Tuesday, January 19, 2010

அவன் - அவள்

மற்ற நாட்களைப் போலவே இன்னும் பாயை விட்டு எழுந்திரிக்க மனமில்லாமல் அப்படியே உறங்கிக் கிடந்தான்.. அலறும் ஒலிபெருக்கிகளின் அவனை அசையக் கூட செய்யவில்லை.. போர்த்தியிருந்த போர்வைக்கருகில் அலைபேசி கத்தி அவன் உயிரை வாங்கிக் கொண்டு இருந்தது.. அதனை எடுத்துப் பேச சோம்பேறித்தனப்பட்டு வாயைப் பொளந்து கொண்டு கொட்டாவி விட்டான் .. பின்னர் ஏதோ ஒரு நினவு வந்தவனை போல அலைபேசியை எடுத்து அமுக்கி அதற்கு உயிர் கொடுத்தான்.. அவனை அறிந்த வட்டாரங்கள் வாழ்த்து சேதி அனுப்பியும் ,சிலர் அழைப்பும் விடுத்தது இருந்தனர்.. அவன் பிறந்து வாழ்ந்து கொண்டு இருப்பதையே உணராத அவனுக்கும் உலகம் அவன் வாழ்ந்து கொண்டு இருப்பதாக நம்பச் செய்து கொண்டு இருக்கின்றது..

பெயர் இல்லாத ஒரு எண்ணில் இருந்து ஒரு வாழ்த்து செய்தி வந்து இருந்தது. யாராக இருக்கும் என தெளிவாக யோசிச்சு குழம்பி அந்த எண்ணுக்கு கூப்பிட்டு யார் என்று கேட்டான்.. மறுமுனையில் இருந்து "அதுக்குள்ள என்னை மறந்தாச்சா ? " என ஒரு விசும்பும் பெண் குரல் கேட்டது.. இவன் யோசிச்சு ஒரு முடிவெடுக்கும் முன்னரே அவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.. வீட்டில் இருந்து கிடைத்த தேநீரை குடித்து விட்டு,பின்னர் நாறும் வாயை பற்பசை கொண்டு கொண்டு துலக்கி விட்டு வெளியில் கிளம்பினான்..ஏன் எனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது என்று தன்னையே இவள் நொந்து கொண்டாள்.. சிறு பிள்ளை முதல் கல்லூரி செல்லும் வரை வாழ்ந்த நாட்களை நினைத்து பெருமூச்சு விட்டாள் .. எல்லாம் அவனை பார்க்கும் வரைக்கும் தான் என்ற எண்ணி கொண்டாள்.. பால் உறுப்பில் இருந்து குருதி கொட்ட தொடங்கிய அந்த கணம் வரை எவரும் என்னுள் வியாபித்து இருக்கவில்லை.. என் அங்கங்கள் மேல் கள்ளத்தனமாக பார்வையை மேய விடும் " ஆண்மை " தனங்களின் மேல் ஒரு புன்னகையை உதறி எரிந்து விட்டு செல்லுவேன்.. இவ்வாறாக வாழ்க்கையானது மிகவும் சுவாரஸ்யமாகவும் , இனிமையாகவும் சென்று கொண்டு இருந்தது.. உடன் பிறந்தவள்கள் திருமணம் முடித்து என்னை விட்டு செல்லும் போது சிறிது தனிமை கிடைத்தது.. என்னுடைய மன வேட்கைகள் என்னை குத்தி கிழிப்பதாக இருந்தது..

அந்த தருணங்களில் எங்கள் வீட்டில் ஒரு போன் மட்டும் இருந்தது..ஏதேனும் ஒரு ஆண் குரல் வராதா, அதை எடுத்தி பேசி என் மோகம் தீர்க்க மாட்டேனா என என் நாட்கள் போய்கொண்டு இருந்தது.. அன்று ஒரு நாள் என் அக்காவை கேட்டு ஒருவன் பேசினான்.. அவன் குரலில் இருந்த வசியம் என்னை பிடித்து ஆட்டியது.. என் நிலை மாறி போனேன்.. பேசிய சில கணங்களிலே அவன் எனது சொந்தக்காரன் எனவும், என்னை கட்டி கொள்ளும் உரிமை உள்ளவன் எனவும் தெரிய வந்தது.. அதை அறிந்த உடன் எனது உடல் சில்லிட்டது.. அவனிடம் பேசுவதில் தவறு எதுவும் இல்லை என என் உள்ளம் கூறியது.. அனால் அவனோ என்னிடம் பேசுவதில் ஏதோ ஒரு தயக்கம் உள்ளவன் போல இருந்தான். சரி,நேரில் ஒரு முறை அவனை கண்டால் எல்லாம் சரி ஆகி விடும் என எனது சஞ்சலப்பட்ட மனதை தேற்றி கொண்டேன்..

