வட மொழி பெயர்களை வைக்கின்றனர்.. நாம் வாழும் இறை நம்பிக்கை சார்ந்தும்,இயற்கை சூழல் சார்ந்தும், அன்பு,நேசம் சார்ந்தும் நம்முடைய மொழி பெயர்களையே வைக்கலாம்.. பெயர்களுக்கு பஞ்சமா என்ன இங்கு?
மானாட மயிலாட , நாக்க முக்க கொண்டாடும் தமிழ் சமூகத்தில் தமிழ் தாய் வாழ்த்தை பாட சொன்னால் சிரிப்பார்கள். நிலம் கெடுத்து, நீர் வளம் குறைந்து , மண் வளம் அற்று, விலங்குகள் அருகி , மன வளமும் குன்றி இப்போது மொழி கொலை செய்வோம்..
தமிழினில் பேசியதற்காக மாணவன் ஒருவனை முழங்கால் மொட்டி போட சொல்லும் சமுதாயம் , நாக்கை அறுக்காமல் விட்டார்கள், அவ்வாறு அறுத்தால் அவர்கள் கற்று தரும் மொழி கூற நாக்கு இருக்காதோ என்ற எண்ணத்தில் விட்டு விட்டார்களோ.. எந்த ஒரு நாட்டிலாவது அவன் மொழியை பேசியதற்க்காக இப்படி ஒரு தண்டனை கிடைக்குமா? பேசாமல் இருந்தால் அல்லவா தண்டனை என இருந்து இருக்க வேண்டும்.. இதற்க்கு பள்ளிகூடங்கள் காரணம் இல்லை.. நாம் பிள்ளை நம்மை டாடி, மம்மி என்று அழைக்க வேண்டும்.. அமெரிக்க நாடுகளில் பணி புரிய வேண்டும் என்ற எண்ணமே.. அவன் ஆங்கிலத்தில் படிக்கட்டும் ; அதை அவன் அமெரிக்காவிலோ இல்லை அடுத்த மாகாணத்திலோ பேசட்டும்.. எம் தமிழரிடத்தில் தமிழில் பேசட்டும்.. நாம் பேசும் மொழி எதற்கும் உதவாது என்று நீங்கள் கூறினால் நீங்கள் மட்டும் எப்படி நல்லவரா இருக்க முடியும்.. குழந்தைகளிடத்தில் நல்ல எண்ணங்களை விதையுங்கள். ஆங்கிலமும் படிக்கட்டும்,தமிழும் படிக்கட்டும்.. இரண்டையும் ஒன்றாக பேசி இரு மொழிகளையும் கலந்து கொலை செய்ய வேண்டாம்..
தமிழக அரசானது தமிழ் மொழியினை பள்ளிகளில் கட்டாய பாடமாக்க வேண்டும்.(தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு மட்டும்)..
தமிழர்களாகிய நாம் நம்மிடையே பேசும்போது கூடுமானவரை நமது தமிழிலே பேசலாமே.. ஒன்பது கோடி மக்கள் பேசும் இம்மொழியை நாம் பேசா விட்டால் மற்றவரா இதை காப்பாற்றுவார்?

Friday, September 26, 2008

தமிழ் , தமிழன் மீதான மலையாளியின் வெறுப்பு

நம் தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை.
தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த தமிழ் சினிமாவின் பார்வை இன்னும் கொஞ்சம் காமெடி. ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் லேசாக உதட்டை அழுத்தி, `புட்டு வேணுமா...' என்று கேட்கும் டயலாக் கண்டிப்பாக உண்டு.
திருமதி நாயரின் முண்டோடும், மாராப்பு இல்லாத ஜாக்கெட்டோடும் தமிழ் சினிமாவினர் தங்களது லொள்ளுத்தனத்தை நிறுத்திக் கொண்டார்கள்.
