நேற்று "வைரம்" என்ற மலையாளப் படத்தை கண்டு கொண்டு இருந்தேன். நம்ம பசுபதியும் அதில் நடித்து இருக்கிறார். ஒரு காட்சியில் நகைச்சுவை நடிகர் அசோகன், God's own country;But Devil's own people (தெய்வத்தின்ட சொந்தம் நாடு, ஆனால் சாத்தானின் மக்கள்) என்று கேரளாவைப் பற்றி கூறுவார். அவர்களைப் பற்றிய இந்த சுய விமர்சனம் மலையாளிகளுக்கு எந்த பாதிப்பை உண்டாக்கி இருக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு இந்த வசனம் மகிழ்ச்சியை அளிக்காமல் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. தமிழ்ப் படங்களில் இது போன்று சுய விமர்சனம் நாம் நினைத்தே பார்க்க முடியாது. மதம்,சாதி,இனம்,ஊர் போன்றவை திரைப்படங்களில் எங்காவது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் (அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட) போராட்டம் வெடிக்கும் அளவுக்குத் தான் நாம் இருக்கிறோம்.
பெரியார் (தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி) , ஜெயகாந்தன் (நாய் தான் எப்போதும் தன்னை நக்கிக் கொண்டு இருக்கும் - தமிழ் மொழி பற்றி கூறியது ) ,சாரு நிவேதிதிதா (எப்போதும் தமிழனை திட்டுவது ) ,கருணாநிதி (எம்.ஜி.ஆர் காலங்களில் தனக்கு ஓட்டு போடாதவர்களை திட்டும்போது) என இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழை,தமிழனை திட்டியதற்கு எதிர்ப்புகள் தான் அதிகம் இருந்தது.
இந்த வகையில் மலையாளிகள் (நான் பழகியவரை) கொஞ்சம் பரந்த மனப்பான்மை, நகைச்சுவை உணர்வோடு தான் எதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். இதன் பொருட்டே அவர்களால் எங்கும் கொடி நாட்ட முடிகிறது.
எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் ஒரு மனநிலையில் தான் நாம் இருக்கிறோம் என நான் நினைக்கிறேன்.இதற்கும் திராவிட கழகங்களின் தன்மானம்,சுயமரியாதை கோட்பாடுகள் காரணமா என தெரியவில்லை. தன்னைப் பற்றி சுய பரிசோதனை செய்யாமல் பிறரைப் பற்றி அவதூறும், காழ்ப்பும் ,விமர்சனமும் செய்வது இதன் நீட்சியாகவும் இருக்க கூடும்.
இங்கே நான் சூழ்ச்சி, சுயநலம்,எதார்த்தம், வெள்ளந்தி பற்றி குறிப்பிட விரும்பவில்லை...

4 comments:
தல,
மலையாளி சினிமாவ சினிமாவா பாக்கிறான், அரசியல அரசியலா பாக்கிறான். நடிக்க வந்த எவனும் அங்க அரசியல்ல பெரிய பதவில இருக்கிற மாதிரி தெரியல.
அவன் அவன் வேலய விட்டுட்டு அடுத்தவன் குடுமிய பிடிக்க போறதால தான் தமிழ்நாடும் தமிழ் மக்களும் இப்பிடி இருக்கிறோம்.
இன்னைக்கு கூட கேரளா தேர்தல்ல... நடிகை காவ்யா மாதவன் ஓட்டு போட வந்தப்போ வரிசையில் நிக்கல போல இருக்கு. உடனே வரிசையில் நிக்கிற ஒருத்தர் ஏம்மா வரிசையில வான்னு சொல்லியிருக்கார்.
இதே மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில நம்ம ஆளுங்க எப்பிடி பண்ணுவாங்கன்னு உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்ல.
ஆமாங்க தல, நாம் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. கமலா தாஸ் இறந்ததுக்கு அரசு மரியாதையோடு அடக்கம் பண்ணினாங்க.ஆளும் கட்சி,எதிர் கட்சி எல்லாருமே போனாங்க.தமிழ்நாட்டில சுஜாதா மாதிரி ஆட்கள் நிலைமையை நினைச்சுப் பாருங்க.
