Sunday, March 21, 2010

அவனுக்கென்ன ஆடி விட்டான்

நேரம் சாயங்காலம் ஐந்து ஆகி விட்டு இருந்தது. இன்று முடிக்காமல் விட்ட வேலையால் நாளை மேலாளர் திட்டுவாரே என அலுவலகத்தில் மோவாயில் கை வைத்து யோசித்துக்கொண்டு இருந்தான். அவனை அப்போது தோளில் ஒரு கை தட்டியது.

"டேய் மாப்ள, இன்னும் கிளம்பலையா, உங்க ரூமுக்கு. எல்லாரும் போயிட்டாளுக,அப்புறம் இங்க உக்காந்து என்ன வெட்டி முறிக்க போற?"

'இல்லைடா, அங்க போயிமட்டும் என்ன மயிரவா புடுங்க போறோம். பாக்கிறதுக்கு ஒரு நல்ல சினிமா படமும் வரல. ஏதோ சும்மா உக்காரணும்னு தோணுச்சு,அதான் உக்காந்து இருக்கேன்டா.'

"அப்போ உனக்கு இப்போ ஒரு வேலையும் இல்ல, சரி, என்கூட வா. போலாம்."

'எங்க கூட்டிட்டு போறான்னு தெரியல, சரி போவோம்' என்று அவன் வண்டியில் ஏறி சென்றான்.

வேலை விட்டு செல்லும் பெண்கள்,கல்லூரியில் இருந்து துள்ளிகுதித்து வெளி வரும் பெண்கள், கைக்குழந்தை உடன் இருக்கும் பெண்கள், கணவனின் தோளைப் பற்றி நடந்து வரும் பெண்கள், அம்மாவுடன் நடந்து கொண்டே எதிரில் வருபவனை நோட்டம் விடும் பெண்கள்..யப்பா, எத்தனை விதங்கள்..ஆனால் ஒவ்வொன்றும் அருமை என பார்க்கும் பெண்களை பற்றியை வர்ணனையில் சென்று கொண்டு இருந்தான். ஆண்களைப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. பெண்களை கண நேரத்தில் பார்க்கும்போது ஏற்படும் கவனக்கலைப்புகளால் புகை,வாகன இரைச்சல் ஒன்றும் அவனை அறியாமல் கடந்தது. எப்போதும் கலகலவென பேசும் அவனும் அமைதியாக வண்டியை ஒட்டிக்கொண்டு போய் கொண்டு இருந்தான். 15 கல் தொலைவை கடந்து நகரின் மையப்பகுதிக்கு வந்து சேர்ந்து விட்டு இருந்தனர்.

வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு " டேய் மாப்ள, எனக்கு பசிக்கிற மாதிரி இருக்கு..உனக்கு பசிக்குதா?/ " என்றான்.

"தாராளமா சாப்பிடலாம். எந்த கடைக்குடா போகலாம் ?

"ராத்திரி நான் வீட்டுல போய் சாப்பிடணும்டா ,இல்லாட்டி அம்மா திட்டுவாங்கடா..அதுனால பேல்பூரி,காளான் ஏதாவது சாப்பிடலாம்"

பேல்பூரி சொல்லிவிட்டு அப்போது தான் இவன் அவனை உற்று கவனித்தான். அமைதியை யாரிடமோ விலைக்கு விற்று விட்டது போல நின்று கொண்டு இருந்தான். தண்ணியை குடம்,குடமாக வாங்கி குடித்து கொண்டு இருந்தான்.. ஆனால் வேர்வை சிந்திக்கொண்டே இருந்தான்.
"என்னடா மச்சான், ஆள் ஒரு மாதிரி இருக்க/என்னடா ஆச்சு..உன்னோட மேனேஜர் எதுவும் சொன்னாளா இன்னக்கி?

