Friday, September 26, 2008

தமிழ் , தமிழன் மீதான மலையாளியின் வெறுப்பு

நம் தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை.
தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த தமிழ் சினிமாவின் பார்வை இன்னும் கொஞ்சம் காமெடி. ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் லேசாக உதட்டை அழுத்தி, `புட்டு வேணுமா...' என்று கேட்கும் டயலாக் கண்டிப்பாக உண்டு.
திருமதி நாயரின் முண்டோடும், மாராப்பு இல்லாத ஜாக்கெட்டோடும் தமிழ் சினிமாவினர் தங்களது லொள்ளுத்தனத்தை நிறுத்திக் கொண்டார்கள்.
மலையாளிகள் அப்படி அல்ல. தமிழர்கள் பற்றிய காட்சியமைப்புகளும் நம்மைப் போல், முண்டு, ஜாக்கெட் என ஆடையோடு முடிந்துவிடும் ஒரு ரகம் அல்ல. சூலம் மாதிரி பலமுனைகள் கொண்டது! (குத்தினால் ஆள் குளோஸ்)
மலையாளத் திரைப்படங்களில் தமிழர்களைக் குறிக்கும் விசேஷப் பெயர், பாண்டி! மூன்றெழுத்துப் பெயர் என்றாலும் பாண்டிக்கு அர்த்தங்கள் முந்நூறு. குளிக்காதவன்... அசிங்கம் பிடிச்சவன்... இப்படி! ஏதாவது ஒரு மலையாளியை, பாண்டி மாதிரி இருக்கிறியே என்றால் போதும்; லாரியில் அடிபட்ட மாதிரி சிதறிப் போவார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு, `அக்கரை அக்கரை அக்கரை' என்றொரு படம்ப்ரியதர்ஷன் இயக்கியது. கடத்தல்காரன் ஒருவனைக் கண்டுபிடிக்க அமெரிக்கா செல்லும் மோகன்லால், அங்குள்ள உயரமான கட்டடங்களைப் பார்த்து பிரமித்தவாறு, அருகிலிருக்கும் சீனிவாசனிடம் இப்படிச் சொல்வார்; ``எல்.ஐ.சி. பில்டிங்கைப் பார்த்து வாய் பிளக்கும் தமிழர்கள், இதைப் பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்திடுவான்களே!''
எல்.ஐ.சி. போலொரு கட்டடம் அன்று கேரளாவில் இல்லை. அந்த நெஞ்செரிச்சலில் அவலை நினைத்து இடித்த உரல்தான் மேலே உள்ள மோகன் லாலின் பேச்சு.
மற்றொரு படம், சுரேஷ் கோபி நடித்தது. பெரிய பீப்பாய் போலிருக்கும் நடிகர் ராஜூதான் போலீஸ் அதிகாரி. வழக்கம் போல கீழ்மட்ட அடியாளாக ஒரு தமிழ்வில்லன். ``நீ பொன்னுசாமி இல்லையா?'' ராஜூவைப் பார்த்து நம் தமிழ் ஆளு கேட்கிறார். தெரியாமல் சாணியை மிதித்த தொணியில் ராஜூ சொல்வார்; ``என்னது... பொன்னுச்சாமியா? நான் நல்ல ஐயங்கார் குடும்பத்துல பிறந்தவனாக்கும்.''தமிழ்ப் பெயர்களான குப்புசாமி, பொன்னுச்சாமியெல்லாம் மலையாளிகளைப் பொறுத்தவரை தரக்குறைவானவை. தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தமானவை... அப்படியொரு ஆதிக்க மனோபாவம்.
திரைப்படங்களில் அரசியல் பேசுவது மலையாளிகளுக்கு கள்ளும், கருமீனும் ஒன்றாக கிடைத்த மாதிரி. அதுவும் முல்லைப் பெரியாறு என்றால் கொள்ளை இன்பம். கூத்தாடி விடுவார்கள்!
மோகன்லாலின் `உடையோன்' படத்தின் வில்லன் சலீம்கௌஸ் ஒரு தமிழன். தமிழன் சொல்வான்: ``தமிழ்நாட்டுல மழை பெஞ்சாதான் உங்க கிணத்துல தண்ணி'' மோகன்லாலுக்கு நக்கல் அதிகம். அவர் சொல்வார்: ``அதுக்கு உங்க ஊர்ல மழை பெஞ்சாதானே!'' இன்னொரு காட்சி. தமிழ் வில்லன் சொல்வார்: ``தமிழ்நாட்டு கரும்பு சாப்பிடுங்க, தேன் மாதிரி.'' பதிலடி பின்னாலேயே வரும். ``எங்க ஊர் தண்ணியே தேன் மாதிரிதான்!''
இது பரவாயில்லை. தமிழனால் கேரளாவுக்கு குலநாசம் என்றொரு மனப்பிராந்தி மலையாளிகளுக்கு ரொம்பவே உண்டு. பல மலையாளத் திரைப்படங்களில் மெயின் திரைக்கதையே இந்தப் பயங்கர கற்பனைதான்.
இதுவும் மோகன்லால் படம். அவரது அண்ணனாக நெடுமுடிவேணு. அக்மார்க் சுதேசியான அவர் கோக், பெப்சி முதலான தயாரிப்புகளை ஊரில் நுழையாமல் தடுத்து நிறுத்துவார். அவரது சுதேசிக் கனவைத் தகர்க்கும் விதமாய் அயல்நாட்டுப் பொருட்களின் விற்பனையாளராக வருகிறவர் ஒரு தமிழர். சில பல சண்டைகளுக்குப் பிறகு தமிழனைத் துரத்தியடித்து சொந்த தேசத்தின் கலாச்சாரத்தை மீட்டெடுப்பார் மோகன்லால்.
`லாலேட்டன்' எனச் செல்லமாய் அழைக்கப்படும் மோகன்லாலின் பெரும்பாலான படங்களில் தமிழர்களுக்கு எதிராய் இப்படி வாலாட்டும் காட்சிகள் மிக அதிகம்.
``இதெற்கெல்லாம் நேர்மாறாக அங்கே எல்லா காலேஜ் ஃபங்கஷன்லயும் நம்ம ஊரு சினிமாப் பாடல்கள் வெகு பிரபலம். எழுந்து நின்று ஆட்டம் போடுவாங்க. கூடவே தமிழ் சினிமாவினால மலையாளிகளுக்கு வர்த்தக ரீதியாக நிறைய லாபமும் கிடைக்குது.
சொற்ப சம்பளம் வாங்குற மலையாள நடிகர், நடிகைககூட தமிழ் சினிமாவுக்கு வந்தா லட்சக்கணக்குல சம்பளம் வாங்குறாங்க. நயன்தாரா முதல் நரேன் வரை பல உதாரணம்.... எல்லாரையும் தூக்கி வச்சு கொண்டாடறது தமிழன்தான்.
தமிழ்நாட்டுல இருக்கற நிறைய டீக்கடைகளை நடத்தறது மலையாளிகள். அவ்வளவு ஏன், அரிசி, பருப்பு வகையறாக்கள்கூட இங்கே இருந்துதான் கேரளாவுக்குப் போகுது. அப்படியிருக்க, தொடர்ந்து தமிழர்களை தங்களோட சினிமாக்களில் கேவலமா காட்டறாங்கன்னா மனதளவுல அவங்க குறைபாடா இருக்காங்கன்னு அர்த்தம்'' என்கிறார் தமிழ் சினிமா பிரபலம் ஒருவர் .... (குமுதம் )