இதற்கு இடையில் எனக்கு வேறு ஒரு நெருங்கிய சொந்தத்தில் எனக்கு ஒரு மாப்பிளை பார்த்து விட்டார் எனது அப்பா.. எனக்கோ இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.. நாட்கள் செல்ல செல்ல நான் அவனை பிரிந்து விடுவோனோ என ஏங்க தொடங்கினேன்..

எனக்கு இந்த கல்யாணம் , காது குத்து இதில்லெல்லாம் நம்பிக்கையே இல்லப்பா.. எவகிட்டயவது போனோமோ, நூறு இருநூறை கொடுத்து ஒரு அடி அடிச்சிட்டு வரணும் அதான் எண்ணம்.. எவன் இருக்கான் நமக்கு,கல்யாணம் பண்ணி.. இப்படியே வாழ்க்கை ஓடிடும்னு நினச்சேன்.. திடீரென இந்த சிக்கன் குன்யா காய்ச்சல் வந்து என் உயிரை எடுத்தது.. காசு இல்லாததல பக்கத்துல ஒரு நாயும் வரல.. அப்போ தான் நமக்கும் கல்யாணம் ஆகி குடும்பம் ஆனா நம்மை பார்த்துக்க ஒருத்தி இருப்பாள் அப்படிங்கிற எண்ணம் வந்தது..

முன்னாடி தொடுப்பு வச்சுகிட்ட ஒருத்தி கிட்ட ராத்திரி பூராம் புலம்பினான். ..அவ உனக்கென்னடா சீமை ராசா,உனக்கில்லாத பொண்ணா? வாயா . நான் பாக்கிறேன்.. எப்படியோ அந்த இரவு நீண்ட நாள்காணாத மோகத்தில் சுக போகமாக இருந்தனர்..

பின்னர் அவளே அவனுக்கு ஊரு பொண்ணை பார்த்து கட்டி வைத்தாள்.. " பொண்ணு சின்ன பொண்ணுடா , பார்த்து கவுரமா பொழப்பு நடத்திக்க" என்றாள்

அந்த நாளும் வந்தது.. அவளுக்கு அவளது "காணா புருசன்" மேலே நினவு இருந்தது.. அப்போது தான் அவளுக்கு அவளது இந்த புருசனும்,அவனும் நண்பர்கள் என தெரிந்தது... அந்த காணா புருசனிடம் அவளை அந்த சூழ்நிலையிலும் ஏற்று கொள்ளுமாறு வேண்டினாள்.. அவனோ அந்த மனநிலையிலே இல்லை.. திருமண வாழ்த்து அந்த காணா புருஷனே வாசித்தான்.. ..சரி,நம்ம தலை விதி அவ்ளோ தான் என எண்ணி இந்த புருசனுக்கே தலையை நீட்டினாள்..

கல்யாணம் முடிந்து மறுவீடு சென்றார்கள், நல்ல நேரம் கூடவில்லை, அவளுக்கு மாதவிலக்கு என அவனது முதலிரவு நடக்கவில்லை.. இவனும் அதை பற்றி பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை.. நம்ம இதுவரைக்கும் பாக்காத ஒன்னையா புதுசா பாக்க போறோம் நினைச்சுகிட்டு படுத்து தூங்கி நல்ல ஆக்கி போடுறதை சாப்பிட்டு பொழுதை போக்கினான்..

