Friday, March 27, 2009

அங்குமிங்கும் அலைகிற மனசு

கைபேசியில் நேரம் 10 மணியை தாண்டி விட்டு இருந்தது..டவுனுக்கு செல்லும் பேருந்தை பிடிக்க வேண்டுமே என சட்டையை மாட்டி கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான்..அவதி , அவதியாக சாப்பிட்டும் சாப்பிடாமலும் அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டு ஓடினான். அப்படி அவன் அங்க ஓட்டமும் , நடையுமா போறதால அவனுக்கு அங்க பெரிய வேலை இருக்கும்னு நீங்க நினைச்சா தப்பு.. அவன் ஓடி போகும் வழியில் எதிரே வந்த பெரிய மனுசன் ஒருத்தர் , என்னா மாப்பிளை , சௌக்கியமா ,எங்கயோ கிளம்பிட்ட போல, அப்படினார்.. இவனுக்கு தான் ஒரு வேலையும் இல்லையே, ஒண்ணும் இல்ல சும்மா டவுன் வரைக்கும் ஒரு வேலை போயி வரேன்னு சொன்னான்..சரிடா மாப்பிளை கிளம்புன்னு சொல்லிட்டு அவர் துண்டை உதறி விட்டு கிளம்பிட்டார்.. இவன் போயி பஸ் ஸ்டாப்ல நிக்கிறான்..ஆள் யாரையுமே அங்க காணோம்.ஒரு வேலை இவனுக்கு சந்தேகமா இருந்தது. பஸ் போயிறிச்சோ அப்படினு நினைச்சுகிட்டு பராக்கு பாத்துகிட்டு இருந்தான்.. அந்த வழியா போன ஒரு ஆள் கிட்ட பஸ் போயிடிச்சா அப்படின்னு கேட்டான்.. இன்னும் போகலைப்பா அப்படின்னு சொல்லவும் பயலுக்கு சந்தோசமா இருந்தது..
அப்போ அந்த ரோட்டுல ஒரு பொண்ணு , ஒரு கை குழந்தையை வச்சுக்கிட்டு போச்சு..அந்த நேரம் பாத்து ஒரு பொம்பளையும், ஒரு வயசான ஆளும் பஸ் ஸ்டாப் க்கு வந்தாங்க..அவங்க யாருன்னு இவனுக்கு தெரியல.. கொஞ்ச தூரம் தாண்டி போன அந்த பொண்ணு " நீ இன்னொரு மகன் சின்னவன் தானே" னு கேக்க, இவனும் ஆமானு மாடு தலையாட்டுற மாதிரி ஆட்டினான்.. கேட்டதுல எதுவும் விஷமம் இருந்த மாதிரி தெரியல..அப்போ பஸ் ஸ்டாப்ல அப்போ தான் வந்து நின்ன பொம்பளை எதார்த்தமாக " ஏன்ம்மா அதுமாதிரி கேக்கிற, அதை கேட்டு நீ என்னா பண்ண போற" அப்படின்னு கேட்க.. உடனே அந்த பொண்ணு மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு " ஆமா , கல்யாணம் கட்டிக்கலாம்னு கேட்டேன்,சும்மா அங்கிட்டு போவீங்களா ? தெனாவட்டா கேக்க , இந்த பொம்பளையும் சும்மா இருக்க மாட்டாம " இந்த ஊர் பொம்பளைகளே இப்படி தான் , வாய் கொழுப்பு அதிகம் " அப்படின்னு திட்ட..அந்த பொண்ணு, இந்த பொம்பளைய " நீ எப்படி அது மாதிரி சொல்லலாம் , அவளே , இவளே " ஏக வசனத்தில் வசை மாறி பொழிய ஆரம்பிச்சு விட்டாள்.. இந்த பொம்பளைக்கு இப்போ தான் புரிய ஆரம்பிச்சது ..அய்யய்யோ, தெரியாம வாய கொடுத்தாச்சே , இப்ப எப்படி விட்டு கொடுக்கிறதுனு இதுவும் வாய்க்கு வந்தத எல்லாம் ஏசுது.. நம்ம ஆள் துடிய,துடிக்கிறான்..என்னடா இது, நம்ம இப்படி செவனேன்னு இருந்தாலும் நம்மள சுத்தி அடிக்குது, நம்ம என்ன சொன்னாலும் யாரும் கேக்க மாட்டங்களே, இப்போ என்னடா பண்றதுன்னு முழிக்கிறான்..தலயை போட்டு பிச்சுக்கிட்டான்.. இந்த பஸ் எழவும் வந்து தொலைய மாட்டேங்குது,என்ன பண்றதுன்னு யோசிக்கிறான்.. நேரம் ஆகி செல்ல செல்ல சண்டை இங்கே வலுக்கிறது , நல்ல வேலை அப்போ பஸ் வர அரவம் கேட்டது.. தப்பிச்சோம், புழைச்சோம்னு அதுல ஏறி பஸ்ல நின்னுட்டான்.. அப்பயும் அங்க சத்தம் குறைஞ்ச பாடில்லை.. அந்த பொம்பளையும் பஸ்ல ஏறின மாதிரி தெரியல..நிம்மதியே இல்ல.. இன்னும் அங்க என்ன நடக்குதுன்னு யோசித்து பார்த்தான்..