மோகன்லால் , சுரேஷ் கோபி போன்ற நடிகர்கள் தமிழில் நடித்து பணம் அதிகம் சம்பாரிக்க ஆசைப்பட்டார்கள்.. ஆனால் அவர்கள் நடித்த படம் இங்கு ஓடவில்லை. அது போக மலையாள திரை உலகில் அவர்கள் பெரிய நடிகர்கள் ஆக இருந்து கூட அவர்களால் நயந்தாரா சம்பளம் கூட வாங்க முடியல.. தமிழ் திரை உலகின் வியாபார உலகம் பெரியதாக இருப்பது அவர்கள் கண்ணை உறுத்துகிறது....
அரசியல் ரீதியாக தமிழகத்தில் நாற்பது தொகுதிகள் உள்ளது... நமது அரசியல்வாதிகள் நமது மக்களுக்காக எதுவும் செய்ய மாட்டாங்க ... அது நமக்கு தெரியும்..நம்ம மத்திய அமைச்சர்கள் தமிழ் நாட்டை வளர்க்க நம்மள அளிக்க பாக்கிறாங்க என்ற எண்ணம் அவங்ககிட்ட அதிகமா இருக்கு..இப்போ முல்லை பெரியாறு தண்ணி கேட்டு விட்டா நாளைக்கு மற்ற விசயங்கள் அது போல ஆகிடுமென நினைக்கிறார்கள்..
அது போக நமது தமிழ் மொழியில் இருந்து தான் மலையாளம் உருவானது என்ற கசப்பான உண்மை அவர்கள் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது..
கேரளாவில் வாழ்கிற தமிழனின் வாழ்நிலை , தொழில் சார்ந்து அவர்கள் நம்மை "பாண்டி " என்று விளிக்கிறார்கள்.. ஆனால் இதற்கு நேர்மாறான நிலையில் நமது வந்தாரை வாழ வைக்கும் நமது தமிழகம் உள்ளது.. அவர்களிடம் மரியாதையாக நடக்கிறோம்.. அவர்கள் இந்த ஊரில் தொழில் நடத்த எந்த தடங்கலும் செய்வது இல்லை.. ஆனால் கேரளாவில் ஒரு தமிழன் அவர்களிடத்தில் வேலை பார்த்து காலம் தள்ளுவது மிக கடினம்.. தொழில் நடத்துவது சொல்லவே வேணாம் ..
நம்ம (என்னையும் சேர்த்து தான் ) நயன்தாரா, அசின்,பாவனா பார்த்து ஜொள்ளு விட்டுகிட்டு இருக்கோம்..எந்த மொழி மீதும்,மக்கள் மீதும் தனிப்பட்ட விரோதம் தவறு என்றாலும் நம்ம வீட்டை (தமிழ்,தமிழன்) பத்தி கேவலமா பேசினா நம்ம அவங்கள கஞ்சி,கொலையாளி என்று சொல்லாம மௌனமாக அவர்களை களைஎடுப்பு செய்வோம்...