மலையாளிகள் அப்படி அல்ல. தமிழர்கள் பற்றிய காட்சியமைப்புகளும் நம்மைப் போல், முண்டு, ஜாக்கெட் என ஆடையோடு முடிந்துவிடும் ஒரு ரகம் அல்ல. சூலம் மாதிரி பலமுனைகள் கொண்டது! (குத்தினால் ஆள் குளோஸ்)
மலையாளத் திரைப்படங்களில் தமிழர்களைக் குறிக்கும் விசேஷப் பெயர், பாண்டி! மூன்றெழுத்துப் பெயர் என்றாலும் பாண்டிக்கு அர்த்தங்கள் முந்நூறு. குளிக்காதவன்... அசிங்கம் பிடிச்சவன்... இப்படி! ஏதாவது ஒரு மலையாளியை, பாண்டி மாதிரி இருக்கிறியே என்றால் போதும்; லாரியில் அடிபட்ட மாதிரி சிதறிப் போவார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு, `அக்கரை அக்கரை அக்கரை' என்றொரு படம்ப்ரியதர்ஷன் இயக்கியது. கடத்தல்காரன் ஒருவனைக் கண்டுபிடிக்க அமெரிக்கா செல்லும் மோகன்லால், அங்குள்ள உயரமான கட்டடங்களைப் பார்த்து பிரமித்தவாறு, அருகிலிருக்கும் சீனிவாசனிடம் இப்படிச் சொல்வார்; ``எல்.ஐ.சி. பில்டிங்கைப் பார்த்து வாய் பிளக்கும் தமிழர்கள், இதைப் பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்திடுவான்களே!''
எல்.ஐ.சி. போலொரு கட்டடம் அன்று கேரளாவில் இல்லை. அந்த நெஞ்செரிச்சலில் அவலை நினைத்து இடித்த உரல்தான் மேலே உள்ள மோகன் லாலின் பேச்சு.
மற்றொரு படம், சுரேஷ் கோபி நடித்தது. பெரிய பீப்பாய் போலிருக்கும் நடிகர் ராஜூதான் போலீஸ் அதிகாரி. வழக்கம் போல கீழ்மட்ட அடியாளாக ஒரு தமிழ்வில்லன். ``நீ பொன்னுசாமி இல்லையா?'' ராஜூவைப் பார்த்து நம் தமிழ் ஆளு கேட்கிறார். தெரியாமல் சாணியை மிதித்த தொணியில் ராஜூ சொல்வார்; ``என்னது... பொன்னுச்சாமியா? நான் நல்ல ஐயங்கார் குடும்பத்துல பிறந்தவனாக்கும்.''தமிழ்ப் பெயர்களான குப்புசாமி, பொன்னுச்சாமியெல்லாம் மலையாளிகளைப் பொறுத்தவரை தரக்குறைவானவை. தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தமானவை... அப்படியொரு ஆதிக்க மனோபாவம்.
திரைப்படங்களில் அரசியல் பேசுவது மலையாளிகளுக்கு கள்ளும், கருமீனும் ஒன்றாக கிடைத்த மாதிரி. அதுவும் முல்லைப் பெரியாறு என்றால் கொள்ளை இன்பம். கூத்தாடி விடுவார்கள்!
மோகன்லாலின் `உடையோன்' படத்தின் வில்லன் சலீம்கௌஸ் ஒரு தமிழன். தமிழன் சொல்வான்: ``தமிழ்நாட்டுல மழை பெஞ்சாதான் உங்க கிணத்துல தண்ணி'' மோகன்லாலுக்கு நக்கல் அதிகம். அவர் சொல்வார்: ``அதுக்கு உங்க ஊர்ல மழை பெஞ்சாதானே!'' இன்னொரு காட்சி. தமிழ் வில்லன் சொல்வார்: ``தமிழ்நாட்டு கரும்பு சாப்பிடுங்க, தேன் மாதிரி.'' பதிலடி பின்னாலேயே வரும். ``எங்க ஊர் தண்ணியே தேன் மாதிரிதான்!''
இது பரவாயில்லை. தமிழனால் கேரளாவுக்கு குலநாசம் என்றொரு மனப்பிராந்தி மலையாளிகளுக்கு ரொம்பவே உண்டு. பல மலையாளத் திரைப்படங்களில் மெயின் திரைக்கதையே இந்தப் பயங்கர கற்பனைதான்.
இதுவும் மோகன்லால் படம். அவரது அண்ணனாக நெடுமுடிவேணு. அக்மார்க் சுதேசியான அவர் கோக், பெப்சி முதலான தயாரிப்புகளை ஊரில் நுழையாமல் தடுத்து நிறுத்துவார். அவரது சுதேசிக் கனவைத் தகர்க்கும் விதமாய் அயல்நாட்டுப் பொருட்களின் விற்பனையாளராக வருகிறவர் ஒரு தமிழர். சில பல சண்டைகளுக்குப் பிறகு தமிழனைத் துரத்தியடித்து சொந்த தேசத்தின் கலாச்சாரத்தை மீட்டெடுப்பார் மோகன்லால்.
`லாலேட்டன்' எனச் செல்லமாய் அழைக்கப்படும் மோகன்லாலின் பெரும்பாலான படங்களில் தமிழர்களுக்கு எதிராய் இப்படி வாலாட்டும் காட்சிகள் மிக அதிகம்.
