இன்று அவன் வாழ்க்கையில் நிரம்பவும் மகிழ்ச்சி பெற்றவனாக இருந்தான். அதிகாலையில் விரைவாக எழுந்த போதும், அதற்குரிய களைப்பு இல்லாமல் உற்சாகமாக இருந்தான்..இதற்கெல்லாம் காரணம் நேற்று அவனுக்கு வந்த மின்அஞ்சல் தான். அவனுக்கு வெளிநாட்டு வேலை கிடைத்து விட்டதாகவும், அதற்கு தேவையான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று அவன் வேலைக்குச் செல்லப் போகும் மேலாளார் அனுப்பி இருந்தார். மேலும்,விசா கிடைக்கும் வரை இப்போது பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை விட்டுவிட வேண்டாமென்று கரிசனமாகவும் கூறி இருந்தார்.. (இவன் தான் இப்போ வேலையே பாக்கிறது இல்லையே, அப்புறம் எங்க விடுறது?? ) ..
மருத்துவப் பரிசோதனை முடிந்து வேலை கிடைப்பது உறுதியாகும் வரை வீட்டில் வாய் திறப்பது இல்லை என்று ஒரு கொள்கை முடிவு எடுத்து இருந்தான்.. ("இல்லாட்டி இப்பவே தூரம்,தொலைவு எல்லாம் எதுக்குப்பா,பேசாம இங்கயே வேலை பாருப்பா.. கை , கால் சுகமா இருந்தா போதும்,காசு பணம் பின்னாடி சம்பாரிச்சுக்கலம்னு வீட்டில லாவணி பாட ஆரம்பிச்சுடுவாங்களே." )
வங்கியில் இருந்த இரண்டாயிரம் சொச்சத்தையும் சுரண்டி எடுத்து திருச்சிக்கு வண்டி ஏறினான்.. வண்டியில் கூட்டம் அவ்வளவா இல்ல.. ஒரு பொண்ணும் வண்டியிலே இல்ல..சரி,விட்டு தள்ளு..திருச்சியில் போயி நல்ல பிகருகளை சைட் அடிப்போமே, சன்னலோரத்தில் உக்காந்து பராக்கு பார்த்துக்கிட்டே திருச்சி போயி இறங்கியாச்சி..
ஊர் கந்தக பூமியா! அனல் கொதியா கொதிக்குது.. பசி வேற வயித்தை கிள்ளுது.. காலையில வீட்டுல அம்மா சொல்ல சொல்ல கேக்காம சாப்பிடாம வந்தது தப்புன்னு மரமண்டைக்கு உதித்தது..சரி,நிறைய சாப்பிட்டு மெடிக்கல் பண்ணும்போது வயிறு ஏதாவது ஆகிட்டா என்ன பண்றதுன்னு ஒரு வடை,டீ மட்டும் அடிச்சிட்டு ஆஸ்பத்திரிக்கு போனான்..
ஆஸ்பத்திரிக்கு உள்ள போனா, சந்தைக்கடை மாதிரி ஒரே கூட்டம்.. ஒரு கேரளா நர்ஸ் ஒருத்தி , " பாஸ்போர்ட் கொடுங்க, பணம் 2000 ,போட்டோ கொடுங்க" வாய் வலிக்காமல் கத்திக்கொண்டே இருந்தாள்.. அனைவரும் அவளை பார்த்து சலுவா ஒழுக விட்டபடியே அவளிடம் போய் அவள் கேட்டதை கொடுத்தனர்..(ம்ம்.. ஒண்ணும் மோசமில்ல, கொஞ்சம் கறுப்பா இருந்தாலும் முலை,கிலை கொஞ்சம் எடுப்பா இருக்கிறதால பாக்கலாம்).. அவனவன் பணத்தை கட்டிட்டு போயி செத்த பிணம் உக்காந்து இருக்கிற மாதிரி வரிசையா உக்காந்தாங்க.. கொஞ்ச நேரத்துல ஒடிசலாக ஒரு செவிலி வந்து அனைவரையும் ஒவ்வொரு ஆளா வரச் சொல்லி யூரின், ரத்த அழுத்த,பாடி ஸ்கேன் எடுத்தாள்.. அப்புறம் ஒரு 10 நிமிஷம் கழிச்சு வந்து, 'எல்லாரும் மூணு மணிக்கு வந்து ரிசல்ட் வாங்கிட்டு போங்க' என்றாள்..