13 comments:

குடுகுடுப்பை said...

சேரன் தன் நாட்டிளம் பெண்களிடம் பள்ளி கொள்வோம்.

பாரதி சொன்னதை செய்கிறோம்.

Madhu Ramanujam said...

மலையாளப் படங்கள் ஒன்றிரண்டு பார்த்த அனுபவம் மட்டுமே. அதனால் நீங்கள் சொல்லியுள்ள விஷயங்கள் பல தெரியவில்லை. சற்றே வருத்தமாயுள்ளது. ஒரே நாட்டிற்குள், எத்தனை பாகுபாடுகள்!

Anonymous said...

in Tamil Nadu local holiday for onam in few districts. but kerala no leave for Pongal in districts like TVM, Edukku and Palakkd where thickest tamil population.

Our govt. lost so many projects to kerala such as airport (sizable south population using their airports. the airport officials behavious towards tamil is very bad).

Most resently we lost Colochel port project to Kerala's Vilinjam.

JJ gave nearly 50 lakhs to keala's Anju George and house/car to Shiny Wilson.

Anonymous said...

சோப்பிற்கு மத்திய அரசு வரி அதிகரித்த போது கேரளா முதலமைச்சாராகவிருந்த நாயனார் சொன்னார் "விலை ஏறிவிட்டதால் தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை ஏன்னா அவுங்க வாரத்துக்கு ஒரு வாட்டிதான் குளிப்பாங்க, நாம அப்படியா?"

ஒரு முதலமைச்சர் அதுவும் கம்யூனிஸ்டின் மனோபாவமே இப்படியுள்ளது.

