Wednesday, October 1, 2008

தமிழீழம் - கருணாநிதி கூட்டம்

'ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக நிலையும் - மத்திய அரசுக்கு வேண்டுகோளும்' என்ற தலைப்பில், சென்னை மயிலை மாங்கொல்லையில் 6-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி பேசுகிறார்,'

"இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ? "
அகண்ட பாரத நாட்டின் பிரதமரை தேர்ந்து எடுக்க கூடிய அளவுக்கு சர்வ வல்லமை கொண்ட நமது தமிழக முதல்வர் வெறுமனே இலங்கை தமிழர் பிரச்சனையில் கவிதை,கடிதம்,பேச்சு என அவர் செய்வது கலைக்கு , மொழிக்கு ஆற்றும் தொண்டாகவே கருத வேண்டி உள்ளது.. அங்க இருக்கிறவன் செத்தா என்ன , பொழச்சா என்ன ?

ஜெயலலிதா,விஜயகாந்த்,கம்யூனிஸ்ட் கட்சிகள்,பா ம க கட்சிகள் இந்த பிரச்சனைக்காக போராடுவதை குறை கூறாதீர்.. அவர்கள் அழைக்க விட்டால் என்ன.. நானும் வருவேன் என்று நீங்கள் கூறினால் அவர்கள் மறுப்பார்களா?.. நீங்கள் தனியாக ஒரு கூட்டம் கூட்டி அங்கு அழுதால் போதுமா? இங்க எல்லா மக்களுக்கும் உங்கள் நிலைப்பாடு அறியும்.. டெல்லியில் போயி கூட்டம் போடுங்கள்.. நம் நாட்டு மக்களின் கவனம் கிடைக்கும்.. சும்மா இங்க மாங்கொல்லை, கடற்கரைன்னு பேசிகிட்டு.. நளினியை பிரியங்கா வந்து பாக்கிறாங்க.. நீங்க அப்போ ஒரு எட்டு ஸ்ரீலங்கா போயி பாருங்க.. விடுதலை புலிகளை பார்த்து பேசுங்கள்.. தமிழன் ஸ்ரீலங்கா மட்டும் தான் உள்ளான் போல என என்னும் சர்வதேச சமூகத்துக்கு எட்டு கோடி மக்கள் கொண்ட மக்களாட்சி தத்துவம் கொண்ட ஒரு மாநிலத்தின் முதல்வர் அவர்கள் பொருட்டு பேசுகின்றார் என்றால் உலகம் கவனிக்கும்.. இந்த ஈழ தமிழர் பிரச்சனை தீர அவரே முன்னெடுத்து மத்தியில் உள்ள அரசுக்கும், ஈழ தமிழர்க்கும், சிங்களவருக்கும் பேச்சு வார்த்தை நடத்தலாம்.. இந்திய அரசுக்கும் , சிங்கள அரசுக்கும் பிரபாகரன் மட்டும் தான் தொல்லையா? இல்லை தமிழினமே தொல்லையா? என அறிய வேண்டிய காலம் உள்ளது.. எவ்வளோ கொடுங்கோல் செய்த மன்னர்கள் உண்டு.. பிட்றேல் காஸ்ட்ரோவையும், செகுவேரயையும் மேற்கோள் கட்டும் நீங்கள் பிரபாகரனை பத்தி சொன்னால் தான் என்ன? ஒரு சீக்கியன் இந்திரா காந்தியை கொன்றான் என்பதற்க்காக அந்த இனத்தை ஒடுக்கி வைக்க முடியுமா?

அங்குள்ள தமிழ் மக்களுக்கு உரிய தமிழீழம் அமைய நடவடிக்கை எடுங்கள்.. இல்லையென்றால் உங்களுக்கும் தினமலர்,ஹிந்து , சுப்ரமணியசாமி, சோ, கருணாவுக்கும் வித்தியாசம் இல்லை என கருத வேண்டி வரும்..

10 comments:

Unknown said...

ஏ! எல்லாரும் பார்த்துக்கோங்க நானும் தமிழன் தான்.. நானும் தமிழன் தான்...நானும் தமிழன் தான்....
- ”கயவன் மு. கருணா” நிதி
(இதனை நாய் சேகர் பாணியில் படிக்கவும்)

Anonymous said...

அன்பு நண்பரே! அருமையான பதிவு. இன்றைய காலத்திற்கு தேவையான பதிவு.படிக்கும் போதே சும்மா ”சுள்” என்றிருக்கிறது. உங்கள் இனப்பற்றுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். "தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆட வேண்டும் அல்லவா”?

