Saturday, March 13, 2010

இப்படிக்கு இருவர்

சாலையின் இருமருங்கிலும் ஆண்,பெண் ,குழந்தை, கொசு, நாய்,பூனை இன்னும் பல ஜீவராசிகள் குரல் எழுப்பி ஒரே இரைச்சலாக இருந்தது. இந்த மனிதர்கள் பேசாமல் அமைதியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,ஒரு வேளை,அப்படி இருந்தால் இறந்து விட்டதாக நினைத்து விடுவார்களோ! அப்போது அவனுடைய அலைபேசியிலும் இருந்து ஒரு பாட்டு ஒலித்தது. உடனே எடுக்காமல் மக்கள் நடமாட்டம் குறைந்த இடத்துக்கு வந்து அலைபேசியை அமுக்கினான்.

"என்னை எப்போடா கல்யாணம் பண்ணிக்க போற?"

"யே, எப்படி இருக்க. எங்க இருக்க இப்போ? யார்கிட்டயும் எடுத்த உடனே என்ன பேசுறதுனு யாரும் உனக்கு சொல்லி தரலையா? இன்னும் கொஞ்ச நாள் பொறு.நான் பண்ணிக்கிறேன்."

"இன்னும் எத்தனை நாள்டா உனக்காக பொறுத்துக்கிட்டு இருக்கிறது?. உனக்காக ஊர்க்காரன் கிண்டல்,கேலி,பேச்சு இதெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு உன்கூட பழகிக்கிட்டு இருக்கேன்ல!. இல்ல, எனக்கு அழகு தான் இல்லையா? என் உடம்பு உனக்கு சலிச்சு,கிழிச்சு போச்சா? எனக்கு இன்னைக்கி ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகனும். "

இவனுக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்காமல் எதிர்முனையில் இருந்து பேச்சு எதிரொலியாக வந்து கொண்டு இருந்தது.
"இல்லப்பா,இன்னும் இன்னும் கொஞ்சம் நேரம் கொடு.நானும் எங்க வீட்டில நம்ம விஷயத்தை பத்தி பேசிட்டு சொல்கிறேன்.சும்மா பறக்காதா, நான் உன்னைய விட்டு எங்க போக போகிறேன்?.எனக்கு மட்டும் உன் மேல ஆசை இல்லையா?.எப்படியும் இன்னும் ரெண்டு ,மூணு மாசத்துல முடிச்சிடலாம்.சுடுதண்ணிய காலில கொட்டின மாதிரி நிக்காதா?.என்னா,நான் சொல்றது புரியுதா? "

"இல்லப்பா, நானும் அவசரம் இல்லைன்னு தான் இருந்தேன்.ஆனா இன்னிக்கி உன்னோட அப்பா என்கிட்டே வந்து என் தங்கையை உனக்கு கட்டி வைக்கலாமானு கேக்கிறார். நான் அவ அளவுக்கு படிக்கலை தான், சம்பளம் குறைவு தான். ஆனா நான் இருக்கும்போது எப்படி அவளை,உனக்கு? எனக்கு வந்த கோபத்துக்கு அப்படியே உங்க அப்பாவை கன்னத்துல ஒரு விடு, விடலாம்னு பார்த்தேன்..சரி,என்ன இருந்தாலும் எனக்கு வருங்கால மாமனார் இல்லையா அவரு, அதான் அப்படியே விட்டுட்டேன்.இப்போ அவ,அதான் என் தங்கச்சி என் அடிமடியிலே கை வச்சுட்டா. நீயும் அவளை நோட்டம் விடும்போது நான் கொஞ்சம் உஷாரா இருந்து இருக்கணும்.எனக்கு அது புரியாம போச்சே.
நீ ஏன் இவ்வளவு POSSESIVE ஆக இருக்கிறேன்னு கேக்கிறியா?
ஏன்னா,நான் உன்னை அந்த அளவுக்கு காதலிக்கிறேன்டா. என்னைய புரிஞ்சுக்கட்டு இருப்பேன்னு நினைக்கிறேன்."