மணி இப்போது தான் 12 ஆகி இருந்தது. 3 மணி வரைக்கும் இந்த ஊர்ல எப்படிடா பொழுதைப் போக்குறதுனு தெரியாம யோசிக்கும் போது அவளிடம் இருந்து ஒரு மிஸ்டு கால் வந்தது.. இந்நேரத்துல எதுக்கு அவ கூப்பிடுறா, ஒரு வேளை காலேஜ்க்கு போகலையா? இப்படி நினைத்துக்கொண்டே அவளுக்கு போன் அடிச்சான்.. (கொஞ்ச நேரம் கடலைய போடுவோம்..நமக்கும் நேரம் ஓடுன மாதிரி இருக்கும்) ..
"என்னடா செல்லம், இந்நேரத்துல! காலேஜ்க்கு போகலையா? "
"இல்லைடா பார்த்தி ,அப்புறம் உனக்கு ஒரு ஆச்சரியமான செய்தி. எங்கே சொல்லு , பார்ப்போம்"
"என்னா ,ரோட்டுல எவனும் உன்னையப் பார்த்து ஜொள்ளு விட்டானா, இல்ல உனக்கு உங்க வீட்டுல யாராவது மாப்பிளை பார்த்து இருக்காங்களா? "
"போடா பொறுக்கி, அதெல்லாம் இல்லைடா..நான் இப்போ திண்டுக்கல்ல இருக்கேன், நீ எங்கடா இருக்க? நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"
"அடி சக்கை, நான் இப்போ திருச்சியில ஒரு வேலையா இருக்கேன்மா .. ராத்திரி 7 ,8 மணிக்கெல்லாம் வந்துடுவேன்.. "
" நான் உன் மேல எவ்ளோ ஆசையா இங்க வந்தேன் தெரியுமா, நீ என்னடானா? "
"சரிடா , தங்கம்,கோவிச்சுக்காத.. நான் வேலை முடிஞ்ச அடுத்த நிமிஷம் உன் முன்னாடி நிப்பேன்டா!"
இவனுக்கு மனம் ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.. ஒரு மாதமாக அவள் இவனிடம் பேசவில்லை. இன்று அவளாக கூப்பிடுகிறாள்.. வெளிநாட்டுக்கு வேறு போக போகிறோம்.
எப்போடா,மூணு மணி ஆகும்,ரிப்போர்ட் வாங்கிட்டு ஊர் பக்கம் போயி சேரலாம்.. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு திட்டம் போட்டுக்கிட்டு உக்காந்து இருந்ததில் 3 மணிக்கு மேல் ஆனது தெரியவில்லை.. ஒரு வழியாக 3 .15 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு போய்க் கொண்டு இருந்தான். எதிரில் வந்தவர்களிடம் "என்னங்க அண்ணா , ரிப்போர்ட் தராங்களா" என்று கேட்டான். அவருக்கு பக்கத்தில் வந்த சின்ன பையன் போல் இருந்த ஒருத்தன் இவனை மேலும் கீழும் பார்த்துக்கொண்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து "சீக்கிரம் போங்க பாஸ், உள்ளே ஒரு முக்கியமான டெஸ்ட் பண்றாங்க". இவன் உள்ளே நுழைவதை பார்த்து அந்த நர்ஸ், "ஏன் இவ்வளவு லேட்" என்று கோவிப்பது போன்ற பாவனையில் "டாக்டர்,வெயிட் பண்றார் , சீக்கிரம் உள்ளே போங்க" என்றாள்.. (பெண்கள் மூஞ்சியை கோணல் ஆக்கினாலும் ,இவனுக்கு உறைக்காது)
உள்ளே அவதி,அவதியாக நுழைந்த இவனைப் பார்த்து டாக்டர், "பேண்டை கழட்டு" என்றார்..