கேரளத்தில் மக்கள் பிளவு பட்டுக்கிடக்கவில்லை. அனைவருக்கும் ஒரே பண்பாடு, ஒரே தாய்மொழி என்று பற்றாகவே இருக்கிறார்கள். மதப்பிளவுகள் இருப்பினும் கூட இசுலாமியர், கிறுத்துவர், இந்துக்கள் எனவிருப்பினும், ஒரே தாய்மொழி, ஒரே பணபாடுதான். எந்த போலித்தனமும் கிடையாது.
ஆனால், தமிழ்நாட்டில், தமிழன் என்று உண்மையிலே தன்னை நினைப்பவன் கிடையாது.
தமிழ்ப்பார்ப்ப்னர் சமசுகிருதத்துக்காகவும், பார்ப்பனப்பாசைக்காகவும் சண்டை பிடிக்கிறார்.
விஜயகாந்தும், வைக்கோவும், வீட்டில் தெலுங்குதான் பேசுவர். விஜயகாந்து முழுக்கமுழுக்க தெலுங்குக்கலாச்சாரமே. நாயுடுக்களும் நாயக்கர்களுக்கும் தமிழில் மீதோ, தமிழர் பாரம்பரியத்தின் மீதே பற்றுகிடையாது. எனவேதான் விஜய்காந்த் இந்தி படிப்போம் என்கிறார்.
சௌராஷ்ட்ரர்கள், வீட்டில் அவர்கள் மொழிதான் பேசுவர். அவர்களுக்குள்ளேதான் பழகிக்கொள்வர்.
பார்ப்ப்னர்களப்பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்தாலும், தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழ் மொழியென்றால் அவர்களுக்கு நக்கல்தான். ஒரு உவேசாவையும், ஒரு பரிதமால்கலைனரையும் காட்டி தங்கள் தமிழர்வெறுப்பை மறைத்துக்கொள்ள முயல்வர்.
இவர்களே உயரத்தில் வாழ்ந்து மற்ற தமிழர்களைப் புழுப்பூச்சிகளாக்கி விட்டதால், எவனும் தன்னைத் தமிழன் எனச்சொல்ல பயப்படுகிறான். ஏனெனில், உங்களைப்போன்றவர்கள் கிண்டலடித்தான் என்ன செய்வது எனப்பயம் !
இதனால் நொந்த சிலர் நீங்கள் சொலவதைப்போல பேசுகிறார்கள். அது உங்களுக்கு பிரிவினைவாதமாகத் தோன்றும்.
கேரளத்தில் இதற்கிடமேயில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் மலையாளிகள். எல்லாருமே ஒரே இனம். ஒரே குலம் என்னும் போது, பிரிவினை பேச, நம் மொழியைக்காக்கவேண்டும் என்று பேச்சுக்கு இடமேயில்லை.
நாமனைவரும் தமிழர்கள் அல்ல. அதோடு விட்டால் சரி: கூடவிருந்தே குழிதோண்டுபவர்கள் எனபதை மறக்கவேண்டாம். இலங்கைத்தமிழர் விடயத்தில் ஒன்று சேர்ந்தார்களா தமிழர்கள் ? போதுமா இன்னும் வேணுமா ?
என் தாய்மொழி தமிழ்,நான் தமிழன் என்பதில் என்றுமே எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.அதை எங்கும் பெருமையுடனே தான் கூறுவேன். நம்மை பற்றிய சுய விமர்சனம் தேவை என்று தான் கூறுகிறேன். வெறுமனே உணர்ச்சிவசப்படுதலை குறைக்க வேண்டும். பச்சை தமிழனாக இருப்பவர்கள் தமிழனுக்கு என்ன செய்தார்கள்? இதற்கு சாதி,மதம் காரணம் இல்லை. கற்பு பற்றி பேசிய நடிகை இன்று தேர்தல் கூட்டங்களில் பேசுகிறார். இன்று தமின்க்ளிஷில் பேசும் அனைவரும் பார்ப்பனனோ,தெலுங்கனோ,மலையாளியோ கிடையாது. மலையாளியிடம் இருக்கிற தாய்மொழி பற்று நம்மிடம் இல்லாமல் போனது ஏன்? வைகோ தெலுங்கு பேசினாலும் தமிழுக்காக,இனத்துக்காக போராடவில்லையா?
Post a Comment