"ஏய், இட்ஸ் வெரி நைஸ் ஐடியா.. இந்த ஐடியா கூட நல்லாத் தான் இருக்கு. உன் தங்கச்சியைக் கட்டிக்கிட்டு , அப்படியே உன்னயவும் வச்சுக்கலாம் போலவே! ச்சே,எங்க அப்பாவுக்கு தோணின எண்ணம் கூட எனக்கு ஏன் வரலே? எல்லாம் உன்கூட சேர்ந்த பின்னாடி தான் இப்படி மரை கழண்டு போச்சு. "

"டே,உன் எச்ச புத்தியை காட்டுற,பாத்தியா.நீ எனக்கு மட்டும் தான். இதை நான் யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுத் தர மாட்டேன். நீ சிகப்பா வாட்ட சாட்டமா இருக்கிறது தான் பிரச்சினையே. இதுக்குத் தான் பொண்ணுக அதிகம் வேலை பாக்கிற கம்பெனிக்குப் போயி சேர வேணாம்னு சொன்னேன்.இப்போ பாரு,நீ எவளைப் பார்த்தாலும் நாக்கை தொங்கபோட்டுக்கிட்டு அலையுற.
நான் எவ்வளவு நேர்மையா உனக்கு உண்மையா இருக்கேன். எப்போ பார்த்தாலும் நான் உன் நினைப்புல தான் இருக்கேன். என்னை மறந்து கைவிட்டுறாத. உன்னைய விட இந்த உலகத்துல என்னை புரிஞ்சவங்க யாரு இருக்கா? "

"கார்த்திக், சும்மா சின்னபுள்ள மாதிரி விளையாடாம வீம்பா பேசாம கொஞ்சம் நடைமுறைக்கு ஒத்து வருகிற மாதிரி பாருடா. நம்ம ரெண்டு பேரும் நல்ல வேலையில இருக்கோம்,நிறைய சம்பாதிக்கிறோம்.நமக்குன்னு அடுத்த தலைமுறை வேணும்,பேசாம ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்குவோம்.நம்ம அப்புறம் எப்பவும் போலவே இருப்போம்.அவளுக ஒத்து வந்தா பார்ப்போம். இல்லாட்டி அவளுக கிட்ட இருந்து வந்த வரதட்சணையை வச்சுக்கிட்டு அவளுகளை கழட்டி விட்டுடுவோம்.நம்ம செய்யாட்டியும் அவளுகளே ஓடிட மாட்டாளுக?. நம்ம காதல் உணமையானதுடா.நம்மளை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது "

"நீ பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்லடா,விஜய். இப்போ தான் சட்டப்பூர்வமா GAY கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க.அப்புறம் குழந்தை மேட்டரை நான் பார்த்துக்கிறேன் மச்சி, ஒரு ஆறு மாசம் முன்னாடி ஒருத்தன் அறுவை சிகிச்சை பண்ணி குழந்தை பெத்துக்கிட்டான்.அப்புறம் என் தங்கச்சியை விட்டுடு,வேற ஒரு பொண்ணை பார்ப்போம் உனக்கு. சரி,இவ்வளவு சொல்ற நீ, அதுலயும் ஒரு அர்த்தம் இருக்கு..ஏன்னா, என்னால இனிமேல் ஒரு பொட்டச்சி முந்தானைய புடிச்சு ,அவுளுகளை நக்கி ,ம்ம்... நினைச்சு பாக்கவே கேவலமா இருக்குடா."

"சரிடா மாப்ள, கவலையை விடு.. எல்லாம் நான் சொன்ன மாதிரி பண்ணிடுவோம். உனக்கு எப்பவும் நான் இருக்கேன்டா."

"நாம் இருவர், நமக்கு நாமே" என காதல் பாட்டு பாடி உரையை நிறைவு செய்தனர்.

2 comments:

raghuvaran said...

Yow... avana neeyeee...! Nalla irruku...! Hmmm... Vaera enna solrathunu theriyala...!

செம்மலர் செல்வன் said...

ஏய்,"அவன்" எல்லாமே நானாகத் தான் இருக்கணும்ன்னு அவசியம் இல்ல.. மத்த பசங்க பாதிப்பிலும் எழுதலாம்.. எல்லாப் பேரையும் உங்களை மாதிரியே நினைக்கிறது...