இவனுக்கு எதுக்குடா இந்த ஆள் அவுக்க சொல்றார்னு தெரியாம பொறுமையா கழட்டினான்.(நல்லா வேலை ஜட்டி போட்டுட்டு வந்தோம்!)
"ஜட்டியை கொஞ்சம் கீழே இறக்கு"
இவன் கொஞ்சம் வெட்கப்பட்டுக்கிட்டு இறக்க யோசித்தான்.. கொஞ்சம் மெதுவாக கீழே இறக்கினான்..
டாக்டர் கடுப்பாகி, "நல்லா கீழ இறக்கி விடுயா " என்று சொல்லிக்கொண்டே அவன் ஜட்டியை பிடித்து கீழே இறக்கி விட்டார்.. இப்போது முழு நிர்வாணமாக அவர் முன்னே நின்றான்..
அவனுடைய உறுப்பானது மயிர்கற்றைகள் நீங்காமல் காடு போலே நிரவி கிடந்தது.(தெரிஞ்சு இருந்தா செரைச்சிட்டாவது வந்து இருக்கலாம்) டாக்டர் அவனை மேலும் உற்று நோக்கினார்.பின்னர் மண்டையை ஏதோ காணாததை கண்டு விட்டவர் போலவே நெற்றியை சுருக்கிக்கொண்டு ,"சரி,போ..போ.. என்றார்." (அப்பாடா, தப்பிச்சோம்டா,. சாமி. இப்படி குறுகுறுனு பாக்கிறானே")
உடுப்பு எல்லாத்தையும் மாட்டிக்கொண்டு வெளியே வந்தான்.. (இவன் ஆம்பளையா, இல்ல பொம்பளையா இல்ல திருநங்கையானு பாக்கணும் போல. அப்போ தான் இவனுக்கு புரிஞ்சது.)தான் உள்ளே நடந்து கொண்டதை நினைத்து வெட்கம் அடைந்தான்.. நர்ஸ்,இவனையே பார்த்து சிரிப்பதாக இவனுக்குள் மனதிற்குள் தோன்றி இவனை நிம்மதி இல்லாதவனாக ஆக்கிக்கொண்டு இருந்தது.
4 மணி வாக்கில் அந்த நர்ஸ் மறுபடியும் வந்தாள்.. அவள் கையில் பல ரிப்போர்ட்கள் இருந்தது..உடனே அங்கு இருந்த பத்து,பதினைந்து ஆட்களும் ஏதோ பரபரப்புக்கு ஆட்பட்டவர்கள் போல எழுந்து நின்றனர். ஒவ்வொரு ஆளா பேர் வாசிச்சு கொடுத்துக்கிட்டே இருக்கா, இவன் முறை இன்னும் வரவே இல்லை..இன்னும் மூன்று பேர் மட்டுமே இருந்தார்கள்..
"ஒரு 5 நிமிஷம் பொறுங்க, " சொல்லிட்டு அவள் மறுபடியும் உள்ளே ஓடினாள்.. அவன் பக்கத்தில் இருந்த இருவரும் கோபத்தின் எல்லைக்கு சென்று "நாங்க இனி கோயம்புத்தூர் போகணும்,சீக்கிரம் கொடம்மா" என்றார்கள்.. அவனிடம் புலம்ப ஆரம்பித்தார்கள்..
பத்து நிமிடம் கழித்து அந்த டாக்டர் வந்தான்.. "இதில் பழனி யாருப்பா? உனக்கு ஹார்ட்ல பிரச்னை இருக்கு. அதுனால நீங்க வெளிநாட்டுக்கு போக முடியாது."