பேருந்து நகரம் நோக்கி விரைந்து கொண்டு இருந்தது..இவனுடைய நினைவு பின்னோக்கி நகர ஆரம்பித்தது.. அந்த பெண்ணின் முகம் மறுபடியும் இவன் மனதில் நிழலாடியது..ஆம், அந்த பெண் இவனுடன் சிறு வயதில் பள்ளிகூடத்தில் ஒன்றாக படித்தவள், காலபோக்கில் இவன் அந்த பொண்ணை மறந்து போயி இருக்கலாம்,படிக்கும் போதும் அவ்வளவு பழக்கம் கிடையாது. ஆகையால் இவன் மனதினில் அது யாபகத்தில் இல்லை.. தவிர, கிராமத்தில் உள்ள பெண்கள் விரைவிலே மணம் முடித்து கொடுத்து விடுகிறார்கள். நம்ம மனசுல நினைக்கிற பொண்ணுனா எப்பவும் மனசுல நிக்கும்.. சரி,இவன் ஏன் வேறு கோணத்தில் சிந்திக்கவில்லை..அந்த திருமணம் முடித்து போன பெண்கள் ஊருக்கு வரும்போது அவர்களுடன் படித்த பசங்களை காணும்போது ஏதேனும் பேச தோணி இருக்கலாம்.ஆகவே அப்பெண் கேட்டது தவறு இல்லை.. தவறு பஸ் ஸ்டாப்க்கு வந்த பெண்ணிடம் இருக்கிறது..அனால் அதற்க்காக அந்த பதில் மிகவும் கடிது,அப்பெண்ணை பொறுத்தவரை.. மேலும், இந்த ஊர் பெண்களை திட்டவும் இன்னமும் கோவம் அதிகம் ஆகி விட்டது, ஆகவே இதில் நினைக்க ஒன்றும் இல்லை , இதெல்லாம் சாதாரணம் என்று மனம் பக்குவப்பட்டது . நகரமும் வந்து சேர்ந்தது, .. ஒரு வேலையும் இல்லையே, என்ன பண்ணுவது என யோசித்தான்..சரி முதலில் ஒரு தேனீர் அருந்தி, வடையை சாப்பிடுவோம்.. காலைல வீட்டுலயும் சரியாய் சாப்பிடல, அதுனால கொஞ்சமா கட்டுவோம்னு நடந்து போனான்..

வடையை உருளை கிழங்கு குருமாவுல கொழப்பி அடிச்சு தின்னு , தேநீரை மடக்கு மடக்குனு எருமை மாடு கழனி தண்ணியை குடிச்சது போல குடித்து டம்ளரை கீழயே வைக்கும்போது அவன் மனதினில் வேறு ஒரு எண்ணம் வந்து தலை தூக்கியது.. " இதே கேள்வியை இவன் ஒரு பொண்ணிடம் கேட்டு இருந்தால் எப்படி எதிர் வினை இருந்து இருக்கும், அதற்க்கு எப்படி பதில் கூறி இருப்பான், என்னென்ன நடந்து இருக்கும் " இவ்வாறு யோசித்தான்.. சட்டென மறுபடியும் காலையில் நடந்தவை கண்ணாடி போல காட்டியது, இன்னும் என்ன அங்கு நடந்து கொண்டு கொண்டு இருக்குமோ என கலங்கினான். எதையோ கண்டு பயந்தவன் போல கையில் இருந்த கண்ணாடி டம்ளரை கீழே விட்டான், உடல் குப்பென வியர்த்தது.. சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது..

2 comments:

Jeya said...

Ezhuthu nadai innum merugetralam... Nadai alaipaivathu pol ullathu...

Nalla Muyarchi....

செம்மலர் செல்வன் said...

நன்றி,ஜெயா. முயற்சி செய்கிறேன்.