விருந்தும்,மருந்தும் முடிந்த பின்னர் பொண்டாட்டி கூட்டிக்கொண்டு அவன் வீட்டுக்கு சென்றான்.. அங்கு சென்று அவளை அசத்துவோம் என முடிவோடு இருந்தான்.. அங்கு போயும் சில , பல காரணங்களினால் அவனது ஆசை கை கூடவில்லை.. அவளும் அது,இது என சாக்கு போக்கு சொல்லி கொண்டு இருந்தான்.. இரண்டு,மூணு நாள் கழித்து அவளது அம்மா வந்து இருந்தாள். இவனும் அதை பற்றி மறந்து விட்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினான்..வீட்டுக்கு வந்த அம்மாக்காரிக்கு தனது மகளும்,மருமகளும் ஒட்டுறவாக இல்லை என அறிந்து கொண்டாள். மகளிடம் "என்னாடி , பிரச்னை உங்களுக்குள்ள " கேட்டதுக்கு அவ, "ஒண்ணுமில்லமா, நாங்க நல்லா தான் இருக்கோம்" . சரி மருமகனிடம் நேரடியாக கேட்டு விடுவதென தீர்மானித்தாள். மகள் , எட்டு மணி ஆன பின்னும் புருஷன் வராததை கண்டு , " அம்மா,எனக்கு தலை வலிக்குது. அவர் வந்தா சாப்பாடு போட்டுடுமா" சொல்லிட்டு படுத்துவிட்டாள்..

மருமகன் வரும் வரை டிவியில் நாடகங்களை பார்த்து கொண்டு இருந்தாள்.. மருமகன், வந்த உடனே "எங்க அத்தை, உங்க மகள்" அப்படினான். அவ ஏதோ தலை வலிக்குதுனு சொல்லிட்டு தூங்கிட்டப்பா . சரி நீ கைய கழுவிட்டு வாப்பா, சாப்பிடுவ " என்றாள்.. அவன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, "மாப்பிளை , தப்பா நினைச்சுகாதீங்க, உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன சண்டை, அவ கொஞ்சம் சின்ன சிறிசு , கொஞ்சம் பார்த்துக்கங்க. நான் அவ கிட்ட சொல்றேன் , மாப்பிளை நீங்க என்னான்னு சொல்லுங்க " மருமகன் முதலில் சொல்ல தயங்கினான்.. பின்னர் மெதுவா கூறினான். " அத்தை, அவளுக்கு முலை கொஞ்சம் சின்னதா இருக்குனு சொன்னேன், அதுக்கு அவ கோவிச்சுக்கிட்டா ,வேற ஒண்ணுமில்லை, நான் பார்த்துகிறேன். நீங்க விடுங்க , இதெல்லாம் சரியாய் போகும்"
சரி ,மாப்ளை , கோழி குழம்பு எப்படி இருக்கு, ருசியா இருக்கா என்றாள். கோழி மட்டுமில்லை அத்தை,நீங்க கூட நல்லா தான் இருக்கீங்க என்றான்.. இருவரும் சட்டென ஒரு பாதையில் பயணிப்பது போல தோன்றியது.. எங்கு தொடங்கியது என தெரியாமல் வேறு ஒரு உலகத்தில் புகுந்தனர். நினைவுகளை விட்டு வெகு தூரம் சென்று விட்டு இருந்தனர்.

காலையில் மகள் எழுந்து அவர்கள் கோலத்தை பார்த்த பின்னர் அவளுக்கு தலையே வெடிப்பது போல இருந்தது.. இருவர் மேலும் கல்லை போட்டு கொன்று விடலாம் என்றுயோசித்தாள்..பின்னர் அந்த எண்ணத்தை விட்டு மறுபடியும் போயி தூங்கினாள்..
மாமியாரும்,மருமகனும் காலை எழுந்த பின்னர் அவர்கள் நிலை உணர்ந்து வெக்கம் அடைந்தனர். மகள் இன்னும் எந்திரிக்கவில்லை என தெரிந்து மனசுக்குள் ஒரு நிம்மதி பரவியது.. உடனே இந்த வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என தோன்றி அன்றே புறப்பட்டு விட்டாள். மகளுக்கு புத்திமதி சொல்லவோ, அவள் முகத்தை நிமிர்ந்து பாக்கவோ தைரியம் இல்லாமல் தன்னிலை நொந்து விரைந்து வெளியேறினாள்.. மகளும் " ஏன் இப்பவே இவ்வளவு அவசரமா ஓடுற, " அப்படி என ஒரு பேச்சுக்கு மட்டும்கேட்டாள்..
இவனுக்கும் இதுநாள் வரை எல்லா தேவடியள்களிடம் போகும் போது இல்லாத குற்ற உணர்வு இப்போது கொஞ்சம் உண்டானது. பொண்டாட்டியிடம் நெருங்குவதற்கும் தயக்கம் கொண்டான். அவளும் எப்போதும் போல சிரிக்கவும் இல்லாமல் , அழுகவும் இல்லாமல் வாழ பழகி கொண்டாள்.