"அவ கிடக்கிறாடா ,சொம்பை. கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி அவ்ளோ தான்.. பசி இருப்பதனாலோ, என்னவோ, இதை சாப்பிட்டு ஒரு டீ அடிச்சா எல்லாம் சரியா போகும்டா.", என்று சமாளித்தான். இவனுக்கு அவன் எதையோ மறைக்கிறான் என தெரிந்தது.

" எலேய்,என்கிட்டே காட்டாதடா,உன் படத்த. நானும் வண்டியில வரும் போது இருந்தே பாக்கிறேன்.மூஞ்சியை உம்முன்னு தூக்கி வச்சுக்கிட்டு இருக்க? ரோட்டுல போற பொண்ணுகளைப் பத்தியும் ஒரு கமெண்டும் அடிக்கல. என்னடா பிரச்னை உனக்கு, நீயும் , ப்ரியாவும் லவ் பண்ற மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சு போச்சா?

"ஆமாடா,நீ சொன்னது தான்.. லவ் தான்..ஆன நீ நினைக்கிற மாதிரி இல்லை. இது வேற மாதிரி" என்று பீடிகை போடுவது போல தொடங்கினான்.. இதற்குள் பூரி,காளான் வந்தது.ஏதோ வெறி வந்ததை போல இருவரும் சாப்பிட தொடங்கினர். அதை சுத்தமாக சாப்பிட்டு முடித்த பின்னர் அவன் சிறிது தெம்பாக இருப்பது போல தெரிஞ்சது இவனுக்கு,

அவன் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு இவனிடம்" வாழ்க்கையே வெறுக்குதுடா மாப்ள, இன்னும் எத்தனை நாள் தான் இந்த உடம்பு பூமியில தங்கும்னு தெரியலடா? "

"என்னடா திடீர்னு , என்னா ஆச்சு.. சும்மா கிறுக்கன் மாதிரி உளறாதடா,அப்பா,அம்மா,அக்கா எல்லாரும் வேலைக்கு போறாங்க..நீயும் நல்லா சம்பாதிக்கிற. எங்களை மாதிரியா? நீ ராசா வீட்டு கன்னுக்குட்டி.. எல்லாம் அதுவா நடக்கும்டா அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருடா. ஏன் ப்ரியா,கல்யாணத்துக்கு ரொம்ப அவசரப்படுதா? "

"டேய்,அவ தான்டா,ப்ரியா தான் பிரச்சனையே.. நேத்து ராத்திரி நேரா அவ என் வீட்டுக்கு வந்துட்டா."

"ஹேய், ரொம்ப நல்லதா போச்சு..உங்க அப்ஸ் என்னடா சொன்னார்? "

"என்னோட கெட்ட நேரம்,நேத்து எங்க வீட்டுல யாருமே இல்ல."

"ஏன்டா கூறுகெட்ட குப்பா, வீட்டுல யாருமே இல்லேன்னா அது உங்களுக்கு நல்ல நேரம் தானடா? "

"இல்லைடா மாப்ள, அவ வந்த உடனே நேரா என்னோட ரூமுக்கு வந்தா. கொஞ்ச நேரம் சிரிச்சு பேசிக்கொண்டு இருந்தோம்டா.அவ போட்டு இருந்த சுடி ரொம்ப மெல்லிசா இருந்ததுடா. என்னால அடக்க முடியாம கப்புன்னு அவ காயை பிடிச்சிட்டேன்டா..அவ ஏதோ சாலை கொஞ்சம் இழுத்து விட்ட மாதிரி சிலும்பினா.அப்புறம் என்னை பார்த்து அவ சிரிச்சா. என் கை சும்மா இருக்குமா, புகுந்து விளையாடி விட்டேன். அவளும் ஒண்ணும் சொல்லவே இல்லை.அவளுக்கும் நல்லா இருந்து இருக்கும் போல. ரெண்டு பேரும் அப்படியே கட்டிபிடித்துக்கொண்டு உருண்டோம். நானும் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி அப்படியே அவளோட அது மேல விரலை விட்டு அவ மூடை ஏத்தி விட்டுகிட்டு இருந்தேன். இப்படி நடந்து கொண்டு இருக்கும்போது எங்க அக்கா வந்துட்டா.
யாரோ வருவது போல தெரியவும் அப்படியே துணியை சரி பண்ணிக்கிட்டு வெளியே வந்தோம்.அவளைப் பத்தி எங்க அக்காவுக்கு அரசல் புரசலா தெரியும்.. என்னைய ஒரு முறை முறைத்து விட்டு,அவளை பார்த்து சிரிப்பது போல 'வாம்மா , நல்லா இருக்கியா?" கேட்டுக்கிட்டே அவ ரூமுக்கு போயிட்டா. ப்ரியாவும் என்னை கண்டு வெட்கப்பட்டது போல முகத்தை மறைத்துக்கொண்டு வெளியே போயிட்டா."

