Monday, June 6, 2011

இடைநிலையில் இருக்கும் ஒரு சாதி

இடைநிலை ஆதிக்க சாதியில் பிறப்பவனுக்கு ஒரு வசதி இருக்கிறது.தன்னை மட்டும் ஆராய்ந்து பார்க்காமல் பார்ப்பனீயத்தை அவர்களின்  கூடவே நின்று கொண்டு பொதுவில்  சாடலாம்,தலித் அரசியலை தூர  நின்று கொண்டு வெறுக்கலாம். ஒரு வகையில் சராசரி இந்தியனும் கூட இப்படித் தான் இருக்கிறான் தம்மைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டு வெள்ளைக்காரனைக் கண்டு பொருமுவதும்,கறுப்பனைப் பார்த்து விலகிப் போவதுமாக!

மேற்குறிப்பிட்ட  தட்டையான  ஒரு கோணத்தில் மட்டும் நோக்கினால்  நடுநிலைவாதிகளையும் கூட  இதே நேர்கோட்டில் நிறுத்த முடியும்.ஏனென்றால் நடுநிலையில் இருப்பதாக காட்டிக்கொள்பவனுக்கு ஆட்சியாளர்கள்,அரசியல்வாதிகள்,நடிகர்கள் என எவரையும்  விமர்சிக்கும் வசதி தானாகவே வந்து சேர்ந்து விடுகிறது.இது எப்பொழுதும் அடுத்தவனை குறை சொல்லிவிட்டு தமது அறிவிஜீவித்தனத்தை காண்பித்து கொள்வதாகவும் பொதுவில் தென்படும்.சில நேரங்களில் தாம் யார்,எதற்காக பேசுகிறோம் என்பதை கூட சிலர் மறந்து பேசுவது உண்டு. ஆனால் அது மட்டுமே முழுக்க  உண்மையாக இருக்க முடியாது. உதாரணத்துக்கு  நீங்கள்  ஏதாவது ஒரு தரப்பு நியாயங்களை மட்டும் பேச தொடங்கி விட்டால் அதற்குரியவர்கள் தவறே செய்தாலும் நியாயப்படுத்தி  அதுவே சரி என்று வாதிடவும் செய்வீர்கள். இந்தச் சூழலில் 'தாமரை இலையின் மேலே இருக்கும் நீர்' போல் பட்டும் படாமல் இருப்பதை விட மாற்றுக்கருத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.அதே நேரத்தில் மாற்றுக் கருத்தானது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி,தான் வாதத்தில் வெல்ல வேண்டும்,நடுநிலையாக இருக்கிறேன் பேர்வழி என்பதை விட்டொழித்து விட்டு குறைந்தபட்ச சமூக அக்கறையோடு பொறுப்பான,நேர்மையான,விசாலாமான பார்வையாக இருத்தல் வேண்டும்.

தமிழர்களாகிய  நாம் பொதுவில் எந்த விசயத்துக்கும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு சாரார் பக்கம்  சேர்ந்து கொண்டு பேசுவதும்,அதை புறக்கணிப்பவர்கள்,மாற்றுக்கருத்துக்கள் கொண்டவர்கள்  மேல் எதிரிகள்,துரோகிகள் என்று பட்டம் சூட்டுவதும்  நடந்து கொண்டு இருக்கிறது.இது ஏறக்குறைய அமெரிக்கக்காரன் சொல்வது போல் "ஒன்று என்னுடன் சேர்,இல்லையெனில் நீயும் எதிரியை  ஆதரிப்பவன் என்கிற கணக்கில் நீயும் எதிரியே" என்ற அர்த்தத்திலே எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது. .

இன்று தவறாக தெரியும் ஒன்று நாளை சரியாகவும் ஏற்கப்படும். எதுவும் நிரந்தரமற்ற மாறும்,மாறிக்கொண்டே இருக்கும் நிலையற்ற இந்த  உலகில் மாற்றுக் கருத்துக்களை ,நடுநிலைமை கருத்துகளை நாம் ஏன் எப்போதும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டும்? 

மாற்றுக்கருத்தை ஏற்று  முகம் கொடுத்து பேச வேண்டாம்,முகத்தை திருப்பிக் கொண்டு கூட போங்கள்,ஆனால் முகத்தில் எச்சிலை மட்டும் காறி உமிழாதீர்கள்.3 comments:

Anonymous said...

தெளிவாக எழுதப்படாத பதிவு. ஒருவேளை எனக்குப்புரியவில்லயோ ?
பார்ப்பனீயம் என்பதை இருவகையாகப்பிரிக்கலாம்:
1. தனிப்பட்ட ஒரு குழுவின் வாழ்க்கை
அல்லது
2.ஒரு மத வாழ்க்கை.(அஃதை அன்த‌ த‌னிப்ப‌ட்ட‌ குழ த‌ன‌தாக்கிக்கொண்டு அல்ல‌து தான் ம‌ட்டுமே அதை வாழ வேண்டும் என்க்கொண்டு வாழ‌லாம்)

முத‌ல் வ‌கை வாழ்க்கையைப்ப‌ற்றி எவ‌ரும் ச‌ட்டை ப‌ண்ண‌த் தேவையில்லை.

இர‌ண்டாம் வ‌கை வாழ்க்கையே பிர‌ச்னை. Because it is an 'ism', like Communism, Capitalism, etc.

அதை எவ‌ரும் சாட‌லாம் அவ‌ர்க‌ளின் பார்வையில் அது த‌வ‌றெனில். பார்ப்ப‌னீய‌த்தில் ப‌ல‌ த‌வ‌றுக‌ள் உண்டு என்று கால‌ம்கால‌மாக‌ சொல்ல‌ப்ப‌ட்டு, எதிர்க்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

If I criticise Communism, will you stop me saying that I belong to this and that caste ? Funny, isnt ?