பழனி "சார் ,நீங்க பெரியவர்.. நீங்க அது மாதிரி சொல்ல கூடாது.. நான் இந்த வேலைக்கு போறதுக்காக ஏஜென்ட்கிட்ட ஒரு லட்சம் கொடுத்து இருக்கேன்.. நான் அங்க போயி வேலை பார்த்து தான் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்,, கொஞ்சம் மனசு பண்ணுங்கயா?"
"நான் ஒண்ணும் பண்ண முடியாதுப்பா, வேணும்னா ஒரு ரெண்டு மாசம் கழிச்சு உடம்பை நல்லா தேத்தி வச்சிட்டு வாங்க ,அப்போ பார்ப்போம்"
சரி அடுத்த ஆளு, "செல்வராஜ். உங்களுக்கு எய்ட்ஸ் அறிகுறி இருக்கு.. அதுனால உங்களுக்கும் ரிப்போர்ட் கொடுக்க முடியாது." சுற்றி நின்ற அனைத்து கண்களும் , செல்வராஜ் மேல் வட்டமிட்டது.செல்வராஜுடைய கண் இருட்டுகட்டிகொண்டு வந்தது.அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை..சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தான்.அவனை ரூமில் அட்மிட் பண்ண சொல்லி டாக்டர் சொன்னார்..
இப்போது இவனுக்கு உண்மையிலே கை,கால் வேர்த்து கொட்ட தொடங்கியது.. "நமக்கு ஏன் ரிப்போர்ட் இன்னும் வரல, நமக்கும் ஏதோ நோய் இருக்குமே, ஒழுங்காத் தானா இருக்கோம் நம்ம, என்னடா நடக்குது சாமி இங்க " என குழம்ப தொடங்கினான்.இவனை கண்டுகொள்ளதவர் போல டாக்டர் உள்ளே போயி விட்டார். இவனுக்கும் அங்கே மயக்கம் வரும் போல இருந்தது.டாக்டரை கூப்பிட்டு நம்மளா கேட்டா , அவர் உனக்கும் எதாவது நோய் இருக்குனு சொல்லிட்டா ,என்ன பண்றது.. பேசாமா ரிப்போர்ட் வாங்காம ஊருக்கு ஓடி விடலாம் என தோணியது..
அப்போது அவள் அரக்க பறக்க ஓடி வந்து" இந்தாங்க,உங்க ரிப்போர்ட்.. கம்ப்யூட்டர் தகராறு பண்ணிடிச்சு..அதான் லேட்..நீங்க பிட்" .. இவனுக்கு அவள் சொன்னது எதுவும் காதில் விழுகவே இல்லை... கொடுத்ததை வாங்கி அவளுக்கு நன்றி கூட சொல்லாமல் வெளியேறினான்..
இங்ஙனம் இவனுக்கு ரிப்போர்ட் கிடைத்த சந்தோசம் மறந்து போய் அவர்கள் இருவரின் நிலை குறித்து வருந்தி நடந்தான்.. அப்போது அவன் நண்பனிடம் இருந்து போன் வந்தது.
"என்னடா பார்த்தி ,எங்க இருக்க? "
"திருச்சியில"
'அங்க என்ன,மெடிக்கல் முடிஞ்சதா?"
"எல்லாம் முடிஞ்சு போச்சுடா .. "
"ஏன்டா,வருத்தமா சொல்ற? என்னாச்சுடா ? எப்போ ஊருக்கு வர்ற? "
"இல்லைடா ராஜேஷ் , நான் ஊருக்கு இனிமேல் வர்றதா இல்ல.. எனக்கு எய்ட்ஸ் அறிகுறி இருக்குனு சொல்றாங்கடா . நான் இனி எங்கயாவது போறேன்.இதை யார்கிட்டயும் சொல்லிட வேண்டாம்..முக்கியமா எங்க வீட்டுல! "
"டேய்,கிறுக்கன் மாதிரி உளறாதடா. நேரா ஊருக்கு வா.இப்போவெல்லாம் எய்ட்ஸ்க்கு சிகிச்சை இருக்குனு சொல்றாங்கடா. "
பேசிக்கொண்டு இருக்கும்போதே அலைபேசி பேட்டரி குறைஞ்சு அணைந்து போனது.ராஜேசிடம் ஏன் இப்படி பேசினோம்? எது இவனை இது மாதிரி பேச தூண்டியது? அவளை ராத்திரி பார்த்து அதுக்கு அப்புறம் ஊருக்கு போக முடியுமா என தெரியாததால் இப்படி ஒரு இல்லாத ஒரு பொய்யை கூற வேண்டியதாயிற்று.. இல்லாட்டியும் அவன் ராத்திரி படம் பார்த்திட்டு ஊருக்கு போகலாம்னு சொல்லுவான்.சரி,பரவாயில்லை.நாளைக்கு அவனை நேரில் பாக்கும் போது சொல்லிக்கலாம்.. ஒண்ணும் நினைச்சுக்க மாட்டான்,அவன் நல்ல பையன்..
