எவருக்கும் தொடக் கூட பிடிக்காத,சீண்டாத ஒரு சவலைப் பிள்ளையை அமூதூட்டி தோளிலும்,மடியுளும் கிடத்தி என்னை ஆளாக்கிய அன்னை நீ தான். உன்னில் பாதியும்,தந்தையில் பாதியுமாக நான் இருந்த போதும் உன்னையே முழுவதுமாக வரித்துக் கொண்டு நான் இருப்பதாக பிறர் கூறக் கேட்கும்போது அடையும் மகிழ்ச்சியை நான் வேறு எதிலும் பெற்றதில்லை. நான் பிறந்தது முதல் எனக்காக நீ பட்ட துன்பங்களும்,துயரங்களும் இன்னும் என் மனதில் ஆழமான வடுவாகவே நிற்கின்றன.பெற்ற கடனை செய்வதாக மட்டும் அல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும்,ஆத்மார்த் தமாகவும் செய்தாய்.இங்கு தான் மகனுக்குரிய ஆற்றாமையும் எனக்குள் எழுகிறது. என் பொருட்டு நீ படும் வேதனைகளை என்னால் காண சகியவில்லை.
இந்தக் கடிதத்தை யாராவது வாசிக்க நீ கேட்கையில் என்னுடைய உடல் எங்கு போனது என அறியாமல் என் உயிர் பிரிந்து இருக்கும். நீயும் அதைக் கண்டு துன்புற வேண்டாம் என்றே நானும் விரும்புகிறேன். நினைவு இருந்த நாள் முதல் நினைவு இல்லாது போன இந்நாளிலும் நீயே என் அம்மா. நினைவுகளைத் திரட்டி எழுத முயலும்போது கைபேசி ஒலிக்கிறது.
"ஏங்க,இன்னும் ஆபிசில் உக்காந்து என்னா பண்ணிக்கிட்டு இருக்கீங்க? இங்க உங்க மக பண்ற அடம் தாங்க முடியல. உங்க அம்மாவை பார்க்கணும்னு ஒரே பிடிவாதம்.நம்ம என்னா சென்னையிலா இருக்கோம்,உடனே போறதுக்குன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறா?""பதில் கூற முடியாமல் கண்ணீர் முட்டுகிறது.இதுவரை வெள்ளைத் தாளில் எழுதியதை கிழித்து எறிகிறேன்.
நீ எங்கும்,என்றும்,எக்கணத்திலும் என்னோடு இருக்கிறாய் அம்மா ! ! !

4 comments:
nalla pathivu chako
valththukkal
Nandri,Vidivelli
நல்ல பதிவு.
மிக்க நன்றி,அய்யா !
Post a Comment