நகரத்தின் நெரிசலான கடைவீதி ஒன்றில் அழகான இளம்பெண் தன் காதலனிடம், "நான் உன்னை எல்லாம் லவ் பண்றேன் தெரியுமா,எப்பவுமே உன் நினைப்பு தான்" என்று சொல்லி விட்டு தன் மார்பின் மேல் வைத்து அழுத்திக் கொண்டு கைபேசியை வைத்து 'என்னோட நெஞ்சு துடிப்புல உன் பேரு கேக்குதாடா,செல்லம்' என்று சுற்றி இருப்பவர்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் , ..ம்ம்... அந்த காதலர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் காதலை பொது இடங்களில் எப்படி எல்லாம் வெளிப்படுத்துகிறார்கள் பாருங்கள்!
இதைப்பற்றி நண்பனிடம் பேச்சுவாக்கில் கூறினேன்.
இதனை பொருட்படுத்தாமல் , "டேய்,இதெல்லாம் சும்மா. நான் போன வாரம் என்னோட பையனை கூப்பிட்டு படம் பார்க்க போனேன். கூட்டம் அதிகமாக இருக்கவும் மேல பாக்ஸ்க்கு போயிட்டேன். அங்க பார்த்தா,ஒரு நாலு ஜோடிடா. படம் ஆரம்பிச்ச உடனே அவங்க வேலைய ஆரம்பிச்சிட்டாங்க. சரி,இடைவேளை விட்டதுக்கு அப்புறம் போயிடுவாங்கன்னு பார்த்தா வெளிச்சம்னு கூட பார்க்காம ஒரு ஜோடி சீட் மேலேயே படுத்து ச்சே,என்னால பொறுக்க முடியாம ஏன்டா இங்க வந்து தொல்லை பண்றீங்க,இதுக்கு லாட்ஜுக்கு போக வேண்டியது தானனு சொன்னதுக்கு அப்புறம் அந்த ஜோடி எந்திரிச்சி போனாங்க .பார்த்தா காலேஜ் படிக்கிறவங்க மாதிரி தான் இருந்தது."
திரை அரங்குகளில், பேருந்து நிலையங்களில், பேருந்தில், புகைவண்டிகளில், பூங்காக்களில், கோயில்களில் , பிரவுசிங் சென்டர்களில், கடற்கரை ஓரங்களில் இது போன்று பிறர் கவனத்தை சிதைக்கும் நிகழ்வுகள் அதிகமாகவே நடக்கின்றன. காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. காமம் அதை விட மேலான மனிதனின் அடிப்படை உணர்ச்சி. அது தனிப்பட்ட,அந்தரங்கமான விசயம்.அதை பொது இடத்தில் செய்வது என்ன வகையான கலாச்சாரமோ ? பண்பாடோ? இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் பணம் வைத்து இருப்பவன்,பண்ணை வீட்டிலும் பெரிய ஹோட்டல்களிலும் உடல் தேவைகளுக்கு பெண்களை இழுத்துக் கொண்டு செல்கிறார்கள். மற்றவர்கள் எங்கு போவார்கள்? கைபேசி வந்த பின்னர் தொடர்பு கொள்ள முடிந்தாலும்,தனிமைக்கு புகலிடம் தேடி அலைகிறார்கள். இதற்கு மும்பை,புனே, கொல்கட்டா போல தனியாக விபச்சார விடுதிகளை இங்கும் வைத்து தொலைத்து விடலாம். யாருக்கு தெரியும்,குடிக்க டாஸ்மாக் தொடங்கிய அரசு ஒருநாள் இதற்கும் அனுமதி கொடுக்கலாம். என்ன கலைஞர் குடும்பம்,இதையும் ஒரு தொழிலாக எடுத்து செய்யாமல் இருந்தால் சரி.
10 comments:
இப்போ இவை ரொம்ப அதிகரித்து விட்டன..இவர்களை செல்ஃஃபோனில் படம் எடுத்து ரசிக்கவும் ஒரு கூட்டம் அலைகிறது
உண்மை. வருகைக்கும்,கருத்துக்கும்மிக்க நன்றி சதீஷ் குமார்.
விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி,அய்யா.
பகலில் ஆணின் முதுகில் நன்றாக ஒட்டிக்கொண்டு செல்லும் யுவதிகள்...ஒரு முறை தெருவில் செல்லும் சிறுவர், சிறுமியரை பார்த்தல் நன்று. அவர்கள் கவனம் சிதற இவர்கள் காரணம் ஆக வேண்டுமா?
ஆமாங்க,சிவகுமார். இதை எவருக்கும் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவர்களாக உணர்ந்து திருந்தினால் தான் உண்டு. கருத்துக்கு நன்றி.
டைட்டிலில் வில்லங்கம்.. பதிவில் சமூக நிகழ்வின் அங்கம்.. நீட் போஸ்ட்
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க,சிபி. ஆமாங்க,தலைப்பில் ஒரு உள்குத்து இருக்கு.
Solrathu ellam sarithanga... Ana veetla TV pottu familyoda pappinga..Same scenes are coming there too with yours hero or role model..Oru comment irukkathu pothitu papinga...chinna pillaikalaoda vera pappiknga...ana beach la, park la, theatre la yaro pannuna athukku karuthu kanippugal...Panam irukkiravan lodge pottu velai pakkuran...
Veetukkul naalu suvarukkul nadappathu veru,pothu veliyil nadappathu veru.
Post a Comment