ஆனால் இதற்கு காரணம் நம்மைவிட பெரியதான சமாச்சாரங்களைப் பார்த்து ஏற்படும் போபியாதான். தமிழிலிருந்து பிரிந்து சென்றதுதான் மலையாளம்.மீண்டும் பலம் மிக்க தமிழில் மலையாளம் அழிந்து போய்விடுமே என்ற பயம்தான். இந்த complex நம்ம நாட்டை பார்த்து பாகிஸ்தானுக்கும் உண்டு. இந்தியையும் சேட்டுகளையும் பார்த்து கொஞ்சம் நமக்கும் உண்டு (இப்போது இல்லை என் நினைக்கிறேன்).

நம்மை பாண்டி என அழைக்கிற மலையாளிகளை கோவையில் நாங்கள் கஞ்சி என அன்புடன் அழைகிறோம் ;-)

Anonymous said...

பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாரயணன் இலங்கைத் தமிழருக்கு எதிராக செய்யும் சதி ஏன் தெரியுமா? ஒரு மலையாளியே தன் வாயல் சொன்னார்: 'மலையாளிக்கு தனி நாடு இல்ல. தமிழனுக்கு கிடைச்சா நாடு கிடைச்சா, தமிழ்நாட்டுக்காரனுக்கு கொம்பு வந்திடும்'

ம‌ன‌சிலாயிடுச்சா?

செம்மலர் செல்வன் said...

பாரதி நம்ம அவங்ககிட்ட என்ன செய்யனுமோ அதை முன்கூட்டியே சொல்லி இருக்கார்.. இதுலயாவது நம்ம பாரதியை பின்பற்றுகிறோம்..


ஒரே நாட்டுக்குள்ள இருக்கும்போது இவ்வளவு பாகுபாடு இருந்தால் பரவாயில்லை.. நாடு கடந்தும் எங்கு சென்றாலும் அதே எண்ணத்துடன் இருக்கின்றனர். தமிழன் மட்டும் தான் தேசியம்,ஒருமைப்பாடு என்று கூறுகிறோம்.. ஒரு வெளிநாட்டுக்காரன் மலையாளிய பார்த்து நீ இந்தியாவா? கேட்டா நான் கேரளா அப்படின்னு சொல்லுவான்..ஆனா நாம நம்ம தமிழன், , இன்னொரு தமிழன் கிட்ட கூட ஆங்கிலத்துல தான் பேச ஆரம்பிக்கிறோம்.. நம்மளும் மாற வேண்டியது நிறைய இருக்கு..

Subash said...

நல்லாதா சொல்லிருக்கீங்க!!!
:)

செம்மலர் செல்வன் said...

நம்ம உள்ளூர் அரசியல்வாதிக சண்டையில அடுத்த மாநிலத்துடன் எப்படிபட்ட உறவோடு இருக்க வேண்டும் என்ற கொள்கை இங்கு இருக்க வேண்டும்.. அச்சுதானந்தன் , கலைஞர் ஒரு குத்தகைகாரர் மாதிரி நடந்துக்கிறார் சொன்னார்.. ஆனா இவர் இங்க ஓணம் விடுமுறை விடுறார்.. ஜெயலிதா அம்மா அங்க குருவாயூர் யானை விட்டுட்டு வாராங்க..

நாராயணன் மாதிரி ஆளுக வட நாட்டுக்காரன் கிட்ட இலங்கை தமிழனுக்கு உதவி பண்ணாதீங்க..அப்படி உதவி பண்ணி தனி நாடு வாங்கிட்டா இங்க இருக்கிற தமிழ் நாடு இலங்கை கூட ஒன்றாகி விடும் .. இது நாட்டு ஒருமைபாட்டுக்கு ஊறு விளைவிக்கும்னு சொல்வாரு.. கூடவே சுப்ரமணியசாமி மாதிரி அரைவேக்காட்டு ஆளுக சில பேரு இங்கயும் இருக்காங்க.. அப்படி ஆளுக இப்படி ஆளுக கூட சேர்ந்து ஆப்பு அடிக்குறாங்க..

செம்மலர் செல்வன் said...