"டேய், நீ பெரிய ஆள் தான்டா, நான் கூட உன்னையப் பத்தி என்னமோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். கலக்கிட்ட. சரி விடு, இதெல்லாம் உங்களை மாதிரி லவ் பண்றவங்களுக்கு சாதாரணம் தானடா. இதுக்கு போய் மனசை உலப்பிகிட்டு அலையுற? ஏன்,இன்னிக்கி ப்ரியா எதுவும் திட்டினாளா? இல்லை,உங்க அக்கா வீட்டுல சொல்லிட்டாங்களா? "

"இல்லடா மாப்ள, நேத்து அவளை நான் டச் பண்ணிட்டேன்ல.அதான்டா,எனக்கு பயமா இருக்கு. எய்ட்ஸ் எதுவும் வந்து தொலைச்சிடுமோன்னு பயத்துல இன்னிக்கி காலைல வந்து ரத்தம் டெஸ்ட் பண்றதுக்காக கொடுத்து இருக்கேன்.எட்டு மணிக்கு ரிசல்ட் கிடைச்சிடும், வாடா மாப்ள போகலாம்..எனக்கு பயமா இருக்குடா..அப்படி இருந்திட்டா,எப்படிடா எவன் மூஞ்சியிலயும் முழிக்கிறது?

"டேய் விவரம் கெட்ட குப்பா, நீ உன் விரலை தான உள்ள விட்ட? இல்லை,வேற எதையும் விட்டியா? விரலை மட்டும் விட்டா எய்ட்ஸ் வராதுடா.நீயெல்லாம் நாலு வருஷம் படிச்சு டிகிரி வேற வாங்கி இருக்க..சின்னபையன் மாதிரி ரவுசு பண்ணாத,ஒரே சிரிப்பா இருக்கு. வெளியில போய் சொல்லாத, ஊரே சிரிக்கும்.. "

"இல்லை,சரி. உன்கிட்ட சொல்றதுக்கு என்னா, நான் அவளோட அதுக்குள்ள விடும்போது ரெண்டு செகண்ட்க்குள்ள வெளியில லீக் ஆகிடுச்சுடா.. அதுக்குள்ள எங்க அக்கா வேற வந்துட்டாங்களா. வேற ஒண்ணும் பண்ண முடியல."

"சரிடா, மொட்டை தலைக்கும் ,முழங்காலுக்கும் ஏன்டா முடிச்சு போடற? அதுக்கும் நீ இப்போ எய்ட்ஸ் டெஸ்ட் பண்றதுக்கும் என்னடா சம்பந்தம் இருக்குது?"