இன்று அவன் ரொம்ப குடித்து விட்டு வீட்டுக்கு வந்தான். வரும்போது, ஒரே எங்கடி போயிட்ட , திருட்டு முண்டை, என் பிரண்ட் வந்து இருக்கான், வந்து சோறு போடுடி என்று அதிகாரம் செய்தான். அவள் ஏதும் பேசாமல் இரண்டு தட்டில் சாப்பாட்டை போட்டு விட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டாள். இவன் தன்னை நண்பன் முன்னால் அவமானப்படுத்தி விட்டது போல உணர்ந்தான்.வந்தவனுக்கு சாப்பாட்டை போட்டு அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்து , ஏண்டி இப்படி இருக்கா, நான் உனக்கு என்ன குறை வச்சேன். என் மேல உனக்கு ஆசையே இல்லையா? என் கூட படுக்க உனக்கு இச்டம் இல்லையா?
இவள் பதிலுக்கு ஒன்றும் பேசவில்லை.. அவனுக்கு கோவம் அடித்து இருந்த போதையில் தலைக்கு ஏறியது. எட்டி அவளை ஒரு உதை உதைத்தான். அவள் அப்படியே பெருங்குரல் எடுத்து அழாமல் விசும்பினாள். என்ன,ஒரு நெஞ்சழுத்தம் , வாயை திறக்க மாட்டேங்கிற . எந்த புருசனை மனசுல நினச்சுகிட்டு இருக்கா என்று காட்டு கத்தல் கத்தினான். அவள் அதற்கும் ஒன்றும் பேசாமல் வாயை மூடி மௌனியாக இருந்தாள். அவள் மேல் எச்சியை துப்பி விட்டு அப்படியே படுக்கையில் விழுந்து உறங்கி போனான்..

இவள் வீடு மூலை மேல் ஒடுங்கி கிடந்த கோழி குஞ்சு போல பேந்த பேந்த விழித்து உக்காந்து இருந்தாள். இங்கு நடப்பதை அம்மாவிடம் சொல்லவும் அவளுக்கு தோணவில்லை. இந்த உலகத்தில் அவளுக்கு யாரும் இல்லை என்ற உண்மை புலப்பட்டது.. அந்த "காணாபுருஷன்" எண்ணமும் இடையில் வந்து போனது. ஏனோ அவனை நினைத்த உடன் மனம் சிறிது லேசாகி பறப்பது போல இருந்தது.
இவன் இங்கே குறட்டை விட்டு உறங்கி விட்டு கொண்டு இருப்பதை கண்டு தீடீர் ஆவேசம் பிறந்தது. போதையில் புலம்பும் அவனுடன் வாழ்க்கை நடத்துவதில் அர்த்தம் இல்லை என கத்தி எடுத்து அவன் விரை கொட்டைகளை அறுத்து எறிந்தாள் . அப்போது அவன் போட்ட கூச்சல் அவளுக்கு பேரானந்தமாக இருந்தது. எதையோ சாதித்தது போலவும், அனைவரையும் வெற்றி கண்டது போல ஆட தொடங்கினாள்.. அவளின் அந்த கோலம் காளி தேவியே வந்து ஆடுவது போலவும் இருந்தது.. அவன் கொட்டை போனது தெரியாமல் காதை மட்டும் தான் அவள் வெட்டி விட்டாள் என வீட்டை வெளியே ஓட தொடங்கினான். ஊர்சனம் கூடி அவளை ஊரை விட்டு விரட்டிய போதும் அவள் ஒரு எல்லையில்லா இறுமாப்பில் இருந்தாள்..

இவனுக்கு இங்கே வீட்டில் பெண் பார்க்கும் படலம் தொடங்கி இருந்தது. நல்ல சாதி மகள், அளவான குடும்பம், அடக்கமான படித்த பெண் என தேடுதல் வேட்டை நடந்து கொண்டு இருந்தது..
ஏதோ ஒரு நினைவு வந்தவனை போல அந்த எண்ணுக்கு மறுபடியும் அழைத்தான்!!

No comments: