நான் ஏன் அன்று அவளிடம் அந்த அளவிற்கு மூர்க்கமா நடந்து கொண்டேன். என்ன இருந்தாலும் நான் அவளை அடித்து இருக்க கூடாது? இப்பொழுது புலம்பி மட்டும் என்ன புண்ணியம்,அது சரி இந்தப் பையனை விட்டுப் போக அவளுக்கு எப்படி மனசு வந்தது? இப்போது அவளை அடித்ததில் தவறு இல்லை என்றே படுகிறது.
நான் உன்னை திருமணம் செய்வதற்காக நீ சார்ந்து இருக்கிற மதத்தைப் படித்து,தழுவினேன். எங்கள் வீட்டிலும் பையன் சந்தோசம் தான் முக்கியம் என்று நமக்கு ஒரு மறுப்பும் சொல்லவில்லையே.அந்த பெருந்தன்மை உன்னிடம் ஏன் இல்லாமல் போனது? நம் மகனுக்கு ஒரு விசேச நாளில் சந்தனமும்,குங்குமமும் வைத்து விட என் தாய்க்கு உரிமை இல்லையா? அது உனக்கு பிடிக்காமல் இருக்கலாம்.அதை நீ வீட்டில் வந்து என்னிடம் சொல்ல வேண்டியது தானே? என் தாயின் கண் முன்னே அதை அழித்துக் காட்டி என்ன சாதிக்கப் போகிறாய்? நம் மகன் நீ நம்பும் மதத்தையே வழிபடட்டும்.எனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. உனக்கே தெரியும்,நான் எந்த மதத்தையும் நம்புவன் அல்ல. நிலைமை அப்படி இருக்க ஏன் நீ இப்போதெல்லாம் வெறி பிடித்தவள் போல நடந்து கொள்கிறாய்?
நாம் நம்பாத ஒன்றை ஏற்றுக் கொண்டதில் நான் என்ன பெரிதாக விட்டுக் கொடுத்து இருக்கிறேன். நானும் அவளை அங்கே அடித்து இருக்க கூடாது. அது என் மிகப்பெரிய தவறு தான். என்னை நம்பி அவளுடைய வாழ்க்கையையே ஒப்படைத்து இருக்கிறாள்.அம்மாவை சமாதானப்படுத்தி கொள்ளலாம். அவள் எங்கு போயி இருப்பாள் ? பையனை அம்மா வீட்டில் விட்டு விட்டு அவளை தேடத் தொடங்க வேண்டும்.
யாரோ பொடனியில் அடிப்பது போல இருந்தது.
"என்னப்பா,மாஸ் முடிஞ்சு நான் இங்க வந்து அஞ்சு நிமிசமா நிக்கிறேன். எந்த லோகத்தில் இருக்க நீ இப்போ. உன்னைய நம்பி எப்படிடா என் கழுத்தை நீட்டுவது?"?? .

No comments:
Post a Comment