அடுத்த 2 மணி நேரத்தில் திண்டுக்கலை எட்டி விட்டான் . வேறு எங்கும் செல்லாமல் மஞ்சு வீட்டுக்கே சென்றான். அவள் வீட்டில் யாரும் இல்லை.அவள் மட்டும் தனித்து இருந்தாள். இவனை கண்டதும் முகமலர்ச்சியோடு உள்ளே கூப்பிட்டு தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவள் எப்போதும் போல இல்லாமல் மிகவும் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தாள். குடித்து முடித்தவுடனே இவன் ஏதோ சொல்ல வாய் எடுத்தான்.. அவள் அதற்கு சமயம் கொடுக்காமல் அவனருகில் வந்து முத்தம் கொடுத்தாள்.. அது அந்த நேரத்தில் அவனுக்கு மிகவும் தேவையாகவும், ஆறுதலாகவும் இருந்தது.. பின்பு இருவருக்கும் பேச நேரம் இருக்கவில்லை. முதன்முறையாக மனம் மட்டுமில்லாமல் உடல்கள் இரண்டும் பேசிக்கொண்டன. அவர்களின் விருப்பம் எதையும் அது தேடாமல் அதன் போக்கில் இயங்கி கொண்டு இருந்தது. அவள் இன்றமிழ்ந்த தாமரை மலர் போலவும், இவன் தீப்பிழம்பை கக்கும் சூரியன் போலவும் தோன்றினான்.
ராஜேஷ் அன்று இரவு 10 மணி வரை "பார்த்தி, வந்துவிட்டானா" என அவனுடைய வீட்டுக்கு சென்று அடிக்கடி கேட்டுக்கொண்டு இருந்தான்.. அவன் வீட்டிலும் "என்னப்பா விஷயம், இந்நேரத்துல அவனை தேடுற? அவனும் எங்க போனானோ தெரியல, போனும் போக மாட்டேங்குது" .முதலில் ராஜேஷ் ஒன்றுமில்லப்பா என சமாளித்து பார்த்தான்.. பின்னர் பார்த்தி ஏதாவ்து பண்ணி விட்டால் ,இவங்க பாவமே என எண்ணி 'அப்பா' என்றான்.. அவர் 'என்னப்பா' என்றார்.
ராஜேசுக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை.பின்னர் மனைதை திடப்படுத்திக்கொண்டு நாலு மணிக்கு அவன் கூறிய விஷயத்தை மென்றி,முழுங்கி கூறினான். அவனுடைய அப்பா அதிர்ச்சியில் உறைந்தார். சிறிது நேரத்துக்கு இருவரும் எதுவும் பேசாமல் இருந்தனர்.
பின்னர் அவர் சுதாரித்துக்குக்கொண்டு "சரிப்பா,இப்பவே அவன் நண்பர்களுக்கு எல்லாம் சொல்லி , அவன் எங்க வந்தாலும் அங்கேயே தங்க வைக்கச் சொல்லுப்பா.நம்மளும் காலையில வரைக்கும் பார்ப்போம். பார்த்தி, ஏன் இப்படி பண்ணினான் ? நாங்க தான் அவனுக்கு இருக்கோம்ல ,பார்த்துக்க மாட்டோமா? "என்று தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பத் தொடங்கினார்.
