Sunday, December 4, 2011

சாதிமான்கள்

 சாதிமான் : 1
"என்னண்ணே,கடையில வந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்க. வீட்டுல மச்சி இல்லையா? "
"டேய் தம்பி,எப்படா வந்த?அட உனக்கு விஷயம் தெரியாதா? "
"ஏன்னே?என்னா விஷயம்?"
"அது ஒண்ணும் இல்லப்பா. நம்மூர் பஞ்சாயத்து எலெக்சன் நடந்ததுல.அதுல நின்ன சக்கிலியப் பையன் ஒருத்தன்  ஓட்டுப் போடறதுக்காக வீட்டுல காசை கொடுத்துட்டுப்  போய் இருக்கான். இந்த சாதி கெட்ட சிறுக்கி மகளும் அதை வாங்கி இருக்கா. தூக்கி எறிஞ்சு இருந்தாவுல சாதிமகள். அதான் ஒங்க அப்பன் வீட்டுக்கு போடின்னு அடிச்சு விரட்டிட்டேன். " .
சாதிமான் : 2
"ஏன்மா, நான் இங்க விசேசத்துக்கு வந்து இருக்கேன். இங்க கறி போடுறாங்க. ரெண்டு,மூணு வாரமா கறி சாப்பிடாம ஒரு மாதிரி இருக்கு,சாப்பிடட்டுமா?"
"பள்ளப் பய வீட்டு விசேசத்துக்கு போயிட்டு சாப்பிடலாம்ன்னு வேற கேக்கிறியா? வெறி பிடிச்சுப் போச்சுன்னா கடையில,கிடையில வாங்கித் திங்க வேண்டியது தான,மானங்கெட்ட ஜென்மங்க அப்படித் தான் இருக்கும். சரி,அங்க உன்கூட வந்து இருப்பாங்களே,அவிங்க என்ன செய்றாங்களே அதை செஞ்சு தொலை."
அரை மணி நேரம் கழித்து வீட்டுக்கு வேகமாக வந்தவன்,"என்ன இருக்கு,சீக்கிரம் சோறைப் போடு.பசிக்குது."
"ஏன்யா விசேச வீட்டுல திங்கலையோ.இங்க வந்து இந்த குதி குதிக்கிற?"
"எங்க,நாங்க மொய் வச்சிட்டு சாப்பிட போகலாம்ன்னு நிக்கிறோம். சம்சாரிக எல்லாம் எங்க இங்க சாப்பிட போறாகன்னு நினைச்சுக்கிட்டு கலரை கொண்டு வந்து குடிக்க கொடுத்திட்டான்.அதுக்கு அப்புறம் நாங்க எப்படி சாப்பிட போறது.அதான் அப்படியே வந்திட்டோம்."



No comments: