Tuesday, September 30, 2008

தமிழை யார் காப்பது?

ஒருவர் வீட்டில் தாய் இருக்கிறார்.அவருக்கு ஒரு மகன். வீதியில் இருந்து ஒரு வேசி வருகிறார்..அவர் மகனிடம் கூறுகிறார்,,நான் உன் தாயை விட அழகாவும்,அறிவாகவும் உள்ளேன்..என்னை தாயாக ஏற்றுக்கொள்ளவும் என்கிறாள்..மகனும் அதற்கு சம்மதிக்கிறான்.. படிக்கவே நா கூசுகிறதா ? ஆனால் இங்கு நடைமுறையில் அதுதானே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.. ஈராயிரம்,மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி நம் முன்னோர் அரும்பாடு பட்டு சீராட்டி வளர்த்த மொழியை ஒரு ஐம்பது ஆண்டு இடைவெளியில் நாம் கொலை செய்கிறோம்.. நாம் செய்வது தவறு என்று அறியாமலே.. "குஞ்சு மிதிச்சு கோழி சாகுமா? ஆனா இங்க சாகுதே ; "
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த யாம் இன்று கடை விரித்து பிறத்தியார் மொழி வளர்க்கிறோம். நாலு வார்த்தை பேசினால் 2, 3 வார்த்தை ஆங்கிலத்துல தான் பேசுகிறோம்.. ஓகே டா .. பாய்..டேக் கேர். c u .னு சொல்றோம்.. அவன் என்ன ஆங்கில நாட்டுக்காரனா ? சரி டா , ஒடம்ப பாத்துக்கோ,பாப்போம் னு சொன்னா நம்ம வாயில் உள்ள முப்பத்திரண்டு பற்களும் கொட்டி விடுமா என்ன? இல்லை புஷ் மாமாவும், விக்டோரியா மாகராணி வருத்தப்படுவார்களோ? சர்க்கரை இனிக்கிறது என்பதற்காக நீருடன் சேர்ந்து குடித்தால் எப்படி இருக்கும்?
மொழி சார்ந்து ஒரு மாநிலம் பிரிக்கப்பட்டு உள்ளது..மொழி அழியும் பொழுது அவ்வினம், கலாசாரம், பண்பாடு அழியும் சாத்திய கூறு உள்ளது.. இல்லையெனில் நாமும் அமெரிக்க , பிரித்தானியா காலனியாதிக்கத்தில் மறைமுகமாக இருக்க வேண்டியது தான்.
தமிழக முதல்வர் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒரு மருமகள் , தனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது..அதனால் ஆங்கிலத்தில் பத்திரிக்கை ஆரம்பிக்க போகிறேன் என்று சிறிதும் வருத்தமின்றி ஒரு வார இதழில் கூறுகிறார்.. இதை பார்க்கும் படிக்கும் அடிமட்ட தமிழன் என்ன நினைப்பான்? படிக்காதவன் இதை செய்வது இல்லை.. படித்த யாமே இதை செய்கிறோம்..
ஊடகங்களில் நடக்கும் மொழி கொலைக்கு அளவே இல்லை.. நமீதா, குஷ்பூ, ரம்பா , நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் பேசுவதே தமிழ் என்று நாம் புல்லரித்தால் நாம் அடையும் பேறு தான் என்ன.. ஒரு பாமர தமிழன் எவனாவது அவன் மொழியினில் செப்பினால் இந்த வாயாடிகளுக்கு புரியுமோ?
நாம் எந்த மொழி,இனம் என்று பிறர் புரிந்து கொள்வதற்கு நம்முடைய பெயரினை வைத்து அறிந்து கொள்ளலாம்.. கிறித்தவ மக்கள் முன்னராவது ராயப்பன், சூசை அப்படி என்று வைப்பார்.. இப்போ நேரடியாக அமெரிக்கக்காரன் பெயர் தான்.. என்ன வாயில தான் நுழைய மாட்டேங்குது? இஸ்லாம் மதத்தினரும் அவ்வாறே தான்.. குர் ஆன், அரபி , உருது பெயர்கள் தான்.. இதை பார்த்த இந்து மதத்தினரும் சமஸ்கிர்தம்,வட மொழி பெயர்களை வைக்கின்றனர்.. நாம் வாழும் இறை நம்பிக்கை சார்ந்தும்,இயற்கை சூழல் சார்ந்தும், அன்பு,நேசம் சார்ந்தும் நம்முடைய மொழி பெயர்களையே வைக்கலாம்.. பெயர்களுக்கு பஞ்சமா என்ன இங்கு?
மானாட மயிலாட , நாக்க முக்க கொண்டாடும் தமிழ் சமூகத்தில் தமிழ் தாய் வாழ்த்தை பாட சொன்னால் சிரிப்பார்கள். நிலம் கெடுத்து, நீர் வளம் குறைந்து , மண் வளம் அற்று, விலங்குகள் அருகி , மன வளமும் குன்றி இப்போது மொழி கொலை செய்வோம்..
தமிழினில் பேசியதற்காக மாணவன் ஒருவனை முழங்கால் மொட்டி போட சொல்லும் சமுதாயம் , நாக்கை அறுக்காமல் விட்டார்கள், அவ்வாறு அறுத்தால் அவர்கள் கற்று தரும் மொழி கூற நாக்கு இருக்காதோ என்ற எண்ணத்தில் விட்டு விட்டார்களோ.. எந்த ஒரு நாட்டிலாவது அவன் மொழியை பேசியதற்க்காக இப்படி ஒரு தண்டனை கிடைக்குமா? பேசாமல் இருந்தால் அல்லவா தண்டனை என இருந்து இருக்க வேண்டும்.. இதற்க்கு பள்ளிகூடங்கள் காரணம் இல்லை.. நாம் பிள்ளை நம்மை டாடி, மம்மி என்று அழைக்க வேண்டும்.. அமெரிக்க நாடுகளில் பணி புரிய வேண்டும் என்ற எண்ணமே.. அவன் ஆங்கிலத்தில் படிக்கட்டும் ; அதை அவன் அமெரிக்காவிலோ இல்லை அடுத்த மாகாணத்திலோ பேசட்டும்.. எம் தமிழரிடத்தில் தமிழில் பேசட்டும்.. நாம் பேசும் மொழி எதற்கும் உதவாது என்று நீங்கள் கூறினால் நீங்கள் மட்டும் எப்படி நல்லவரா இருக்க முடியும்.. குழந்தைகளிடத்தில் நல்ல எண்ணங்களை விதையுங்கள். ஆங்கிலமும் படிக்கட்டும்,தமிழும் படிக்கட்டும்.. இரண்டையும் ஒன்றாக பேசி இரு மொழிகளையும் கலந்து கொலை செய்ய வேண்டாம்..
தமிழக அரசானது தமிழ் மொழியினை பள்ளிகளில் கட்டாய பாடமாக்க வேண்டும்.(தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு மட்டும்)..
தமிழர்களாகிய நாம் நம்மிடையே பேசும்போது கூடுமானவரை நமது தமிழிலே பேசலாமே.. ஒன்பது கோடி மக்கள் பேசும் இம்மொழியை நாம் பேசா விட்டால் மற்றவரா இதை காப்பாற்றுவார்?