த‌மிழ்நாட்டைப்பொறுத்த‌வ‌ரையில் ச‌ங்க‌கால‌த்துக்கு முன்பே அவ்வாழ்க்கை ம‌க்க‌ளின் பிற‌குழுக்க‌ளை வேத‌னைப்ப‌ட‌ வைத்த‌து.

இடைனிலை, க‌டைனிலை, முதனிலை என்று இப்பார்ப்ப்னீய‌த்தைச்சாட‌ என்த்வொரு அடையாள‌மும் தேவையில்லை. எவ‌ரும் செய்ய‌லாம். இன்த‌ மூன்று நிலைக‌ளிலிருன்தும் ப‌ல‌ரும் செய்திருக்கிறார்க‌ள்.

பார்ப்பனீயத்தைப் பற்றிப் பதிவு எழுதுமுன் அஃது என்ன என்று தெரிந்து விட்டுத்தான் எழுதுவது நல்லது.

Anonymous said...

இன்று தவறாக தெரியும் ஒன்று நாளை சரியாகவும் ஏற்கப்படும். எதுவும் நிரந்தரமற்ற மாறும்,மாறிக்கொண்டே இருக்கும் நிலையற்ற இந்த உலகில் மாற்றுக் கருத்துக்களை ,நடுநிலைமை கருத்துகளை நாம் ஏன் எப்போதும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டும்?
மாற்றுக்கருத்தை ஏற்று முகம் கொடுத்து பேச வேண்டாம்,முகத்தை திருப்பிக் கொண்டு கூட போங்கள்,ஆனால் முகத்தில் எச்சிலை மட்டும் காறி உமிழாதீர்கள்.


Dear friend

You are making a blunder here. Because, how r u sure everything changes in time ? There r many things, which r man made, r not allowed to change. When they r rigid and unchanging, all of us have problem with that.

For e.g. religions and variety of 'isms'

Islam believes in verbal inerrancy of their relgion; so also, Chrisitinaity.

Parppnaeeyam does so, in many of its respects. Although they may not be practised strictly, they remain in the religion w/o changes; raising fear of being resurrected any time.

எது மாற்றமடைகிறதோ அதைப்பற்றி கவலையில்லை. மாற்றமடையாமல் இருப்பவை, அல்லது மாற்றமடைவதை சூழ்ச்சிகளால் தடுப்பவை, என்றுமே எதிர்க்கப்படும்.

பார்ப்பனீயத்தில் பல மாற்றமடையவதை பார்ப்ப்னர்கள் தடுக்கிறார்கள். எனவே தமிழ் சமுதாயத்தில் அவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். இஃது இயற்கை. ஆனால் அவவிமர்சனத்துக்கு காதும் கண்ணும் வைத்து உங்களைப்போன்றோர் கூத்தடிக்கிறார்கள்.

பார்ப்பனீய‌த்தின் குறைக‌ள் அல்ல‌து மாறாத‌வை அழிய‌வில்லை; ப‌துங்கி வாழ்கின்றன‌.

தாங்க‌ள்தான் இறைவ‌ன் அருகில் செல்ல‌முடியும்; என‌வே நாங்க‌ளே பூஜாரிக‌ள் - ஒரு காட்டு. வ‌ட‌மொழிதான் இறைவ‌னுக்குப்புரியும் என‌வே த‌மிழ் கோயில்க‌ளுக்குள் நுழைய‌க்கூடாது - ம‌ற்றொரு காட்டு.

இவ‌ற்றை எவ‌ரேனும் விம‌ர்ச்ன‌ம‌ செய்தால், அவ‌ர் என்ன‌ ஜாதி என்று தேடிக்கொண்ட‌லைவ‌தா உங்க‌ள் நோக்க‌ம் ?

செம்மலர் செல்வன் said...

உங்கள் கருத்துக்கு நன்றி,சிம்மக்கல்.

அது தட்டையான கோணம் என்று நானே குறிப்பிட்டு இருக்கிறேன். எல்லாவருமே பார்ப்பனீயத்துக்கு எதிராக பேசி இருக்கிறார்கள் நான் இல்லை என்று சொல்ல வரவில்லை.ஆனால் ஒவ்வொரு நிலையில் இருந்து பேசுபவனுக்கும் பேத வித்தியாசம் உண்டு. நான் என்னை திட்டிக் கொள்வதற்கும், நீங்கள் என்னை திட்டுவதற்கும் உள்ள வித்தியாசமே அது. பார்ப்பனீயம் உண்டாக்கிய அடுக்கு முறையில் நிகழும் மாற்றங்களைக் கொண்டு சொல்கிறேன்.

நான் கூற வருவது அரசியல்,சமூக கூறுகளை கொண்ட கருத்தியல் சார்ந்தது. நீங்கள் சொல்வதோ மரபு சார்ந்தது. மதம் அழிந்து விடுமா என்று நீங்கள் கேட்கிறீர்கள். இன்று எப்படி சாதி பேச வேண்டாம் என்று சொல்கிறீர்களோ அதே போல் இந்த மதங்களும் ஒரு நாள் இல்லாமல் போய் விடலாம். இசங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. கம்யூனிசம் சோவியத் யூனியனை உடையச் செய்தது. ஹிட்லர் கொண்டு வந்த இசமும் போயிற்று.

மனிதம் மட்டுமே என்றும் நிற்கும். மேலும் சாதியை இங்கு நான் ஒரு குறியீடாக மட்டுமே பயன்படுத்தி உள்ளேன். மாற்றுக் கருத்தை தான் மையப்படுத்தி உள்ளேன்.