அன்புடன்
- ஒல்லாந்தன் -

செம்மலர் செல்வன் said...

தாங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி..

தேவன் said...

நன்மைகளின் விழைவிற்க்கு மட்டும் விதையாகும் பக்குவம் உங்கள் கருத்துக்களுக்கு உண்டு, தெளிந்த கருத்தியல் பார்வைக்கும் பாராட்டுக்கள் நண்பரே!

அருள் said...

இவ்வ‌ள‌வு நாள் வாய்திற‌க்காம‌ல் இருந்துவிட்டு இப்போ எல்லா க‌ட்சியும் போராட்ட‌ம் அறிவித்த‌தும் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா அறிக்கை விடுறாரு.....இது க‌டைந்தெடுத்த‌ க‌ள‌வாலித்த‌ன‌ம்தானே....

எது எப்ப‌டியோ எல்லொரும் ஒன்றாக‌ குர‌ல் கொடுத்து மிக‌ நீண்ட‌ காலமாக‌ சொல்லொன்னா துய‌ர‌ங்க‌ளுக்கு ஆட்ப்ப‌ட்டு கிட‌க்கும் ந‌ம் ஈழ‌த்த‌மிழ‌ர் வாழ்வில் ஒளிபிற‌ந்து துன்ப‌ம் நீங்கி வாழ‌வேண்டும் என்ப‌துதான் எம‌து அவா.

அத்திரி said...

எல்லா கட்சிகளும் இலங்கைப் பிரச்சினையை பேச அரம்பித்த பிறகு தான் கலைஞருக்கு
ஞானோதயம் வந்து இருக்கிறது. மக்கள் மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றை மறக்கடிப்பதற்காக கூட இந்த விசயத்தை கையில் எடுத்திருக்கலாம். தேர்தல் வேறு வருகிறது. இதனால் யாரையும் இவ்விசயத்தில் நம்பக்கூடாது.

சுரேஷ் ஜீவானந்தம் said...

சரியாகச் சொன்னீர்கள்.
நீங்கள் சொல்லி இருப்பதைப் போலவே, கருணாநிதியின் மீது எனக்கு இருந்த அத்தனை மதிப்பும் இப்பிரச்சினையின் பின் சரிந்து விட்டது.

செம்மலர் செல்வன் said...

கடந்த ஒரு வருடத்தில் முல்லை பெரியாறு, ஒக்கேனக்கல், இலங்கை தமிழர் பிரச்சனை என அனைத்திலும் எதிர் கட்சிகளின் குரலுக்கு பின்னரே இவர் குரல் ஒலிக்கிறது.. அவர் ஒருவேளை செய்ய இயலாத அரசியல் சூழலில் இருக்கலாம், ஆனால் அதற்க்காக ஒரு நாடும், மக்களும் துன்புறுவதை சகிக்க முடியாது..
மின்வெட்டு தொல்லைக்கும் இதுபோன்ற விளக்க பொது கூட்டம் கூட்டி ஆற்காடு வீராசாமியும் இவரும் பேசுவார்களா? என்ன கொடுமை இது?

Anonymous said...

உடைந்த வாள் என்றாலும் ஒரு வாள் கொடு' என எழுதிய கலைஞர் மௌனம் சாதிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் அவர் தன் கட்சியையும் மௌனம் சாதிக்க வைப்பது தவறுதான்.

முதுமை, தமிழக ஆட்சியில் பெரும்பாண்மை இல்லை. முன்பு ஒரு தடவை ஆட்சிக் கலைப்பு, ஏற்கனவே புலிகளுக்கும் எம் ஜீ ஆர் அவர்கட்கும் இருந்த நெருக்கமான உறவு, ராஜீவ் கொலைக்காக தமிழக மக்கள் தேர்தலில் தி.மு.க வை தோற்கடித்தது இதையெல்லாம் கலைஞர் காரணங்காட்டலாம். நியாயமும் உண்டு.

ஆனால்......... தமிழக மீனவர்களை இலங்கைக்கடற்படை கொல்வதையும் கண்டிக்காமல் இருப்பதற்கு என்ன காரணமோ?

டில்லிக்கு அச்சமோ?


புள்ளிராஜா

Anonymous said...

http://www.hindu.com/2008/10/02/stories/2008100256071300.htm