7 comments:

ஆட்காட்டி said...

இதற்கு நல்ல உதாரணம், பக்கத்து வீட்டுக்காரனை அப்பா எண்டு சொல்லுறது தான் சரியா இருக்கும்.

அருள் said...

த‌மிழ்ல‌ பேசுங்க‌, த‌மிழ்ல‌ பெய‌ர் வைங்க‌ன்னா எல்லாம் ந‌ம்ம‌ல‌ ஒரு மாதிரியா இல்ல‌ பார்கிறான்....
என்னா நீ த‌மிழ் த‌மிழ் சொல்லிகிட்டு இருக்க‌ அப்ப‌டின்றாங்க‌. ஆனா இந்த‌ அரை வேக்காட்டுங்க‌ளுக்கு தெரிய‌ல‌ த‌மிழ்நாட்டுல‌ இருக்கிற‌வ‌ன் த‌மிழ் த‌மிழ்ன்னு சொல்லாம‌ அமெரிக்க‌ கார‌னா சொல்லுவான், இல்லை ஆஸ்திரேலியா கார‌ன் சொல்லுவானா?

இங்கிலீசு கார‌ன் வ‌ந்தாலும் வ‌ந்தான்....ந‌ம்ம ஆளுங்க‌ இங்கிலீபீச‌ தூக்கி வ‌ச்சுகிட்டு ஆடுர‌து இருக்கே......எப்பா தாங்க‌ முடிய‌ல‌டா சாமி.....இங்கிலிசு கார‌ன்கூட‌ அப்ப‌டி தூக்கி வ‌ச்சுகிட்டு ஆட‌மாட்ட‌ன் போல‌.......

ந‌ண்ப‌ர்க‌ளுக்கு கொடுக்கும் திரும‌ண அழைப்பித‌ழ‌ த‌மிழ்ல‌ அடிச்சா புரியாதாம் யாருக்கும்........
இங்கிலீசுல‌ அடிச்சாதான் இவுங்க‌ ச‌மூக‌த்துல‌ வ‌ள‌ர்ந்த‌வுங்க‌ன்னு தெரியுமாம்........இவ‌ங்க‌ளையெல்லாம் என்ன‌ சொல்லி திருதுற‌துன்னே தெரிய‌ல‌ப்பா

செம்மலர் செல்வன் said...

ஆட்காட்டி அவர்களே, உங்கள் உதாரணமே மிகச் சரியானது..

Anonymous said...

கட்டுரையைப் படித்தேன் நண்பரே.

என் தளத்துக்கும் வாருங்கள்.

பாரதியின் தமிழ்த் துரோகம் என்ற என் தழுவல் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

நன்றி,
ஒளிர்ஞர்

உயிர்நேயம் said...

கட்டுரையைப் படித்தேன் நண்பரே.

என் தளத்துக்கும் வாருங்கள்.

பாரதியின் தமிழ்த் துரோகம் என்ற என் தழுவல் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

நன்றி,
ஒளிர்ஞர்

எட்வின் said...

வணக்கம் நண்பர் செம்மலர் அவர்களே,
எனக்கும் இந்த ஏமாற்றம் உண்டு, தமிழர்கள் தான் தமிழை கொலை செய்கிறார்கள் எனவும் கூறுவேன்.
அர்னால்ட் எட்வின் என ஆங்கில பெயரை வைத்துக் கொண்டு நான் இப்படி சொல்கிறேன் என சிலர் வினவலாம். என்ன செய்வது நான் பிறக்கும் போது என்னால் இயன்றிருக்குமானால் தமிழிலேயே வைத்திருப்பேன்.பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

I think Malayalees will save Tamil.
Check this,..
http://www.youtube.com/watch?v=QHqqTVA6iZs

http://www.youtube.com/watch?v=l2HFp-uSE98

http://www.youtube.com/watch?v=TVUq1C-MP8Y

Krithika.