``இதெற்கெல்லாம் நேர்மாறாக அங்கே எல்லா காலேஜ் ஃபங்கஷன்லயும் நம்ம ஊரு சினிமாப் பாடல்கள் வெகு பிரபலம். எழுந்து நின்று ஆட்டம் போடுவாங்க. கூடவே தமிழ் சினிமாவினால மலையாளிகளுக்கு வர்த்தக ரீதியாக நிறைய லாபமும் கிடைக்குது.
சொற்ப சம்பளம் வாங்குற மலையாள நடிகர், நடிகைககூட தமிழ் சினிமாவுக்கு வந்தா லட்சக்கணக்குல சம்பளம் வாங்குறாங்க. நயன்தாரா முதல் நரேன் வரை பல உதாரணம்.... எல்லாரையும் தூக்கி வச்சு கொண்டாடறது தமிழன்தான்.
தமிழ்நாட்டுல இருக்கற நிறைய டீக்கடைகளை நடத்தறது மலையாளிகள். அவ்வளவு ஏன், அரிசி, பருப்பு வகையறாக்கள்கூட இங்கே இருந்துதான் கேரளாவுக்குப் போகுது. அப்படியிருக்க, தொடர்ந்து தமிழர்களை தங்களோட சினிமாக்களில் கேவலமா காட்டறாங்கன்னா மனதளவுல அவங்க குறைபாடா இருக்காங்கன்னு அர்த்தம்'' என்கிறார் தமிழ் சினிமா பிரபலம் ஒருவர் .... (குமுதம் )

மோகன்லால் , சுரேஷ் கோபி போன்ற நடிகர்கள் தமிழில் நடித்து பணம் அதிகம் சம்பாரிக்க ஆசைப்பட்டார்கள்.. ஆனால் அவர்கள் நடித்த படம் இங்கு ஓடவில்லை. அது போக மலையாள திரை உலகில் அவர்கள் பெரிய நடிகர்கள் ஆக இருந்து கூட அவர்களால் நயந்தாரா சம்பளம் கூட வாங்க முடியல.. தமிழ் திரை உலகின் வியாபார உலகம் பெரியதாக இருப்பது அவர்கள் கண்ணை உறுத்துகிறது....
அரசியல் ரீதியாக தமிழகத்தில் நாற்பது தொகுதிகள் உள்ளது... நமது அரசியல்வாதிகள் நமது மக்களுக்காக எதுவும் செய்ய மாட்டாங்க ... அது நமக்கு தெரியும்..நம்ம மத்திய அமைச்சர்கள் தமிழ் நாட்டை வளர்க்க நம்மள அளிக்க பாக்கிறாங்க என்ற எண்ணம் அவங்ககிட்ட அதிகமா இருக்கு..இப்போ முல்லை பெரியாறு தண்ணி கேட்டு விட்டா நாளைக்கு மற்ற விசயங்கள் அது போல ஆகிடுமென நினைக்கிறார்கள்..
அது போக நமது தமிழ் மொழியில் இருந்து தான் மலையாளம் உருவானது என்ற கசப்பான உண்மை அவர்கள் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது..
கேரளாவில் வாழ்கிற தமிழனின் வாழ்நிலை , தொழில் சார்ந்து அவர்கள் நம்மை "பாண்டி " என்று விளிக்கிறார்கள்.. ஆனால் இதற்கு நேர்மாறான நிலையில் நமது வந்தாரை வாழ வைக்கும் நமது தமிழகம் உள்ளது.. அவர்களிடம் மரியாதையாக நடக்கிறோம்.. அவர்கள் இந்த ஊரில் தொழில் நடத்த எந்த தடங்கலும் செய்வது இல்லை.. ஆனால் கேரளாவில் ஒரு தமிழன் அவர்களிடத்தில் வேலை பார்த்து காலம் தள்ளுவது மிக கடினம்.. தொழில் நடத்துவது சொல்லவே வேணாம் ..
நம்ம (என்னையும் சேர்த்து தான் ) நயன்தாரா, அசின்,பாவனா பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டு இருக்கோம்..எந்த மொழி மீதும்,மக்கள் மீதும் தனிப்பட்ட விரோதம் தவறு என்றாலும் நம்ம வீட்டை (தமிழ்,தமிழன்) பத்தி கேவலமா பேசினா நம்ம அவங்கள கஞ்சி,கொலையாளி என்று சொல்லாம மௌனமாக அவர்களை களைஎடுப்பு செய்வோம்...