குளச்சல் துறைமுகம் நம்ம கை விட்டு போய்டிச்சு.. அதை பத்தி கேரளாவுல இருக்கிற தொலைக்காட்சிகள் நம்ம பாலு இதை வச்சு அரசியல் (கொளச்சல் ) பண்றதாக சொல்லிகிட்டே இருந்தாங்க.. ஆனா இங்க அதை பத்தி மூச்சே இல்ல.. நாட்டிலே பெரிய துறைமுகம் (இயற்கை) தூத்துக்குடி வளரவே நிறைய செய்யலாம்.. இதை பத்தி பேச கேக்க இங்க யார் இருக்க? கலைஞர், ஜெயா,சன் எல்லாம் அரசியல் சார்பு.(சுய சார்பு சார்ந்த அரசியல்) - பொது மக்கள் நலம் சார்ந்த அரசியல் அல்ல,,

தண்ணி நம்ம கேரளாவுல இருந்து கேட்பதால் இப்படி சொல்றாங்க.. அந்த ஊர்காரங்க எல்லாம் இங்க வேலை செய்கிறார்கள்,படிக்கிறார்கள்.. அவங்களாவது இந்த ஊருக்கு (தமிழ் நாட்டுக்கு ) தண்ணி விடுங்கனு சொல்லுராங்கள..

ஓணம் பண்டிக்கைக்கு விடுமுறை விட்டதுக்கு நன்றி தெரிவிச்சு கூட்டமா போயி சொல்றாங்க.. கேரளாவுல இருக்கிற தேயிலை தோட்டத்துல வேலை பாக்கிற தமிழனுக்கு சாதி சான்றிதழ் தர மறுப்பு... தமிழன் நிலம் வாங்க தடை..

புருனோ Bruno said...

சிந்திக்க வேண்டிய பல கருத்துக்கள்

உயிர்நேயம் said...

இது எல்லாவற்றுக்கும் காரணம் அரசு அலுவலர்கள்தாம்.

எட்வின் said...

அவர்கள் அப்படித் தான் ஆரம்பம் முதலே! நம்மை பாண்டி எனத் தான் அழைத்து வருகிறார்கள்.ஆனாலும் எல்லோரையும் அப்படி சொல்லிவிட முடியாது.நடிகர் ஜெயராம் போன்ற தமிழை மதிக்கும் சில நடிகர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.நம்மவர்களும் குறைந்தவர்கள் அல்ல.கஞ்சி, கொலையாளி என அவர்களுக்கு பட்டம் கட்டத் தான் செய்கிறார்கள். விழாக்களில் நம்ம பாடல்களை ஒலிக்கச் செய்கிறார்கள் என நீங்கள் கூறியிருப்பது 100% உண்மை. இன்று கேரள இளைஞர்கள் அதிகம் பார்ப்பது நம்மவர் சூர்யாவின் படம் தான், அடுத்த படியாக விஜயின் படங்கள். காலம் மாறி வருகிறது செம்மலர் அவர்களே. எனக்கு தெரிந்த வரை இளைஞர்கள் இன்று லாலைப் போலவோ, ஒரு அச்சுதானந்தனைப் போலவோ பேசுவது இல்லை. எனக்கு தமிழ் நண்பர்களைப் போலவே சரிசமமாக கேரள நாட்டு நண்பர்களும் உண்டு என்பதால் நான் இதைச் சொல்கிறேன்.நான் இரு வாரங்களுக்கு முன்பு மஸ்கட்டிற்கு பயணம் செய்து கொண்டிருந்தேன், அப்போது ஒரு ஓமன் நாட்டு நண்பர் காரை செலுத்திக் கொண்டிருந்த என் கேரள நண்பரிடம் நீங்கள் கேரளா தானே! பார்த்தாலே தெரிகிறதே என அரபியில் வினவினார்...அதற்கு நண்பர் சொன்ன பதில் என்ன தெரியுமா? நான் இந்திய நாட்டைச் சார்ந்தவன்!!! நான் அசந்து போனேன். இப்படி இன்று காலம் மாறி வருகிறது. எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டுமென தான் தமிழன் நினைப்பான்.வந்தாரை வாழ வைத்தவர்கள் அல்லவா நாம்.இந்த நாற்காலி சண்டைகள் தான் முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சினைகளுக்கு இன்றும் ஒரு தீர்மானம் கிடைக்காமலிருப்பது.ஆனாலும் தமிழன் தன்மானத்தை யாரிடமும் விட்டுக் கொடுப்பது அழகல்லவே.

Anonymous said...

Kanji pasanga