ராஜேஷ், அவன் நண்பர்கள் அனைவருக்கும் விசயத்தை கூறாமல் அவனை அங்கு வந்தால் பிடித்து வைத்து இருக்குமாறு சொல்லியும் ,சிலருக்கு சேதி அனுப்பியும் வைத்தான். அதன் பின்னரும் மனம் சமாதானம் அடையாமல் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டு அவன் வீட்டுக்கு சென்றான்.. எதற்கும் இருக்கட்டும் என்று அவனுடைய எண்ணுக்கும் ஒரு செய்தி அனுப்பினான்.. முன்தினம் அவன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை கூறி மறுநாள் வீட்டுக்கு வர வேண்டும் என செய்தி அனுப்பி தூங்கச் சென்றான். தூக்கம் தான் வரவில்லை.
(நம்ம ஆளு தான் அங்க குஜாலா இருக்கானே, மத்தவங்க பாடு அவனுக்கு எங்க தெரிய போகுது?அவ வீட்டுக்கு வந்தப்பவே போனை ஆப் பண்ணி சார்ஜ் போட்டான். சார்ஜ் ஆச்சா என்னானு , அவனுக்கு எங்க தெரியும்? அவர் தான் பயங்கர முக்கியமான வேலையில இருக்கார்ல? )
அவள் தான் காலையில் முதலில் எந்திரித்து அவனை எழுப்பினாள்.. " அப்பா ,அம்மா 8 மணிக்கு வந்துடுவாங்க.சீக்கிரம் எந்திரிச்சு கிளம்புங்க".அவன் போனை ஆன் செய்து விட்டு கழிவறைக்கு சென்றான்.அவன் உள்ளே சென்ற உடனே அவன் போன் வந்தது.யார் இவனுக்கு இந்த நேரத்துல போன் பண்றா,அவன் வீட்டில இருந்து வந்ததை பார்த்திட்டு அவள் அதை எடுக்கவில்லை.அவனுக்கு ரெண்டு சேதி வந்து இருந்தது.'அவனுக்கு என்னதான் வருதோ' என ஆர்வக்கோளாறில் இன்பாக்சில் இருந்த செய்தியை பார்த்த உடனே அவளுக்கு தலைசுற்றியது.அதை பார்த்த சில நொடிகளில்,ராஜேஷ் போன் பண்ணினான்.. அதை எடுத்து விட்டு,இவள் எதுவும் பேசாமல் நின்றாள். "டேய்,வெங்காயம்.. ஏன்டா இப்படி இருக்க. இந்த நோய் வந்தா ஒண்ணும் பிரச்னை இல்லைடா,உங்க வீட்டுக்கும் சொல்லிட்டேன்..நேரா வீட்டுக்கு வாடா..உங்க வீட்டுல அழுகிறாங்க ,பாவம்டா. " .
இவள் எதுவும் பேசாமல் திக்பிரமை பிடித்தவள போல நின்றாள். அவன் அப்போது தான் கழிவறையை விட்டு வெளியே வந்தான்.அவள் நினைவு தடுமாறி கட்டி இருந்த சேலை தலைப்பு நழுவ விட்டு, அவனை கட்டி அணைத்தாள். இருவர் ஆடும் ஆட்டம் மறுபடியும் தொடங்கியது.நல்லபாம்பும்,சாரைப்பாம்பும் ஒன்றை ஒன்று பின்னிப்பிணைந்து கிடைப்பது போல புணையலில் திளைத்தனர் .
பின்னர் அவர்கள் எழுந்திரிக்கவே இல்லை.
வந்து பார்த்த அவளது பெற்றோர்களுக்கு இருவரின் உயிரற்ற சடலங்கள் மட்டுமே கிடைத்தது..
பார்த்தியின் பெற்றோர் அவனை தேடிக்கொண்டே இருந்தார்கள்..

No comments:
Post a Comment