கட்சி என்ற சொல்லை குடும்பச் சொத்தாகவும், அரசியல் என்ற சொல்லை கொச்சையாகவும், ஊழல் என்ற சொல்லை பிரபலப்படுத்திய கருணாநிதிக்கு ஒரு அரசியல்வாதியாக அதைச் செய்ய உரிமை இருக்கிறது.அதற்கு பிரதிபலனாக நிறைய அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார். அதே நேரம் அதற்கு போட்டியாக அடக்குமுறை என்ற ஆயுதத்தால் அனைவரையும் கட்டுக்குள் ஒரு வித பதற்றத்திலே வைத்து இருக்கும் ஒரு எதேச்சதிகார ஆணவப்போக்கு கொண்ட பெண்மணியை,ஒரு பெண் என்பதற்காக ஜெயலலிதாவை "அம்மா" என்று அழைப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல,அதற்கு அவர் எந்த வகையிலும் உரியவராக நடந்து கொண்டதே இல்லை. துதிபாடிகள் எல்லாம் தலைவன்,தலைவி என்று தான் குரல் கொடுப்பார்கள். எம்.ஜி.ஆர். , கருணாநிதி தலைவர் என்று தான் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே மாமா,மச்சான் போன்ற உறவுச் சொற்கள் வேறு தொனிகளில் தான் பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு பிடித்தால் "புரட்சித் தலைவி" என்று அழையுங்கள். 'காவிரித் தாய்', 'மகாமகத் தாய்', 'ஈழத் தாய்' என்று புகழவும் செய்யுங்கள்.இதை அரசியல் ரீதியாக கூறாமல் உணர்வு அடிப்படையிலே கூறுகிறேன். தயவு செய்து "அம்மா" என்று சொல்லுக்கு மட்டும் அகராதியில் புது விளக்கங்கள் சேர்க்காதீர்கள் !
2 comments:
‘அன்னை’ சோனியா பற்றி சொல்லவில்லையே செம்மலர் செல்வன்.
சிவகுமார்,சொல்ல மறக்கல... தங்கபாலு மட்டும் தான் அது மாதிரி உளறிக்கிட்டு இருக்கார்,மத்தவங்க அதை ரொம்ப சீரியசா எடுத்துகிறது இல்லை.
Post a Comment