"உனக்கென்னடா தெரியும் வெங்காயம், அவனவனுக்கு வந்தாத் தான் தெரியும் காய்ச்சலும் ,தலைவலியும். நான் அவளை லவ் பண்ணத் தொடங்கியே ஒரு மூணு மாசம் தான் ஆகி இருக்கும்.. நான் அன்னிக்கி அவளை பண்ணும்போது அவகிட்ட எந்த எதிர்ப்பும் இல்லை.அவளே வேண்டி என்னைய தூண்டி அனுபவிச்சது மாதிரி இருந்ததுடா.. அதான், எனக்கு சந்தேகமா இருக்கு.. நான் தான் அவளுக்கு முதலா, இல்ல வேற யாருமாவதுனு. இப்போ சொல்லுடா,நான் என்ன பண்றது? " சொல்லிக்கொண்டே அப்படியே அழுகத்
தொடங்கி விட்டான்.

இப்போது இவன் நிலைமை தர்மசங்கடமாக ஆகத் தொடங்கியது. "இவிங்க எல்லாம் எதுக்கு இப்படி லவ் பண்ணிக்கிட்டு அப்புறம் ஏன் இப்படி அழுகிறாங்க.நம்ம சொன்னாலும் கேக்க மாட்டானுக. என்னத்த சொல்லி இவனை சரி பண்றது?"இவன் அவனை வண்டியில் ஏற்றிக்கொண்டு லேபுக்கு வந்தார்கள்.
ரிசல்ட் எப்படி இருக்கும் என தெரியாமல் மன கலக்கத்தில் உள்ளே வராமல் வெளியே நின்று கொண்டான்..
"நீ போயி வாங்கி வாடா..நல்லா இருந்தா என்கிட்டே வா,இல்லாட்டி அப்படியே உள்ளே இருந்துக்க.. நான் கிளம்பிடுவேன்."

இவன் தான் உள்ளே போயி ரிப்போர்ட்டை வாங்கி பார்த்தான்.. அவன் அழுது புலம்பியது போல ஒன்றும் இல்லை..இவனுக்கும் சப்பென்று ஆகி விட்டது. ஏன், தான் இப்படி எல்லாம் நினைக்கிறோம் என தன்னையே திட்டிக்கொண்டான். வெளியே வந்து அவனிடம் விசயத்தை கூறியதும் அப்படியே இவனை தூக்கி வைத்து ஆனந்த கூத்தாடினான்.

"சரி, மாப்ள.. ரொம்ப தேங்க்ஸ். இதுவரைக்கும் நடந்தது எல்லாம் காதோடு காதா இருக்கட்டும். எவன்கிட்டயும் போயி உளறி வைக்காதா! அப்புறம் இந்த கவுண்டன் மானம் மரியாதை என்ன ஆகிறது? நீ அப்படியே பஸ் ஸ்டாண்ட்க்கு நடந்து போயி ரூமுக்கு போயிட்றியா? நான் போயி ப்ரியாவ பிக்அப் பண்ணிக்கணும்டா." சொல்லிக்கொண்டே வண்டியை உதைத்துக்கொண்டு விருட்டென கிளம்பினான்.

இவன் கையில் நல்ல வேளை பத்து ரூபாய் இருந்தது. பஸ் ஏறி ரூமுக்கு போயி விடலாம். இவன் கூட வந்து, அவன் வண்டிக்கு இவன் பெட்ரோல் அடித்து, காளான் பேல் பூரி வாங்கி கொடுத்து,அவன் புலம்பலுக்கு 'ஊ' கொடுத்து,ரிப்போர்ட் வாங்க போகும் போது லேப்ல இருந்த பிகரை சைட் அடிக்கும்போது அவள் மூஞ்சியை திருப்பிக்கொண்டதும் ஏனோ நினைவுக்கு வந்தது. இங்கு இவனுக்கு மகிழ்ச்சியடையும் வகையில் எதுவும் நடக்கவில்லை.ஆனால் மனம் ஒரு வித பரவச நிலையில் இருந்தது.உள்ளம் ஆனந்த கூத்து ஆடிக்கொண்டு இருந்தது.அவன் உடலும் அங்கேயே ஆடித் தீர்க்க வேண்டும் போல் இருந்தது.
இதுவும் கூட ஒரு சுகமே!!!

No comments: