Monday, May 30, 2011

நீங்கள் எவ்வாறு அறியப்படுகிறீர்கள்?

எனது பால்ய காலம் முதலான தோழர் ஒருவர், "இவன் பெயர் செம்மலர். இவனைப் பற்றி என்ன சொல்வது? ம்... இவன் ஒரு சிந்தனையாளன்" என்று அவரது நண்பரிடம் அறிமுகப்படுத்தினார். எதிர் இருந்தவரும் சிறிதும் தயக்கமின்றி வெகு இயல்பாக சிரித்துக் கொண்டே தொடங்கிய உரையாடல் பல தளங்களில் விரிந்து கொண்டே சென்றது. தோழர் சொன்ன 'சிந்தனையாளன் ' என்ற அடையாளத்துக்கு அறவே நான் தகுதி இல்லாதவனாக இருந்த போதிலும் அவர் அறிமுகப்படுத்திய விதம் என்னை மகிழ்விக்கவே செய்தது.

ஏனென்றால் தொழில், பணம், அந்தஸ்து சார்ந்து (இவர் ஆசிரியர், பொறியாளர், மருத்துவர்,மென்பொருள் வல்லுநர், முதலாளி, வெளிநாட்டில் வேலை பார்ப்பவன்) என்று அறிமுகப்படுத்தப்படும் போது 'இவன் வேறு,நாம் வேறு' என்கிற தொனியில் ஒட்டாமல் தாமாகவே விலகிச் செல்லும் ஆட்களை நான் கண்டு இருக்கிறேன். ஒரு கோணத்தில் அவரவர் தொழில் சார்ந்து அறிமுகப்படுத்தப்படுவது கூட சாதியின் பெயரை சொல்லி கூப்பிடுவது போல் எனக்கு கூச்சமாக இருக்கிறது. பிழைப்புக்காக ஒருவன் செய்யும் தொழிலே அவனின் அடையாளம் ஆவது சரியாகாது. மனிதர்களின் இயல்பு,மனம்,குண நலன்கள்,செயல்பாடு,ஆர்வம் சார்ந்து குறிப்பிடப்பட்டால் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவும்,அடையாளப்படுத்திக் கொள்ளவும் உதவும் என நான் கருதுகிறேன்.

2 comments:

Sivakumar said...

சில சமயம் சற்று ஓவராக புகழ்ந்து என்னை நண்பர்கள் கோர்த்து விடுவதுண்டு. செம கடுப்பாக இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. நம் சூழ்நிலை அப்படி அமையும். நீங்கள் என்ன ஜாதி என்று கேட்பவர்களை பார்த்தால் பற்றிக்கொண்டு வரும்!!!

செம்மலர் செல்வன் said...

நன்றி,சிவகுமார்.