Monday, February 14, 2011

ஒரு மடல்

வணக்கத்துக்குரிய தெய்வத்திரு ஆலமுத்து மூப்பனார் அவர்களுக்கு உங்களது கொள்ளுப்பேரன் செம்மலர் செல்வன் எழுதிக்கொள்வது.

என்னைய நீயோ, உன்னை நானோ பார்த்ததோ இல்லை. ஆனாலும் உனக்கு எத்தனையோ மகன்,மகள்,மருமக,பேரன்,பேத்தி இருக்குஇருக்கும்போது என் மேல மட்டும் உனக்கு ஏன் இவ்வளவு பாசம்? Why it's only to me great grandpa? உன் பேரைத் தான் எனக்கு முதலில் வைக்கணும்னு சொன்னாங்களாம். நான் உன் பேரை வைக்காத கோவமா உனக்கு? நேத்து வீட்டுல சொன்னாங்க, ஒரு ஜோசியம் பாக்கிறவன் சொன்னானாம், நீ பண்ணின பாவம் தான் என்னையப் பிடிச்சு ஆட்டுதுன்னு. நீ முதலில் கட்டி வந்த பொண்டாட்டிய வீட்டை விட்டு துரத்திட்டியாம். அவனவன் நாலஞ்சு பொண்டாட்டி கட்டி வாழ்ந்த காலத்துல இதெல்லாம் ஒரு தப்பாடானு வியாக்கியானம் பேசாத, நீ ! நீ என்னா பாவம் பண்ணினனு என்னையவே கேக்காத, நீ!
எந்த காலமா இருந்தாலும் பெண் பாவம் பொல்லாதது ,பெரிசு. உன் தம்பிக்கும் கூட கல்யாணம் பண்ணி வைக்காமா பொறுப்பு இல்லாம இருந்து இருக்க, நீ!

சரி விடு , இதெல்லாம் பழைய கதை! உன்னைப் பத்தி யார் என்ன சொன்னாலும் எனக்குத் தான் வருத்தமா இருக்கு. உன் மேல பழியைச் சுமத்தின அந்த ஜோசியக்காரனை நான் பார்த்துக்கிறேன், நீ சும்மா பீல் பண்ணாத, நான் தான் இருக்கேன்ல! i love you , Great Grandpa!

சீக்கிரம் நேரில் சந்திப்போம் !

அதுவரை பாசத்துடன்,
உனது செல்லப் பேரன் ஆலமுத்து / (செம்மலர் செல்வன்)

2 comments:

raghuvaran said...

goiyala... evalavu vaanginalum, valikalanu thanaeya solluva...! :)

செம்மலர் செல்வன் said...

புண் வலிக்கத் தான் செய்யும்,ஆனா அந்தப் புண்ணை வாயால ஒரு ஊது , ஊதும் போது ஒரு சுகம் இருக்கும். அந்த சுகமே என்னை வழி நடத்திச் செல்கிறது.